உயிர்வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தின் ஏற்பாட்டில் “உயிர் வாழ்வதற் கான உரிமையை அடிப்படை உரிமை யாக உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் தொடராகவே யாழிலும் இப் போராட் டம் நடத்தப்பட்டது.
யாழ் மத்திய பேருந்து முன்பாக நடை பெற்ற இப் போராட்டத்தில் நாட்டில் உயிர் வாழ்வதற்காக உரிமையை அடிப் படை உரிமையாக வேண்டுமென்று கோசம் எழுப்பினர்.
இதோ போன்று முல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துச் செயற்பட்டதற்கும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இதற்குரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.