728x90 AdSpace

<>
Latest News
Sunday, 29 September 2019

வித்தியா கொலையாளிக்கு இன்னொரு கொலை வழக்கிலும் மரணதண்டனை விதிக்கப்பட்டது!

புங்குடுதீவு மாணவி வித்தியாசை சீரழித்து கொன்ற காமுகன் பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், செல்வராசா கிருபாகரன் என்பவருக்கும் யாழ் மேல் நீதி மன்றம் இன்று (30) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்த வழக்கிலேயே இருவரும் குற்றவாளிக ளாக அறிவிக்கப்பட்டனர். அத்துடன் எதிரி கள் இருவரும் இணைந்து சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரின் உடமையில் இருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள் ளையிட்டமைக் காக 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல் நீதிமன்றம், 

இருவரும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தவும் அதனைச் செலுத்தத் தவறின் 10 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டது. 

யாழ்.தீவகம் புங்குடுதீவில் 2010ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சோம சுந்தரம் சுப்பிரமணியம் என்பவர் கொலை செய்யப்பட்டார். மது அருந்து வதற்காக அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்குச் சென்ற அவர் மாலை சடல மாக மீட்கப்பட்டார். 

சம்பவத்தையடுத்து புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் செர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார், செல்வராசா கிருபாகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட் டனர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வித்தியா கொலையாளிக்கு இன்னொரு கொலை வழக்கிலும் மரணதண்டனை விதிக்கப்பட்டது! Rating: 5 Reviewed By: Thamil