728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64

விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளரான பொட்டம் மான், அந்த பிரிவை பெரும் அணி யாக வளர்த்தெடுத்திருந்தார்.

பல பிரிவுகள், அணிகள், பிரதேசங் கள், பணிகளின் அடிப்படையில் பல அணிகளை உருவாக்கியிருந்தார். அவற்றை ஓரளவு சுயாதீனமான அமைப்பாகவும் உருவாக்கினார். அணிகளை வழிப்படுத்துவது, ஒருங் கிணைப்பது, பெரிய திட்டங்களை தீட்டுவது போன்றவற்றைத்தான் பொட்டம் மான் செய்தார். 

பிரிவுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை. இதே காலப் பகுதியில் புலிகளின் இரண்டாவது தலைவர் என்ற உத்தியோகப்பற்றற்ற பொறுப்பும் பொட்டம்மானிடம் இருந்தது. இதனால் அவரின் கீழ் செயற்பட்ட வர்களை சற்று சுயாதீனமாக செயற்படும் விதமான பொறுப்புக்களை வழங் கினார் பிரபாகரன். இந்தப் புள்ளியில், ஒரு பெரும் சறுக்கல் ஒன்று விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவில் நடந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம்- பொதுமக்களுடன் தொடர்புடைய அந்த சறுக்கலை பகிரங்கமாக ஏற்று, புலிகள் மன்னிப்புக் கோரினர். 

பலர் அறிய வாய்ப்பில்லாத அந்த தகவல்களை இந்த பகுதியில் தருவோம். புலிகளின் அந்த சறுக்கல், காந்தி என்ற புலனாய்வு பிரிவு பொறுப்பாளரின் வடிவில் ஏற்பட்டது. புலிகளின் உள்ளக புலனாய்வு பொறுப்பாளராக இருந்த காந்தியின் செயற்பாடுகள், எப்படி அவரது வீழ்ச்சி அமைந்தது என்பதை இந்த பகுதியின் பின்பகுதிகளில் பார்க்கலாம்.

உள்ளகப் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வன்னியை பாதுகாப்பது. வன்னிக்குள் நுழையும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, இராணுவ புலனாய்வு முகவர்களை கைது செய்வது, வன் னிக்குள் நடக்கும் தாக்குதல்களை முறியடிப்பது, பாஸ் நடைமுறை, சிறைச் சாலை, விசாரணை என புலனாய்வுத் துறையின் மிக முக்கிய செயற்பாடு களை அந்த பிரிவு கையாண்டது. 

இந்த இடத்தில், உள்ளக புலனாய்வு பிரிவு பற்றிய தகவல்களிற்கு சிறிய இடை வெளி விட்டு, பால்ராஜ் பற்றிய தகவல்களிற்கு செல்கிறோம். எவ்வளவு புகழ் பெற்ற மனிதர்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்வில் சில கறுப்பு பக்கங்கள் இருக்கும். அந்த பக்கள் மட்டுமே அந்த ஆளுமையின் அடையாளம் அல்ல. அந்த ஆளுமையின் புகழை தகர்ப்பவையும் அல்ல.

மனிதர்களாக பிறந்த எல்லோரிடமும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். மனிதர் களை புரிந்தவர்களிற்கு, பலவீனம் ஒரு விவகாரமாக தெரிவதில்லை. இதை ஏன் குறிப்பிடுகின்றோம் எனில், பால்ராஜ் தொடர்பான சில பலவீனமான பக்கங்களிற்குள் நுழையப் போகின்றோம். 

அதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்றை யாராலும் திரிக்க முடி யாது. மாபெரும் தளபதியான அவரைப்பற்றிய முழுமையான வரலாற்றை எழுத வேண்டுமெனில், எல்லா விடயங்களையும் பேச வேண்டும். அப்படி யானால்தான் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

பால்ராஜை இழிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இதை பதிவு செய்ய வில்லை. மாறாக, பால்ராஜ் என்ற ஆளுமையை புரிந்துகொள்ள இது உதவும். பால்ராஜ் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்வதில்லையென்ற முடிவில் இருந்தார்.

எனினும், பின்னர் வரதா என்ற விடுதலைப்புலிகளின் மகளிர் அணியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர் மகளிர் தாக்குதலணி, கடற்புலி, நிதித்துறை பிரிவுகளில் செயற்பட்டவர். பிரபாகரனின் நெருக்கமான உறவுப் பெண். 

அவர் கடற்புலிகளில் இருந்த சமயத்தில் பால்ராஜை திருமணம் செய்தார். எனி னும், திருமணமான சிறிது காலத்திலேயே இருவருக்குமிடையில் கசப்பு ஏற் பட்டு பிரிந்து விட்டனர். பிரபாகரனின் உறவுப்பெண்ணான பால்ராஜின் மனைவி வரதா, சூசையுடன் நீண்டகாலம் பணிபுரிந்தவர்.

இருவருக்குமிடையில் அறிமுகமும் இருந்தது. பின்னர் ஒருநாள் சூசையிடம் சென்ற வரதா, சில மனக்கசப்பான தகவல்களை சூசையிடம் சொன்னார். அப் பொழுது கண்ணீர் விட்டு அழுதார். இனிமேல் தன்னால் பால்ராஜூடன் சேர்ந்து வாழவே முடியாதென சொல்லி, நிதித்துறை கடமைக்குச் சென்றார். 

சூசை இந்த விவகாரத்தை பிரபாகர னிடம் சேர்ப்பித்தார். வரதா பிரபகர னின் உறவுக்கார பெண். நல்ல அறி முகம் உடையவர். உறவுமுறைக்கு அப்பால், அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், திருமண வாழ்வில் புரிந்துணர்வுடனும், முன்னுதாரண மாகவும் நடக்க வேண்டுமென நினை ப்பவர் பிரபாகரன். ஆனால் மனிதர்களின் மன இயல்புப்படி, மணமுறிவும், மன முறிவும் இயல்பு. ஆனால் ஒப்பீட்டளவில் புலிகளின் தம்பதிகளிற்குள் அது வந்தது குறைவு. தினேஷ் மாஷ்டர், சு.ப.தமிழ்செல்வன், பால்ராஜ் போன்ற முக் கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட சிலருக்குத்தான் அமைப்பிற்குள் இந்த சிக்கல் வந்தது. 

தம்பதிகளிற்குள் பிரச்சனை ஏற்படும் சம்பவங்களில் பிரபாகரன் கடுமையான எதிர்வினையாற்றுவார். சு.ப.தமிழ்ச்செல்வனிற்கும் மனைவிக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது, தமிழ்ச்செல்வனை நேரில் சந்திப் பதையே பிரபாகரன் தவிர்த்தார்.

தனக்கு நெருக்கமானவர்கள், தளபதிகள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக வாழ வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு. தமிழ்ச்செல்வன் தம்பதி ஒற்றுமையான பின்னரே, தமிழ்செல்வன் மீண்டும் பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்த சிறிது நாளிலேயே அவர் விமானத் தாக்குதலில் மரண மாகி விட்டார். 

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64 Rating: 5 Reviewed By: Bagalavan