728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 66

தனது தளபதிகள்- இயக்கத்தை வழி நடத்துபவர்கள்-
தூய நடத்தையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் உறுதி யான நிலைப்பாடுடையவர் என்பதை கடந்த பாகங்களில் விளக்கமாக குறிப் பிட்டிருந்தோம். இதற்கு இன்னொரு உதாரணம் கருணா விவகாரம்.

கருணா விவகாரத்தை இந்த பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதில், கருணா பிளவு விவகாரத்தின் அடிப்படையிலிருந்து குறிப்பிட்டிருக்கிறோம். கருணா பிளவு என்பது தத்துவார்த்தரீதியில் ஆரம்பித்ததல்ல, அது சப்தகியில் இருந்து ஆரம்பித்தது என்பதை விளக்கமாக சொல்லியிருந்தோம். மட்டக்க ளப்பு படையணியான அன்பரசி மகளிர் தளபதியாக, கிழக்கின் மகளிர் தளப தியாக இருந்தவர் சப்தகி (சாளி). கருணா- புலிகள் பிரிவின் முதல் முடிச்சு சப்தகி விவகாரத்தில்தான் ஆரம்பித்தது. 

படையினர் வன்னியை இரண்டாக பிளக்க மேற்கொண்ட ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிரான சமரிற்காக வன்னிக்கு வந்த கிழக்கு படையணிக ளுடன் சப்தகியும் வந்து வவுனியா முனைகளில் யுத்தத்தில் ஈடுபட்டார். அன்பரசி மகளிரணியை அவர்தான் வழிநடத்தினார். அந்த சமயத்தில் சப்தகி மீது பாலியல் பலவீனம் உள்ளவர் என்ற குற்றச்சாட்டு அமைப்பிற்குள் எழுந் தது. இது பின்னர் விவகாரமாகியபோது, சப்தகியை அமைப்பிலிருந்தே நீக்கு மாறு பிரபாகரன் கட்டளையிட்டிருந்தார். இதை கருணா செயற்படுத்த வில்லை. 

சப்தகியை அன்பரசி படையணி தளபதியிலிருந்து நீக்கி, தன்னுடன் வைத்துக் கொண்டார். பின்னர், கோபத்துடன் கருணாவை வன்னியை விட்டு மட்டக் களப்பிற்கு அனுப்பியபோது, சப்தகி விடயத்தையும் சுட்டிக்காட்டித்தான் அனுப் பியிருந்தார் பிரபாகரன்.

ஆனால், தனது தளபதி மீது வேறு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தன்னுடன் அன்பாக, விசுவாசமாக வளர்ந்த தளபதிகளை சந்திக்காமல், சற்றுத் தள்ளி வைப்பதே, அவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்துவதற்காக ஒரு வழி முறையாக பிரபாகரன் கருதினார். 

கருணாவிற்கு வேறு தண்டனை அளிக்காமல், அவரை வன்னியை விட்டு அனுப்பியதும், பிரபாகரனின் “மனரீதியான“ தண்டனைதான். பால்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சையான பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப் புக்களை பிரபாகரன் தவிர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்.

பால்ராஜிற்கும் நீரிழிவு, இரத்த அழுத்தம், கால் பாதிப்பு என நோய்களும் உச்ச மடைய ஆரம்பித்து விட்டது. இதனால் பால்ராஜ் இயல்பாகவே முன்னணி செற்பாட்டிலிருந்து ஒதுங்க வேண்டியதாகி விட்டது. இந்த இடத்தில் பால்ரா ஜின் சில இயல்புகள் பற்றி குறிப்பிட வேண்டும். அமைப்பில் இருந்த தன்னம் பிக்கை மிக்க, தனது திறனில் நம்பிக்கை அதீதமாக கொண்ட, மிகுதியான திறன் கொண்ட தளபதி அவர். 

விடுதலைப்புலிகளின் தாக்குதல் வீடியோக்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒரு விடயத்தை கவனித்திருக்கலாம். தாக்குதலிற்கு முன்பாக பேராளிகள் மத்தியில் தளபதிகள் உரையாற்றுவார்கள். அப்போது எல்லாத் தளபதிகளும் “தலைவர் திட்டமிட்டார்… தலைவரின் நுணுக்கமான திட்டமிடல்… தலைவர் எதிர்பார்க்கிறார்“ என்றுதான் பேசுவார்கள். பொட்டம்மான், சொர்ணம், தீபன், பானு என யாராக இருந்தாலும் இதுதான் பேச்சுப்பாணி. பால்ராஜ் மட்டுமே வித்தியாசமானவர். 

“நாங்கள் திட்டமிட்டுள்ளோம்… நுணுக்கமாக திட்டமிட்டுள்ளோம்… இயக்கம் எதிர்பார்க்கிறது“ என்பார். இதன் அர்த்தம் பிரபாகரனை தவிர்த்து பால்ராஜ் செயற்பட முனைந்தார் என்பதல்ல. பிரபாகரனிற்காக உயிரையும் கொடுக்க பால்ராஜ் தயாராகத்தான் இருந்தார். இதற்கு ஓயாத அலைகள் 2, குடாரப்பு தலையிறக்கத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட விதங்கள் சான்று. நிகழ்வுகள் மற்றும் பிரத்தியேக சந்திப்புக்களில் பிரபாகரனுடன் தளப திகள் கூடும் சந்தர்ப்பங்களில், பிரபாகரன் போகும்வரை அனைத்து தளபதி களும் காத்திருப்பார்கள். 

அவர் போனபின்னர் தான் தளபதிகள் கிளம்புவார்கள். பால்ராஜ் மட்டுமே விதி விலக்கு. எங்கு போனாலும் தனது பணிகள் முடிந்தால் உடனே கிளம்பி விடு வார். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அங்கு நின்றாலும், தனது பணி முடிந்தது, இனி அவசியமில்லைதானே என்பதை பிரபாகரனிமே உறுதி செய்துவிட்டு கிளம்பிவிடுவார். அதுபோல சந்திப்புக்கள், நிகழ்ச்சிகளிற்கு முன்னரே சென்று அலட்டிக்கொள்ளும் மனோபாவமும் அற்றவர். மிகக்குறிப்பிட்ட நேரத்திற்கே செல்வார். 

சென்றதும், எதிர்ப்படும் தளபதிகளிடம் அப்போதைய கள நிலைமைகளை பற்றி ஓரிரண்டு வசனம் மட்டுமே பேசிக்கொள்வார். வேறு எதையும் பேசுவ தில்லை. பிரபாகரனிற்கு அளவிற்கு அதிகமாக ஆராத்தி எடுக்க அவர் விரும்பு வதில்லை. விசுவாசமென்பது செயற்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்ப வர். அதனால்தான் பிரபாகரன் குறிப்பிடும் நெருக்கடியான களங்களை பால் ராஜ் பொறுப்பேற்பார். ஓயாதஅலைகள் 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றினார்கள். 

1998 செப்ரெம்பரில் இது நடந்தது. இதே வருடத்தின் தொடக்கத்தில்- பெப்ரவரி- கிளிநொச்சி மீது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றிய ளிக்கவில்லை. இந்த அனுபவத்தில் இருந்து, ஓயாதஅலைகள் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. கிளிநொச்சிக்கு பின்னால் வால்போல் நீண்டிருந்த பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பின்தள உதவிகளை கட்டுப்படுத் தாத வரை கிளிநொச்சியை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த புலிகள், பரந்த னில் ஒரு பலமான தடுப்பை ஏற்படுத்தி, பின்தள உதவியை தடுக்க திட்டமிட்ட னர். அது சாதாரண பணியல்ல. இறுக்கமான இராணுவ அரணிற்குள் இரகசிய மாக ஊடுருவி அரண் அமைப்பது, இரண்டு பக்கத்தாலும் நடத்தப்படும் இரா ணுவத் தாக்குதலை முறியடிக்க வேண்டும். 

அப்படி முறியடித்தால்தான் அந்த அணி உயிர் தப்பலாம். இந்த நடவடிக் கையை வெற்றிகரமாக செய்தால்தான் கிளிநொச்சி சமர் வெற்றியடையும். தாக்குதல் திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொருவரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தனிற்கு அண்மையில் ஊடுருவி கூறாக்கும் நடவடிக் கையை செய்ய முடியுமா என பிரபாகரன் கேட்க, மறு பேச்சில்லாமல் சிரித்த முகத்துடன் பால்ராஜ் ஏற்றுக்கொண்டார். கிளிநொச்சியில் படைமுகாம் மீதான தாக்குதலை தளபதி தீபன் வழிநடத்தினார். 

பரந்தன் ஊடறுப்பை தளபதி பால்ராஜ் வழிநடத்தினார். யாழ்செல்லும் படை யணி, மாலதி படையணி, மற்றும் சில ஆண்கள் படையணி பிரிவுகளுடன் பால்ராஜ் அணி, கிளிநொச்சிக்கும் பரந்தனிற்கும் இடையில் இரவோடு இரவாக ஊடுருவி நிலையெடுத்தது. வெட்டவெளியான பிரதேசம். காப்பு, மறைப்பு எது வும் கிடையாது. விடிந்தால் செல் அடித்தே இராணுவம் துவம்சம் செய்து விடும். காப்பை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காக, உரப்பை, மண்வெட்டி என்பவற்றை அந்த அணி கொண்டு சென்றது. 

கிளிநொச்சி மீது நள்ளிரவிற்கு பின்னர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்னர் உரப்பைகளில் மண்மூட்டை அமைத்து அதை அரணாக்க வேண்டும். அருகி லுள்ள படையினருக்கு சத்தம் கேட்கவும் கூடாது. பால்ராஜின் அணி அதை செய்தது. கிளிநொச்சி மீது தாக்குதல் ஆரம்பித்ததும் பரந்தனிலிருந்து படையி னர் உதவி அணிகளை அனுப்ப முயன்றனர். கிளிநொச்சியிலிருந்து காய மடைந்தவர்களை பரந்தனிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டது. சம நேரத்தில் இரண்டு முனைகளிலும் புலிகளின் அணி மோதியது. 

பரந்தனில் இருந்து ஒரு சிப்பாய் கூட கிளிநொச்சிக்கு செல்ல முடியவில்லை. கிளிநொச்சியில் படைமுகாம் வீழ்ந்து, பரந்தனின் முன்தள படை முகாமும் வீழ்ந்த பின்னர் எஞ்சிய படையினர் புலிகளின் தடுப்பரணை உடைத்துக் கொண்டு ஆனையிறவுப் பக்கமாக தப்பியோட முயன்றனர். ஆயிரக்கணக் கான படையினர் இறப்பவர் போகட்டும், எஞ்சுபவர்கள் போய் சேர்வோம் என புலிகளின் அரணை நோக்கி ஓடினார்கள்.

கிளிநொச்சி பக்கத்தில்- அவர்களின் பின்பக்கத்தில் அப்படி அடி. தப்பியோடி வரும் படையினரை குருவி சுடுவதைப் போல போராளிகள் சுட்டு வீழ்த்தினார் கள். அலை அலையாக படையினர் தப்பி வருவதால் ஒரு கட்டத்தின் மேல் சுடச் சுட படையினர் போராளிகளை நெருங்கினார்கள். 

இருதரப்பும் கைகலப்பிலும் ஈடுபட்டுமளவிற்கு நெருக்கமான மோதல் நடந் தது. புலிகளின் அரணை கைப்பற்ற படையினர் ஓடிவரவில்லை. அரணை கட ந்து ஆனையிறவு பக்கமாக தப்பியோடிச் செல்லவே முயன்றனர். லெப். கேணல் செல்வி ஒரு பகுதியில் அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார்.

அவர் வழி நடத்திய பக்கத்தால் படையினர் அதிகமாக தப்பிச்செல்ல முயன்ற னர். காரணம், பெண் போராளிகளின் பக்கத்தால் தப்புவது இலகு என நினைத் தனர். பெண்களின் நிலைப்பக்கங்களில் படையினர் “சொறிவது“ வழக்கம் தான். இந்த நினைப்பே அந்த முனையில் படையினருக்கு பேரிழப்பைக் கொடு த்தது. 

செல்வியின் அணி மரண அடி கொடுத்தது. செல்வி நின்ற நிலையிலும் கடும் மோதல் நடைபெற்றது. ஒருகட்டத்தில் செல்வியின் நிலையில் நின்றவர்களி டம் வெடிபொருள் தீர்ந்து விட்டது. படையினர் நெருக்கமாக வரத் தொடங்கி விட்டனர். தனது நிலையை கடந்து படையினர் தப்பிச்செல்லக்கூடாது என் பதே செல்வியின் ஒரே நோக்கம். அந்த சமயத்தில் புலிகளின் குட்டிசிறி மோட் டார் அணி, மணிவண்ணன் ஆட்லறி அணி என்பன சிறப்பாகச் செயற்பட தொட ங்கி விட்டன. 

களமுனை போராளிகளும், பின்னணி மோட்டார் அணிகளும் தொழில்நுட்ப ரீதியில் இணைக்கப்பட்டு, களமுனைக்கு மோட்டார் செல் தேவையெனில் தேவையான இடத்தில்- ஒரு இஞ்சி நகராமல்- மிக துல்லியமாக எறிகணை யால் தாக்கும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். ஜி.பி.எஸ் தொழில்நுட் பத்தை பாவித்து புலிகள் இதனைச் செய்தனர்.

தமது காவலரணிற்கு எதிராக படையினர் வந்தால், மோட்டார் அணியுடன் இணைப்பை ஏற்படுத்தி, படையினரின் தலையில் எறிகணையை வீழ்த்தும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். புலிகளின் இந்த வல்லமையை முறிய டிக்காத வரை யுத்தத்தில் வெல்ல முடியாதென்பதை உணர்ந்து, புலிகளின் ஆட்லறி எறிகணை கொள்வனவை இறுதியுத்த சமயத்தில் அரசு தடுத்திருந் தது. 

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 66 Rating: 5 Reviewed By: Bagalavan