முல்லைத்தீவு கரைக்கு புலிகள் எப்படி ஆயுதங்களை கொண்டு வருவார்கள் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.
கரையிலிருந்து சென்ற புலிகளின் விநியோக வண்டிகள்- கடற்புலிகளின் சரக்கு ஏற்றும் கலங்களை அப்படித் தான் குறிப்பிடுவார்கள்- ஆழ்கட லிற்கு சென்று, ஆயுதக்கப்பலில் இரு ந்து பொருட்களை மாற்றுவது அனே கமாக நடு இரவாகத்தான் இருக்கும். அல்லது சற்று விடியும் பொழுது.
மாலையில் முல்லைத்தீவு கரையில் இருந்து புறப்பட்ட கடற்புலிகள் ஆழ் கடலை சென்றடைய குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது தேவைப் பட்டது.
கடற்புலிகளின் தாக்குதல் கலங்கள் அதிவேகமானவை. சரக்கு ஏற்றும் கலங்கள் அப்படியல்ல.
அவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட வேகமே உள்ளது. ஆயுதங்களை ஏற்றிய பின், மீண்டும் திரும்பும்போதுதான் சிக்கல். அனேமாக விடிகாலையில் இலங்கை கரைக்கு ஓரளவு அண்மித்து வந்திருப்பார்கள்.
முல்லைத்தீவுதான் கடற்புலிக ளின் உயிர்நாடியென்பது கடற்படைக்கும் தெரியும்.
அதனால் இரவுபகலாக அந்த பகுதியில் கண் வைத்திருப்பார்கள். திருகோண மலை, வெற்றிலைக்கேணி, காங்கேசன்துறையில் கடற்படையின் ரடார் நிலையங்கள் இருந்தன. முல்லைத்தீவு, கொக்கிளாய், பருத்தித்துறை, காங் கேசன்துறை கடற்பகுதிகளில் புலிகளின் படகுகள் இறங்கினால் உடனே முழு கடற்படை முகாமிற்கும் எச்சரிக்கை பறக்கும்.
ஆனால் இரவில் கடலில் இறங்க கடற்படை தயாராக இருக்காது. இதுதான் புலிகளிற்கு சாதகமானது. இந்த சாதகமான இரவை ஆயுத விநியோகத்திற் காக பாவித்தார்கள். ஆனால் இரவுக்குள் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கரை க்கு வர முடியாது.
விடிந்த பின்னர்தான் கரைக்கு வரலாம்.
அதிகாலையில் பருத்தித்துறை கடற் பரப்பில் கடும் மோதல், டோறா படகு மூழ்கடிப்பு- இப்படியான செய்திகள் அடிக் கடி அப்பொழுது வெளிவரும். ஏன் அதிகாலையில் கடலில் சண்டை நடக்கி றதென நீங்கள் யோசித்திருப்பீர்களா?
விடயம் இதுதான்.
முல்லைத்தீவில் இருந்து கடற்புலிகள் ஆழ்கடலிற்கு பருத் தித்துறை மார்க்கமாக சென்றது கடற்படைக்கு தெரிந்ததும், விடிகாலையில் அங்கு தாக்குதல் படகுகள் அனுப்புவார்கள். அனேகமாக காங்கேசன்துறையில் தரித்து நிற்கும் டோறா படகுகளைத்தான் அனுப்புவார்கள்.
சில சமயங்களில் காங்கேசன்துறையில் டோறா படகுகள் நிற்பதில்லை. ரோந் திற்கு திருகோணமலை சென்றிருக்கும்.
காங்கேசன்துறையில் இருந்தும், திருகோணமலையில் இருந்தும் வரும் கடற்படையை மறிக்க கடற்புலிகளின் சண்டை வண்டிகள் தயாராக நிற்கும்.
புலிகளின் பல்குழல் பீரங்கி
தரைப்படையில் ஏழு பேர் கொண்ட அணி செக்சன், இருபத்தொரு பேர் கொண்ட அணி பிளாட்டூன் என்ற கட்டமைப்பில் இயங்குவதை போல, கடற் புலிகளின் கட்டமைப்பில் தொகுதி என ஒரு கட்டமைப்பிருந்தது. ஒரு தொகுதி யின் நான்கைந்து சண்டைப் படகுகள் இருக்கும்.
அதை வழிநடத்த ஒரு கட்டளை கப்பல் இருக்கும். சில கரும்புலி படகுகளும் இருக்கும்.
கடற்புலிகளின் தளபதி சூசை அனைத்து நடவடிக்கையையும் ஒருங்கிணைப்பார்.
தளபதிகள் சிறீராம் (இசைப்பிரியாவின் கணவர். இவர் சிலகாலம் ஆயுதக் கப்பலிலும் பணியாற்றியவர்), செழியன், கடல் போன்ற வர்கள் தான் தாக்குதல் அணிகளை வழிநடத்துபவர்கள்.
இவர்களின் கீழ் பல தொகுதி படகுகள் இருக்கும்.
விநியோக படகுகளின் பயணத்திற்காக பாதுகாப்பான இடத்தை ஒதுக்கி, அதற்குள் கடற்படையை நெருங்க விடாமல் தாக்குவது, முடியாமல் போகும் பட்சத்தில் கரும்புலி வண்டிகளை மோதுவதுதான் கடற்புலிகளின் உத்தி.
டோறா உள்ளிட்ட கடற்படையின் படகுகள் பெரியவை. கடலில் பெரிய இலக் காக இருக்கும். கடற்புலிகளின் படகுகள் சிறியவை. கடற்படையால் சுலபமாக இலக்கு வைக்க முடியாது.
ஆரம்பத்தில் காங்கேசன்துறை அல்லது திருகோணமலை கடற்படை தளம் ஒன்றில் இருந்துதான் கடற்படை தாக்குதல் படகுகள் வந்தன. கடற்புலிகளின் பலம் பெருகி, கடலில் நீண்டநேரம் தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்ற பின்னர், இருமுனைகளில் இருந்தும் கடற்படை தாக்கத் தொடங்கியது.
இதன் பின்னர்தான் ஈழப்போரில் மூர்க்கமான கடற்போர் ஆரம்பித்தது.
அனே கமாக 1998 இல் இருந்துதான் இப்படியான பரிமாணம் ஒன்றை கடற்போர் அடைந்தது. அப்பொழுது வன்னியில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டி ருந்தது.
புலிகளிற்கு கடுமையான ஆயுத தேவையிருந்தது. இந்த தேவையை கடற் புலிகள் ஈடுசெய்ய வேண்டும். அடிக்கடி முல்லைத்தீவில் ஆயுதங்கள் இறங் கின. இதனால் அடிக்கடி கடற்சண்டைகள் நடந்தன.
இதையடுத்து கடற்படை தாக்குதல் திறன் மேம்படுத்தப்பட்டது. எம்.ஐ தாக் குதல் உலங்குவானூர்திகளை கடற்படையுடன் இணைத்து நடவடிக்கையில் ஈடுபடுத்த ஆரம்பித்தது அப்பொழுதுதான்.
1996இலேயே அது ஆரம்பித்தாலும், 1998இல்தான் தேர்ச்சியான நடவடிக்கை களை பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்தது. எம்.ஐ உலங்குவானூர்திகள் கடற் புலி களிற்கு பெரும் தலையிடி கொடுக்க ஆரம்பித்தன.
வானிலேயே வெடிக்கும் ஒருவகை எறிகணைகளை எம்.ஐ 24 ஹெலி கொப்டர்கள் வீசும். கடலில் மறைப்பு இல்லாத நிலையில் நிற்கும் கடற்புலி களிற்கு இது பெரிய இழப்பை ஏற்படுத்தியது. கடற்படையின் இந்த உத்தியை முறியடிக்க வேண்டிய தேவை புலிகளிற்கு ஏற்பட்டது.
அப்பொழுது விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவுக்கு கடாபிதான் பொறுப் பாக இருந்தார். புலிகளிடம் என்ன வகையான ஏவுகணை இருக்கிறதென்பது இராணுவத்திற்கு பெரிய குழப்பம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் 1995இல் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தினர்.
இதை கடாபிதான் சுட்டார். அடுத்தடுத்து விமானங்களை சுட்டதால் அரசாங் கம் ஆடிப்போய் விட்டது.
பின்னர், 1997, 98, 99 களில் எம்.ஐ உலங்கு வானூர் திகள், சிவில் விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டன. சோவியத் ரஷ்ய தயாரிப் பான sam 7 strela 2 வகை ஏவுகணைகளால் அந்த தாக்குதல்களை புலிகள் நடத் தினார்கள்.
சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பு இது. சோவியத் உடைந்ததும், உக்ரேனில் தங்கிய பெருமளவு ஆயுதங்களில் இந்த ஏவுகணைகளும் ஒன்று. ஆனால் இயக்கங்களிற்கு இதை விற்க உக்ரேனியர்கள் தயாராக இல்லை. ஆனாலும் கே.பி எப்படியோ தலைகீழாக நின்று வாங்கி விட்டார்.
1992ஆம் ஆண்டு உக்ரேனில் இருந்து 20 ஏவுகணைகளை புலிகள் வாங்கி னார்கள். இவை பற்றிய விபரங்களை அடுத்தடுத்த பாகங்களில் குறிப்பிடுகின் றோம்.
அதுபோல 1997 அன் இறுதியில் கொக்கிளாய் கடற்பகுதியில் எம்.ஐ 24 ஹெலிகொப்டர் ஒன்றை கடாபி சுட்டுவீழ்த்தினார்.
sam 7 strela 2 தாக்குதலிற்கு பயன்பட்டது. புலிகளிற்கு இந்த ஏவுகணையை விற்று விட்டு, அரசாங்கத்திற்கு அதன் எதிர்ப்பு கருவிகளை விற்ற உக்ரேனின் வியாபார சாமர்த்தியத்தை பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.
கடற்படையுடன், எம்.ஐ உலக்குவானூர்திகள் கூட்டாக தாக்குதல் நடத்துவதை தடுக்க புலிகள் விரும்பினார்கள். உலங்குவானூர்திகளை அடிக்கடி சுட்டு வீழ்த் தினால் அடங்கி விடுவார்கள் என்பதுதான் புலிகளின் திட்டம். இதற்காகத்தான் கொக்குளாய் கடலில் முதலில் சுட்டார்கள்.
இதற்காக ஒரு பக்கா திட்டம் போட்டார்கள்.
திருகோணமலை கடற்படை தளப்பக்கமாக கடலில் ஒரு இடத்தில் கடற்புலிகளின் சிறிய படகொன்று அசை யாமல் நிலைகொண்டிருந்தது. அதில்தான் கடாபியும் இருந்தார்.
செம்மலை கடலில் இருந்து புறப்பட்ட கடற்புலி படகுகள் ஏதோ பெரிய தாக்கு தலிற்கு தயாராகுவதை போல கடலில் அப்படியும் இப்படியும் திரிந்தன.
திரு கோணமலை கடற்படையினர் இதை கவனித்துவிட்டு, தாக்குதல் படகுகளை யும், எம்.ஐ உலக்கு வானூர்தியையும் அனுப்பி வைத்தனர்.
கடலில் அசையாமல் நின்ற படகு- கடாபி இருந்தது- கடற்படையின் கண் காணிப்பில் படவில்லை. அதை யாரும் கவனிக்கவுமில்லை. செம்மலையிலி ருந்து புறப்பட்டு வந்த கடற்புலிகளை தாக்குவதற்கு கொக்குளாய் பகுதியில் உலங்கு வானூர்தி சுற்றிக்கொண்டிருந்தது.
அதாவது கடாபியின் தலைக்கு மேலே. கடாபி குறிபார்த்து சுடுவதில் எவ் வளவு கில்லாடியென்பதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறோம். தலை க்கு மேல் சுற்றிய உலங்கு வானூர்தியை விடுவாரா?
குருவியை போல சுட்டு விழுத்தினார்.
இதற்கு பின்னர் முல்லைத்தீவு, கொக்கிளாய் கடற்பரப்புக்களில் தொடர்ந்து சில உலங்கு வானூர்திகளை சுட்டு விழுத்தினார்கள். எல்லாமே ஆயுத விநி யோக சமயத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.
சில சமயங்களில் சறுக்கல் களும் வரும்.
புலிகள் முதன்முறையாக, பல்குழல் ஆட்லறிகளை வன்னியில் இறங்கிய நட வடிக்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
அது பருவமழையா, திடீர் கால நிலை மாற்றத்தால் ஏற்பட்ட மழையா என்பது சரியாக நினைவில்லை. கால நிலை சீரில்லாத சமயம். ஆயுதங்களை இறக்க இப்படியான சமயங்களையும் புலிகள் தேர்வுசெய்வதுண்டு.
காலநிலை சீரின்மை புலிகளின் படகுகளிற்கும் ஆபத்துத்தான். ஆனால், கடற்படையின் தொந்தரவின்றி ஆயுதங்களை இறக்க, அப்படியான சமயங் களை தேர்வு செய்வார்கள். மழை, கடற்கொந்தளிப்பின் மத்தியில் முல்லைத்தீவிற்கு அப்பால் சர்வதேச கடல் எல்லைக்கு சென்று ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு புலிகளின் விநியோக படகுகள் வந்தன.
பயங்கர கடற்கொந்தளிப்பு. வழக்கமாக விடிகாலையில் முல்லைத்தீவு கரையை அடையும் புலிகளின் படகுகள், அன்று மதியத்திற்கு பின்னர்தான் முல்லைத்தீவை அடைந்தன. வழக்கத்தை விட அன்று எம்.ஐ உலங்கு வானூர் திகள் புலிகளின் விநியோக, கடற்புலிகளின் தாக்குதலணிகளை தாக்கின.
எம்.ஐ உலங்கு வானூர்திகள் வந்தும், புலிகளால் அவற்றின் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை.
காரணம்- அன்று எப்படியோ புலிகளின் விமான எதிர் ப்பு அணி இருந்த படகை அடையாளம் கண்டு, அதன் மீது முதல் தாக்குதல் நடந்தது.
புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் இருந்த அகிலேஸ், கோணேஸ் போன்ற வர்கள் கடுமையான காயமடைந்தனர். அவர்களால் பதில் தாக்குதல் நடத் தவே முடியவில்லை.
(அகிலேஸ், ஆனந்தபுரம் BOX இல் மரணமானார். தளபதி கடாபி காயமடைந்த நிலையில், அகிலேஸின் மடியிலேயே படுத் திருந்தார்.
உட்கார்ந்திருந்த அகிலேஸ், எதிர்ப்பக்கமிருந்து வந்த துப்பாக்கி ரவை நெஞ் சைத் துளைத்து செல்ல, அப்படியே வீழ்ந்தார்)
இந்த சமயத்தில் கடற்படை முல்லைத்தீவில் ரோந்து, கண்காணிப்பை அதிகரித்து கடற்புலிகளிற்கு ஆயு தம் வருவதை தடுக்க முயற்சித்தது.
கடற்புலிகளின் இலக்குகள் அடையாளம் காணப்பட்டால், தாக்குவதற்கு உல ங்கு வானூர்திகள் உடனே கடலிற்கு வரும் விதமாக பலாலி, வவுனியாவில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடற்படையின் கூட்டு நடவடிக்கையை முறியடிக்க, புலிகளும் கூட்டு நடவ டிக்கைக்கு தயாராகினர்.ஜெயசிக்குறு சண்டை நடந்துகொண்டிருந்த காலம். ஆயுத வரத்து அவசியம். கடற்படையின் நெருக்கடியால் சில மாதங்கள் ஆயுத வரத்து இல்லை.
புலிகளிடம் இரண்டு ஆயுதக்களஞ்சியங்கள் இருந்தன. இரண்டும் இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ்தான் இயங்கியது. இரண்டும் விசுவமடுவிற்கு அப்பால் இருந்த காட்டிற்குள் இயங்கின.
பிரதான ஆயுத களஞ்சியம் சுயாகியின் கீழ் இயங்கியது. அடுத்தது, பரன் மாஸ் டரின் கீழ் இயங்கியது. ஆயுதக் களஞ்சி யங்களின் இருப்பு தீர்ந்து கொண்டு போவதாக அவர்கள் பிரபாகரனிற்கு அறிக்கை அனுப்ப தொடங்கினார்கள்.
அதேநேரம், ஆயுதம் ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று நிக்கோபர் தீவுகளில் மூன்றரை மாதமாக கட்டிவைக்கப்பட்டிருந்தது. எப்படியாவது ஆயுதங்களை இறக்குமாறு சூசைக்கு பிரபாகரன் கட்டளையிட்டார்.
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!