728x90 AdSpace

<>
Latest News
Thursday, 12 September 2019

கைதான புலிகளின் தளபதி தோல் உரித்து கொல்லப்பட்டார்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 34

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் கலகம் செய்து, தனிவழி செல்ல கருணா முடிவெடுத்ததன் பின்னணி, இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் பற்றி இந்த தொடரின் கடந்த அத்தியாயங் களில் விரிவாக எழுதியிருந்தோம். 


புலிகளை எதிர்த்து போரிட முடிவெ டுத்த கருணா, பின்னர் போரிட முடியாத நெருக்கடி நிலைமையை சந்தித்தது… அவருக்கு தப்பிச் செல்வதை விட வேறு எந்த மாற்று வழியையும் புலிகள் ஏற் படுத்திக் கொடுக்காதது… 

கருணா தப்பிச்செல்வதைவிட வேறு வழியில்லையென்றபோதும், கருணாவு டனான உடன்பாட்டில் புலிகள் நிறைய விட்டுக்கொடுப்புக்கள் செய்தார்கள், கருணாவும், புலிகளும் பரஸ்பரம் எட்டு வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்கள் என்பதை கடந்த அத்தியாயத்தில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.

கருணாவுடனான யுத்தத்தில் வெற்றிபெறும் கடைசிப்புள்ளியில் இருந்து கொண்டும், கருணாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அமைதியாக பிரச் சனையை முடிக்க புலிகள் முயன்றார்கள். வழக்கமாக புலிகள் இப்படி நடந்து கொள்வதில்லை.


கருணா விசயத்தில் மட்டுமே பிரபாகரன் இப்படி முடிவெடுத்தார். ஆனாலும், பிரபாகரனின் இந்த நகர்வை கருணா உதாசீனம் செய்தார். கருணா- புலிகள் பிளவு நடப்பதற்கு முன்னர், இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் என நம் பப்படும் சிலர், கிரமமாக கருணாவை சந்தித்து வந்தார்கள், மட்டக் களப்பிலி ருந்த தமிழ் வர்த்தகர் ஒருவரே இந்த தொடர்பிற்கு காரணமாக இருந்தார் என்ற தகவலொன்றும் புலனாய்வு தகவலாக அப்போது இருந்தது. 

இப்போதும் இருந்து வருகிறது. ஆனால், அந்த வர்த்தகர் விவகாரத்திற்கு இன்று வரை வெளியாட்களிடம் சாட்சியெதுவுமில்லை. அந்த “அநாமதேய“ நபர்களின் சந்திப்பிற்கான சாட்சிகள் சிலர் இருக்கிறார்கள். 

புலிகளின் நல்லெண்ண நகர்வு நிராகரிக்கப்பட்டு, போர் நோக்கத்துடன் கருணா நடந்து கொண்டது, அந்த “அநாமதேய“ நபர்களின் வழிகாட்டுதலா என்பதற்கு இன்றுவரை பதிலில்லை. கருணா- புலிகள் உடன்படிக்கை வலுவிழக்க காரண மாக அமைந்தது, கருணா தரப்பு செய்த ஒரு செயல் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டு, அதைப்பற்றி இந்த வாரம் எழுதுவதாக கூறியிருந்தோம்.

அதைப்பற்றி இப்போது குறிப்பிடுகிறோம். விடுதலைப்புலிகளிற்கு கருணா தரப்பிலிருந்து வழங்கப்பட்ட எட்டு வாக்குறுதிகளில், நான்காவது வாக்குறுதி இது- 

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவா ளர்கள், போராளிகளை உடனடியாக ஆபத்தின்றி விடுதலை செய்யப்படு வார்கள்.

ஆனால் இந்த வாக்குறுதியை கருணா தரப்பு காப்பாற்றவில்லை. பதிலாக புலிகளை சீண்டும் விதமாக நடந்தார்கள். கருணா தரப்பு அப்படி நடந்து கொண்டது தான், பின்னாளில் பெரும் இரத்தக்களரி ஏற்பட பிள்ளையார் சுழி போட்டது. 

அது என்ன சம்பவம்? 

 இந்த தொடரை வாசித்து வருபவர்களிற்கு, சில பாகங்களின் முன்னர் நீலனை பற்றி குறிப்பிட்டது நினைவிருக்கலாம். புலிகளின் மட்டு.அம்பாறை துணை புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்தவர். கருணா குழப்பம் விளைவிக்க தொடங்கியதும், அதை ஆரம்பத்திலேயே முறியடிக்க, புலிகளின் பாணியி லான இரகசிய ஒப்ரேசன் ஒன்றிற்கு தயாரானவர். 

ஆனால், அவரது அணியிலிருந்த ஒரு சாதாரண போராளியின் காதல் சமாச் சாரத்தால் விசயம் லீக் ஆகி, மட்டக்களப்பில் தங்கியிருந்த புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் அத்தனை பேரையும் கருணா அணியினர் வளைத்துப் பிடித்தி ருந்தனர். 

சந்திப்பொன்றிற்காக வருமாறு அழைத்து, சூட்சுமமாக அவர்களை வளைத்து பிடித்த னர். அவர்களை வளைத்து பிடித்த கருணா அணியின் ஒப்ரேசனிற்கு பொறுப்பாக இருந் தவர்- இன்று கிழக்கில் வெள்ளை வேட்டி, சட்டை அரசியல் செய்யும் ஒருவர்.  

வார்த்தைக்கு வார்த்தை அகிம்சை போதிக் கும் ஆள்! இப்போது வெளியிலும் இல்லை. மிகுதி உங்கள் ஊகத்திற்கு! நீலனையும் சில புலனாய்வு போராளிகளையும் கருணா அணியினர் விலங் கிட்டு, அடைத்து வைத்திருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 

கிழக்கிலிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்ததும் கருணா செய்தது இரண்டு விசயங்கள். முதலாவது- தளபதிகளை அழைத்து தனது முடிவை சொன்னார். பல தளபதிகள் அதற்கு உடன்படவில்லை. இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களிற்கு உடன்பாடாக இருக்கவில்லை. 

“நமது எதிரி இலங்கை அரசுதான். விடுதலைப் புலி களின் நடவடிக்கை பிழையாக இருக்கிறது- கிழக்கை சேர்ந்தவர்களிடமும் நிர்வாகத்தை தர வேண்டும்- என நீங்கள் சொன்னீர்கள். நாம் ஒன்றும் தெரியாத வர்கள் அல்லவே, அதனால் எமக்கான அங்கீகா ரத்தை அவர்களிடம் கேட்டு, போராடுவோம். 

புலிகளிற்கு எதிராக போராடுங்கள் என்று நீங்கள் சொன்னால்- அவர்களிற்கு எதிராகவும் போராடு வோம். ஆனால் விடுதலைப்புலிகளுடனான முரண் பாட்டை காரணமாக சொல்லி, அரசாங்கத்துடன் இணைய நாங்கள் தயாராக இல்லை“ என பல தளபதிகள் நேரடியாக சொல்லிவிட்டனர்.

அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளுடன் கருணாவின் கணிசமான தளபதிகள் தொடர்பு கொண்டு விட்டனர் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என விடுதலைப்புலிகளுடன் மோதலை ஆரம்பித் தது, 

இராணுவத்துடன் நெருங்கிச் செல்கிறார் என தளபதிகளால் உணரக்கூடியதாக இருந்தது போன்ற காரணங்களால் கருணாவில் அதிருப்தியடைய தொடங்கி னார்கள் தளபதிகள். தப்பிச்செல்ல முன்னர் கருணா செய்த முதலாவது விச யம்- தளபதிகளிடம் தனது முடிவை அறிவித்தது என்பதை குறிப்பிட்டிருந் தோம். 

கருணா செய்த இரண்டாவது விசயம்- தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை கொல்ல முடிவெடுத்தது. மீனகம் முகாமில் சந்திப் பொன்றிருப்பதாக கூறி அழைத்த நீலன் தலைமையிலான புலனாய்வுப் பிரிவு போராளிகளை 01.03.2004 அன்று கருணா அணியினர் கைது செய்திருந்தனர்.

12.04.2004 அன்று காலையில் தனது மருதம் முகாமிலிருந்து கருணா தப்பி யோடினார். கைது செய்யப்பட்டதிலி ருந்து, கருணா தப்பியோடும் வரை நீல னும் போராளிகளும் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். மீனகம், வடகாடு என பல இடங்களில் மாற்றி மாற்றி தடுத்து வைத்திருந்தனர். 

12ம் திகதி அதிகாலையில் தனது உதவியாளர்களை அழைத்த கருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலனை தனது மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கட்டளையிட்டார். 

12ம் திகதி காலையில் தனது கட்டுப்பாட்டில் இருந்த கடைசி அணியான, மக ளிர் படையணியினரை வீட்டுக்கு செல்லுமாறு கருணா கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அதற்கு முக்கிய காரணம்- கருணா தம்முடன் பகிடி விடுகிறார் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். 

ஆனால், தனது நெருக்கடி நிலைமையை அவர்களிடம் சொன்ன கருணா, வீட் டுக்குச் செல்லுங்கள் என்றார். அவர்களில் சிலர் அதை ஏற்கவில்லை. ஒரு கைக்குண்டை வீசியெறிந்து வெடிக்க வைத்து, அவர்களை கலைத்தார். 

பின்னர், முகாமின் இன்னொரு அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலனை இழுத்து வந்தனர். அவரது கையில் விலங்கிடப்பட்டிருந்தது. கண் கட்டப்பட்டிருந்தது. அவரை சுட்டுக் கொன்றனர். 

கருணா அணியினரால் கொல்லப் பட்ட முதலாவது விடுதலைப்புலி போராளி நீலன் அல்ல. அதற்கு முன் னரே, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் களில் ஐவர் கொல்லப்பட்டனர். 07ம் திகதி இரண்டு பேர் கொல்லப்பட் டனர். 

10ம் திகதி- அதாவது புலிகளின் ஒப் ரேசன் ஆரம்பிக்கப்பட்டதற்கு மறு நாள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட விசயத்தை உடனுக் குடன் தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாக விடுதலைப்புலிகளிற்கு அறிவித்து, கோபமூட்டும் காரியத்தையும் செய்துகொண்டிருந்தனர். 

இந்த வரிசையில் கொல்லப்பட்டவரே நீலன். தடுத்து வைக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டால், உடனே அதை தொலைத் தொடர்பு கருவி மூலம் புலிக ளிற்கு அறிவித்து, கருணா அணி சீண்டிக் கொண்டிருந்தது. தடுத்து வைக்கப் பட்டிருந்த போராளிகள் கொல்லப்பட்ட கால ஒழுங்கை கவனித்தால், இதை புரிந்து கொள்ளலாம். 

நீலன் கொல்லப்பட்டதும் கொடூரமான நிகழ்வுதான். நீலனை உயிரோடு வைத்து, அவரது உடலில் இருந்த தோலை உரித்தார்கள். “உங்கள் ஆளை உப்புக்கண்டம் போடுகின்றோம். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்“ என சவால் விட்டுவிட்டே அதைச் செய்தார்கள்.

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கைதான புலிகளின் தளபதி தோல் உரித்து கொல்லப்பட்டார்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 34 Rating: 5 Reviewed By: Thamil