728x90 AdSpace

<>
Latest News
Monday, 16 September 2019

விடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்… புலிகளின் மெகா கடத்தல் இதுதான்! இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 47

1992 ஆம் ஆண்டே புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை கிடைத்து விட்டது. இந்த ஏவுகணையை வைத்து அதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். 

உண்மைதான். இந்த இடத்தில்தான் பிரபாகரனின் இயல்பொன்றை குறிப் பிட வேண்டும். பிரபாகரன் எதிலும் அவசரக் குடுக்கையானவர் கிடையாது. 1970 களின் பிற்பகுதியில் ஆயுத இய க்கமொன்றை கட்டியெழுப்பினாலும் அதை விளம்பரப்படுத்த அவர் விரும் பவில்லை. 

மற்றைய இயக்கங்கள் தங்களின் பெயர்களை அறிக்கைகளால் பகிரங்கப்படுத் திக் கொண்டிருக்க, பிரபாகரன் தனது இயக்கத்தை ஆயுத, ஆள் பலத்தால் பலப் படுத்திக் கொண்டிருந்தார். 

1972இல் புதிய தமிழ் புலிகளை ஆரம்பித்தாலும், (இடையில் -1975 விடுதலைப் புலிகளாக மாறியது) 1981இல்தான் முதலாவது தாக்குதலை நடத்தினார். 

கவிஞர் காசியானந்தன் ஒரு குறுங்கவிதை எழுதியிருந்தார். சிறகு விரி, பிறகு சிரி என. அதுதான் பிரபாகரனின் உத்தி.1992இல் ஏவுகணை வாங்கப்பட்டாலும் 1995இல்தான் முதலாவது தாக்குதல் நடத்தினார்கள். 

அதை பாவிக்க வேண்டிய இராணுவச்சூழல் வரும்போது பாவிப்பதுதான் சிறந்தது என நினைத்தார்கள். இயக்கங்களிடம் ஏவுகணை செல்வதை தடுக்கும் முயற்சியை வல்லரசுகள் அப்பொழுது ஆரம்பித்திருந்தார்கள். 

எடுத்த எடுப்பிலேயே ஏவுகணையை பாவித்து, புலிகளிடம் ஏவுகணை இருக்கிறதென்ற சந்தே கத்தை ஏற்படுத்தி, புலிகளின் ஆயுத வலைய மைப்பின் மீது சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் கவனத்தை குவிக்க புலிகள் விரும்பவில்லை. 

1992இன் இறுதிக்காலத்திலேயே உக்ரேனில் வாங்கிய ஏவுகணைகள் யாழ்ப் பாணத்திற்கு வந்து சேர்ந்துவிட்டன. இந்த ஏவுகணைகளை வாங்கியபோது அதற்கான பயிற்சியை வழங்க, உக்ரேனிய கொமாண்டோக்கள் இருவரை அனுப்புவதாகத்தான் பேச்சு. இந்த இடத்தில் வாசகர்களிற்கு ஒரு சந்தேகம் வரலாம். 

உக்ரேனில் பல ஆயுத தொழிற்சாலைகள் இருந்தன. புலிகள் மட்டுமல்ல, உல கின் பல இயக்கங்களும் அவர்களிடம் ஆயுதம் வாங்குவார்கள். எல்லா இயக் கங்களும்- “உங்களிடம் நாம் ஆயுதம் வாங்குவதென்றால், உங்கள் ஆட்களை அனுப்பி பயிற்சி தர வேண்டும்“ என நிபந்தனை வைத்தால், 

உக்ரேனிய ஆயுத தொழிற்சாலை முதலாளிகள் என்ன செய்வார்கள்? 

அவர்கள் ஆயுதம் விற்பார்களா, அல்லது பயிற்சி முகாம் நடத்துவார்களா? 

பயிற்சி பெற்ற இராணுவத்திற்கு அவர்கள் எங்கே போவார்கள்? வாசகர்களின் இந்த சந்தேகம் நியாயமானதுதான். உலகெங்கும் இல்லாத ஒரு நடைமுறை யும், வாய்ப்பும் உக்ரேனில் மட்டுமிருந்தது. சோவியத் ஒன்றியம் உடைந்ததும், உக்ரேனிய ஆயுத தொழிற்சாலைகள் அந்த நாட்டு இராணுவ தளபதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை முன்னரே சொல்லியிருந்தோம். 

90களின் முதல் சில ஆண்டுகள் உக்ரேனிய இராணுவமும் சின்னா பின்னமாகி யிருந்தது. தளபதிகள் நினைத்தபடி இராணுவ வீரர்களை கையாண்டனர். பொருளாதார நெருக்கடி வேறு. இராணுவத்தில் ஆட்குறைப்பு நடந்தது. இரா ணுவ சேவையிலிருந்து ஏராளம் சிப்பாய்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களிற்கும் பொருளாதார நெருக்கடி இருக்கும்தானே. வீட்டுக்கு அனுப்பப் பட்ட சிப்பாய்களின் முதலாவது தெரிவு- தளபதிகளால் நடத்தப்படும் ஆயுத தொழிற்சாலைகளில் பணியாற்றுவது. அல்லது, தளபதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையை செய்வது. 

அப்படி தளபதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலைகளில் ஒன்றுதான்- தாங் கள் ஆயுதம் விற்கும் அமைப்புக்களிற்கு பயிற்சியளிப்பது! அவர்களிற் கான சம்பளத்தை, அந்தந்த அமைப்புக்களே வழங்கி விட வேண்டும். 

புலிகள் கோரியபடியே, இரண்டு உக்ரேனிய முன்னாள் இராணுவ வீரர்களை, புலிகளிற்கு ஆயுதம் வழங்கிய ஆயுத தொழிற்சாலை உரிமையாளரான இரா ணுவ அதிகாரி அனுப்பி வைத்தார். 

ஆனால் அவர்கள் ஏவுகணையுடன் வரவில்லை. ஏவுகணைகள் வந்ததன் பின் னரே- 1993 இன் இறுதியில்- வந்தனர். அவர்கள் வந்தது கடல்வழியாக. அவர் கள்தான் புலிகளிற்கு ஏவுகணை பயிற்சியை வழங்கினார்கள். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உக்ரேனியர்கள் இருவர் விடுதலைப் புலிகளிற்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்தது, அப்போது புலிகளில் இருந்த பலருக்கே தெரியாது! 

புலிகள் தங்கள் அமைப்பிற்குள்ளேயே இரகசியமாக பல விசயங்களை செய் வார்கள். அமைப்பிற்குள்ளேயே மற்றவர்களிற்கு தெரியாமல் இரகசியமாக இந்த விசயங்களை எப்படி செய்யலாம்? 

போராளிகள் மற்றவர்களுடன் பேசும்போது விசயத்தை லீக் செய்து விடு வார்கள் அல்லவா என யாரும் யோசிக்கலாம்.1992 இல் தொடங்கி, யுத்தத்தின் 2007 வரை புலிகள் இப்படியான நடவடிக்கைகளை அமைப்பிற்குள்ளேயே கச்சி தமாக செய்து வந்தார்கள். 

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணிகளாக இருந்த இம்ரான்- பாண்டியன் படையணி, பின்னர் ராதா வான்காப்பு படையணிகளை பாவித்து இப்படியான விசயங்களை செய்தனர். அதற்கு சில உதாரணங்களை சொல்லலாம்.புலிகள் வெளிநாட்டிலிருந்து புதிய ஆயுதங்களை இறக்குகிறார்கள் என வையுங்கள். 

அந்த ஆயுதத்தின் விபரம் மிகமிக இரகசியமாக இருக்க வேண்டும். அதனால் மேற்படி படையணிகளிற்குள்ளேயே அந்த ஆயுதத்திற்கான படையணியை உருவாக்குவார்கள். 

புலிகள் முதன்முதலில் ஈழ யுத்தத்தில் அறிமுகப்படுத்திய s.p.g 9> Auto dongan> பல்குழல் பீரங்கி எல்லாவற்றையும் இப்படித்தான் பாவித்தார்கள். புலிகள் 1997 இல் Auto dongan பயன்படுத்த தொடங்கினார்கள். 

2000 இல் தனங்கிளப்பு முனையில் புலிகளிடமிருந்து ஒரு Auto dongan ஐ இரா ணுவம் கைப்பற்றும்வரை அப்படியொரு ஆயுதம் இராணுவத்திடம் இருக்க வேயில்லை. இராணுவத்திடம் சிக்கிய பின்னரே, அநத ஆயுதத்தை மற்றைய தாக்குதல் படையணிகளிடம் பாவனைக்கு வழங்கப்பட்டது.

இம்ரான்- பாண்டியன் படையணி, ராதா படையணிகளின் கறாரான கட்டுப்பாடு களால் அமைப்பிற்குள்ளேயே தகவல் கசியாமல் இருந்தது.1993ம் ஆண்டு, பளையில் leema 7 என்ற பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. 

அப்போது விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டிருந்த சிறுத்தைப்படையணி என்ற பிரிவிற்கு பயிற்சியளிக்க அந்த முகாம் அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளால் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட படைப்பிரிவு சிறுத்தை.

இராணுவ, தற்காப்பு, மல்யுத்த, கடல் பயிற் சிகள் அனைத்தும் வழங்கப்பட்ட ஒரு கொமாண்டோ படையணியாக உருவாக்கப் பட்டது. 

அதாவது, அமெரிக்காவின் மரைன் படை யணியை மனதில் வைத்து உருவாக்கப் பட்டது. ஆனால், புலிகளின் முயற்சியில் தோல்வியடைந்த ஒரேயொரு படையணி- சிறுத்தைப்படையணி என்ற எதிர்மறை வரலாறு பின்னாளில் உருவானது. 

சிறுத்தை படையணி தொடர்பான விபரங்களை அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக தருகிறோம். இப்போது, விசயத்திற்கு வருகிறோம்.leema 7 முகாம் இந்த கொமாண்டோ பயிற்சிகளிற்கு உரிய முகாமாக அமைக்கப்பட்டது. 

சர்வதேச அளவிலான தற்காப்பு, மல்யுத்த போட்டிகளை நடத்தும் விதமான அரங்குகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க இராணுவத்தின் மரைன் பயிற்சி தளமொன்றிற்கு அண்மித்த வசதிகளுடன் 1993 இலேயே அமைக்கப்பட்டு விட்டது! 

புலிகளிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை பயிற்சியளிக்க வந்த இண்டு உக்ரேனி யர்களில் ஒருவர், கொமாண்டோ பயிற்சியளிப்பதிலும் தேர்ந்தவர். அதனால், அவரை அந்த முகாமில் சிறுத்தை படையணிக்கு பயிற்சியளிக்க நியமிக் கப்பட்டிருந்தார்.

அவர் சில மாதங்கள்தான் பயிற்சியளித்திருப்பார். அவரும் சராசரி மனிதர் தானே. மனித உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ்ந்தவர்கள் அல்ல. புலிகளு டன் பணியாற்ற வந்தபின் சில கட்டுப்பாடுகளுடன்தான் வாழலாம். அது உக்ரேனியரால் முடியவில்லை. 

திடீரென ஒருநாள் குண்டைத் தூக்கிப் போட்டார். தான் தனித்து வாழ்வதால் தொடர்ந்து இங்கு இருக்க முடியாது, தொடர்ந்து தங்கி பயிற்சி வழங்குவ தெனில் தனக்கு ஒரு பெண்ணின் துணை தேவையென்றார். 

அதாவது அவருக்கு பாலியல் உறவு ஏற்பாட்டையும் புலிகள் செய்து கொடுக்க வேண்டுமாம். இதெல்லாம் புலிகளிற்கு சரிப்பட்டு வராதே. அவரை மூட்டை கட்டி உக்ரேனுக்கே அனுப்பி விட்டார்கள்.

அதன்பின்னர், அடுத்தடுத்த மாதமே நான்கு உக்ரேனிய கொமாண்டோ பயிற்சி யாளர்களை புலிகள் அழைத்து வந்து சிறுத்தை படையணிக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தனர். 

மூன்று ஆண்கள் பயிற்சியாளர்கள். அவர்களிற்கு ஆங்கிலம் வராது. அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, உக்ரேனிய இராணுவத்திலிருந்த இளம்பெண்ணொருவரும் வந்திருந்தார். 

இந்த சமயத்தில் உதிரியாக இன்னொரு தகவலையும் குறிப்பிட்டு விடுகி றோம்.சிம்பாவேயில் இருந்து 1997 மே மாத இறுதியில் சிம்பாவேயில் இருந்து இலங்கையரசு கொள்வனவு செய்த 32,400 82 மி.மீ எறிகணைகளை ஏற்றியபடி புறப்பட்ட கப்பல் திடீரென காணாமல் போய்விட்டது. 

கப்பல் இலங்கைக்கும் வந்து சேரவில்லை. எந்த சர்வதேச துறைமுகங்க ளிலும் பின்னர் காணக்கிடைக்கவில்லை. கப்பலிற்கு என்ன நடந்தது? மூழ் கியதா… யாரும் கடத்தினார்களா என இலங்கையரசு தலையை பிய்த்துக் கொண்டிருக்க.. வன்னியில் ஒரு மாற்றம் தெரிந்தது. 

அப்பொழுதுதான் இலங்கை இராணு வம் வன்னியில் ஜெயசிக்குறு படை நடவடிக்கையை ஆரம்பித்திருந்த னர். புலிகளை சுலபமாக வீழ்த்தலா மென நினைத்துக்கொண்டு படையி னர், முன்னேற ஆரம்பிக்க, அவர்க ளின் மீது மழைபோல 81 மி.மீ எறி கணைகள் விழத் தொடங்கின.

அதன் பின்னர்தான் அரசுக்கு பொறி தட்டியது. அரசுக்கு பொறி தட்டிய சமயத் தில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு தொலைநகல் வந்தது. ‘சிம்பாவேயில் இருந்து புறப்பட்ட ஆயுதக்கப்பலை நாங்கள்தான் கடத்தி னோம்’ என்பதே செய்தியின் சாரம். 

எப்படி புலிகள் கடத்தினார்கள்? சோமாலியா கடற்கொள்ளையர்கள் பாணியில், கறுப்பு துணிகளால் முகத்தை மூடிக்கட்டிக்கொண்டு ஆயுதக்கப்பலை நடுக்கட லில் மறித்து எறிகணைகளை கடத்திக்கொண்டு சென்றார்களா? 

 இதெல்லாம் எம்.ஜி.ஆர் பட கால கடத்தல் முறை. புலிகள் கையாண்டது பக்கா கடத்தல். இது பற்றிய விபரங்களை குறிப்பிடுகின்றோம்.1997இல் இராணுவம் வன்னி நடவடிக்கையை மேற்கொண்டது. 

நீண்டதூர ஆட்லறிகளை விட, களத்தில் உடனடியாக நகர்த்தி செல்லும் சிறிய மோட்டார்கள்தான் காட்டு சண்டைக்கு உகந்தது என இராணுவம் நினைத்தது. வன்னி சண்டையை விரைவில் முடிக்க பெருமளவு பணத்தை ஒதுக்க அரசும் தயாராக இருந்தது. 

பாதுகாப்பு அமைச்சு 81 மி.மீ எறிகணைகளிற்கு கேள்விகோரல் செய்தது. சிம்பா வேயில் Zimbabwe Defence Industries (ZDI) என்nறாரு ஆயுத தயாரிப்பு நிறு வனம் இருக்கிறது. சிம்பாவே அரசு இயக்கும் நிறுவனம் இது. 

இந்த நிறுவனத்தின் விலைப்பட்டியல் மற்றைய விலைப்பட்டியல்களை விட குறை வாக இருந்தது. இந்த நிறுவனத்திடமே எறி கணைகளை வாங்குவதென அரசு தீர்மானித் தது. 3 மில்லியன் அமெரிக்க டொலர் (அப் போதைய இலங்கை பெறுமதி 177 மில்லியன்) பெறுமதியான ஆயுத ஒப்பந்தம் அது. 1997 ஆரம்பத்தில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்த பெறுமதி தனியே எறிகணைகளிற்குரியதல்ல. ஆயுதங்களை இலங்கை யில் சேர்ப்பதும் இதில்தான் அடக்கம். இலங்கைக்கு வந்த நிறுவன தலைவர் கேணல் டுட் ஒப்பந்தம் செய்துவிட்டு திரும்பினார். 

ஒரு மாதத்தில் இலங்கைக்கு ஆயுதம் அனுப்ப வேண்டுமென்பது ஒப்பந்த விதி.புலிகளின் பல்குழல் பீரங்கி- இராணுவம் கைப்பற்றிய பின்னர் (2009) சிம்பாவேயில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொண்டு செல்ல, கப்பல் நிறுவனமொன்றை குத்தகைக்கு அமர்த்துவதற்காக சிம்பாவே நிறுவனம் கேள்வி கோரல் செய்தது.
புலிகளின் பல்குழல் பீரங்கி- இராணுவம் கைப்பற்றிய பின்னர் (2009)

இந்த இடத்தில் பொதுவான ஆயுத விநியோக நடைமுறையொன்றை சொல்ல வேண்டும். கப்பலில் ஆயுதங்களை ஏற்றியிறக்க வேண்டுமெனில், அதற்காக பதிவுசெய்யப்பட்ட கப்பல்களைதான் பாவிக்க வேண்டும். 

ஆயுதம் ஏற்றும் கப்பல்கள் காப்புறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த காப்புறுதியின் ஒரு குறிப்பிட்ட வீத பணம், ஒவ்வொரு பயணத்தின்போதும் கட்டணத்துடன் மேலதிகமாக இணைக்கப்படும். சாதாரண சரக்கை ஒரு இடத் திலிருந்து கொண்டு வருவதற்கு ஆகும் செலவை விட, ஆயுதங்களை கொண்டு வருவதற்கு ஆகும் செலவு அதிகம். 

விபத்துக்களால் கப்பலிற்கோ, பணியாளர்களிற்கோ ஆபத்து நேரலாம் என்ப தால்தான் இந்த காப்புறுதி திட்டம். கிரேகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றும் விலைமனு சமர்ப்பித்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்தது மிக குறைந்த பெறுமதி. சிம்பாவே நிறுவனம் அதிக இலாபம் வைப்பதற்காக அந்த நிறு வனத்தை ஒப்பந்தம் செய்தது. 

அந்த நிறுவனத்தின் Stillus Limmasul என்ற கப்பல்தான் ஆயுதம் ஏற்ற வந்தது. சிம்பாவேயில் இருந்து பாரிய லொறிகளில் மொசாம்பிக் எல்லையிலுள்ள Port of Beira துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. 12 கொள்களன்களில் 32,400 எறிகணைகள் Stillus Limmasul கப்பலில் ஏற்றப்பட்டன. 

மே 24ம் திகதி அந்த துறைமுகத்தை விட்டு கப்பல் புறப்பட்டது. புறப்படும் போது சிம்பாவேகாரர்களை பார்த்து கப்பலில் இருந்தவர்கள் நன்றாக கைகாட் டியிருக்க வேண்டும். 

நல்லவேளையாக காதில் ஏதாவது பூவை வைக்கவில்லை. அப்படி வைத்தி ருந்தாலும் சிம்பாவேகாரர்கள் கோபித்திருக்க தேவையில்லை. ஏனெனில் செய்தவேலையே அதுதானே. ஏதோ ஒரு நிறுவனத்தின் பெயரில் விண்ணப் பித்து அந்த எறிகணைகளை ஏற்றியது விடுதலைப்புலிகள்! 

புறப்பட்ட கப்பல் ஒன்றரை மாதத்தில் முல்லைத்தீவில் ஆயுதங்களை இறக்கி விட்டு சென்றுவிட்டது. ஒரு மாதமாகியும் பொருட்கள் வரவில்லையென்ற தும், இலங்கையிலிருந்து சிம்பாவே ஆயுத நிறுவனத்தை தொடர்புகொள்ள, “புறப்பட்டு விட்டார்கள். வந்துவிடுவார்கள்“ என்ற பாணியில் பதிலளித்து கொண்டிருந்தார்கள். 

இரண்டு மாதமாகியும் காணவில்லையென்ற பின்னர்தான், இலங்கை அரசு எச்சரிக்கையாகி விழித்துக்கொண்டது. என்ன நடந்ததென விசாரிக்க… அதற் குள் அத்தனை எறிகணையும் புலிகளிடம் சென்று சேர்ந்து விட்டது. 

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: விடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்… புலிகளின் மெகா கடத்தல் இதுதான்! இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 47 Rating: 5 Reviewed By: Thamil