விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் குறித்த
சில தகவல்களை கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். போர்க்களங்க ளில் வல்லவரான பால்ராஜ், எப்பொ ழுதும் யுத்தகளங்களை பற்றியே சிந் தித்துக் கொண்டிருப்பதாலேயே, அவர் அப்படியொரு புகழை பெற்றார்.
தனது இறுதிக்காலத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம யத்திலும், அவர் போரைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
வரை படங்களுடன், இராணுவம் எந்த முனையில் நகர்ந்தால், எப்படி எதிர் கொள்ள வேண்டுமென திட்டங்கள் வகுத்தபடியே இருந்தார்.
அரசுடன் போர் ஒன்றை தொடங்கினால் எப்படியான சூழ்நிலை ஏற்படும் என்பதை பால்ராஜ் துல்லியமாக கணித்து வைத்திருந்தார். முகமாலையில் இருந்து இராணுவம் முன் நகராது. காரணம் புலிகளின் பலமான முன்னரண். 2002 இல் இருந்து இராணுவம் அதற்கான முயற்சியை செய்து பார்த்து விட்டது.
2006 இலும் முயற்சித்து கையை சுட்டுக் கொண்டு விட்டது.
அடுத்தது வவு னியா முனை. ஏ9 பாதையால் 1997 இல் இராணுவம் பெரிய நகர்வொன்றை ஜெயசிக்குறு என்ற பெயரில் ஆரம்பித்தது.
“சிக்குறு சிக்குறு ஜெயசிக்குறு- வந்து
சில்லெடுக்குது ஜெயசிக்குறு“ என புலிகள் பாட்டு வெளியிடுவதில் முடிந்தது. ஏ9 பிரதான பாதை, இதனால் புலிகளுடன் சுலபமாக யுத்தம் செய்ய முடியாது. முகமாலையை ஒத்த மூர்க்கத்தை புலிகள் காண்பிப்பார்கள்.
மற்றும், என்னதான் யுத்தம் செய்தாலும் வன்னிக்கான தரைப்பாதையை மூடி யுத்தம் செய்கிறார்கள் என்ற வீண்நெருக்கடி ஏற்படலாமென்பதை அரசு கணக் குப் போடும்.
இதைவிட்டால் மணலாறு. மணலாறு இராணுவத்திற்கு உகந்த போரிடும் பிரதேசமல்ல.
நீண்டகாடு. இங்கிருந்து யுத்தத்தை ஆரம்பிப்பது, ஆரம்பத்திலேயே பொறியில் சிக்குவதாக அமைந்துவிடும். இப்படி பலதையும் யோசித்து, மன்னாரிலிருந்தே யுத்தத்தை அரசு ஆரம்பிக்கும் என்பது பால்ராஜின் கணக்கு. அரசு- புலிகள் சமா தானப் பேச்சுக்கள் நெருக்கடியான கட்டத்தை சென்று கொண்டிருந்த 2006 இன் மத்தியகாலம்.
அப்போது புலிகளின் உயர்மட்ட தளபதிகளிற்கிடையிலான ஆலோசனை கூட்டமொன்று விசுவமடுவில் இருந்த பிரபாகரனின் சந்திப்பு முகாமில் நடந்தது. அந்த சந்திப்பில் பிரபாகரன் கலந்து கொள்ளவில்லை.

இந்த பகுதியின் ஆரம்பத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தோம். நான்காம் ஈழப்போரை தீர்மானிப்பவராக இருப்பதிலிருந்து பிரபாகரன் ஒதுங்க ஆரம்பித் திருந்ததை. அடுத்த தலைமுறையிடம் போரை கையளிக்க ஆரம்பித்திருந் தார். அது வெற்றியளித்திருந்தால் இயக்கத்தையும் கையளித்திருந்திருப்பார்.
சாள்ஸ் அன்ரனியின் எழுச்சி, இயக்கத்தை பல்வேறு கட்டமைப்பாக்கி அதற்கு பொறுப்பானவர்களே முடிவெடுப்பவர்களாக மாற்றியது, தளபதிகளையே முடி வெடுப்பவர்களாக மாற்றியது என பிரபாகரன் மெல்லமெல்ல ஒதுங்க தொடங் கியதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

விசுவமடு சந்திப்பில் பொட்டம்மான், தமிழேந்தி, சாள்ஸ் அன்ரனி, தீபன், வேலவன், பானு, ஜெயம், சொர்ணம், சூசை, தமிழ்செல்வன், ரேகா, கடாபி, நடேசன், கஸ்ரோ ஆகியோருடன் இன்னும் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். தமது வலிந்த தாக்குதலை இராணுவம் தாக்குப்பிடிக்காதென புலிகள் தீவிர மாக நம்பிக்கொண்டிருந்த காலம்.
ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது குமரன் பத்மநாதனின் ஆதரவாளர்கள் சிலரின் தகவல்களால்தான், அடுத்தடுத்த கப்பல்கள் வரும் போது சிக்கலில்லாமல் முல்லைத்தீவை வந்தடையலாமென தளபதிகள் நம்பி னார்கள்.
ஆயுதக்கப்பல்கள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது குமரன் பத்மநாதனின் ஆதரவாளர்கள் சிலரின் தகவல்களால்தான், அடுத்தடுத்த கப்பல்கள் வரும் போது சிக்கலில்லாமல் முல்லைத்தீவை வந்தடையலாமென தளபதிகள் நம்பி னார்கள்.
இவையெல்லாம் சேர, யாழ்ப்பாணத்தை இலகுவாக தாக்கலாமென்ற எண் ணம் தளபதிகளிடம் இருந்தது. அந்த கூட்டத்தில் பால்ராஜ் வேறுவிதமாக பேசி னார்.
யாழ்ப்பாணத்தில் மீது தாக்குதல் நடத்துவது அவ்வளவு சுலபமானதல்ல. கடினமான காரியம். அதேவேளை, இராணுவம் தொடுக்கும் தாக்குதலும் பிர மாண்டமாக இருக்கும்.
இராணுவத்திற்கு அந்த வாய்ப்பை நாம் வழங்ககூடாது. இராணுவம் யாழ்ப் பாணம், வவுனியாவிலிருந்து தாக்குதலை ஆரம்பிக்காது. மன்னாரிலிருந்து தான் ஆரம்பிக்கும்.
இராணுவத்திற்கு அந்த வாய்ப்பை நாம் வழங்ககூடாது. இராணுவம் யாழ்ப் பாணம், வவுனியாவிலிருந்து தாக்குதலை ஆரம்பிக்காது. மன்னாரிலிருந்து தான் ஆரம்பிக்கும்.
நாங்கள் யாழ்ப்பாண தாக்குதலை செய்யாமல் மன்னார் தள்ளாடி மீது தாக்கு தல் நடத்துவோம். வன்னி தாக்குதலுக்காக தள்ளாடியில் 58வது டிவிசன் உரு வாக்கப்பட்டு, தீவிர பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. தள்ளாடியை தாக்கினால் அந்த டிவிசனை மொத்தமாக கூண்டோடு அழிக்கலாம்.
வன்னி மீதான நடவடிக்கையை நீண்டநாளுக்கு தள்ளிவைக்கலாம். அப்படி நடந்தால் தெற்கில் அரசு நெருக்கடியை சந்திக்கும். இதுதான் பால்ராஜ் சொன் னது. இதை அவர் ஏன் சொன்னார் என்றால், தள்ளாடியில் இராணுவத்தின் தயார்படுத்தல்களை பால்ராஜ் அறிந்திருந்தார்.

அதனடிப்படையில் பால்ராஜ் இன்னொரு திட்டத்தையும் முன்வைத்தார்.
வன் னியில் மணலாறு தொடக்கம் மன்னார் கடற்கரை வரை மிகப்பெரிய மண் அணை அமைக்கலாம். மணலாற்றில் தொடங்கி வவுனியா ஊடாக வந்து முழங்காவிலிற்கு சற்று மேலாக அந்த அணை செல்லும்.
வன்னியின் எந்த பகுதிகள் போரிட சாதகமானவை என்பதை கணித்து, அந்த பகுதிகளினூடாக முன்னரணை அமைப்பது திட்டம். 20 அடி உயரத்தில் மண் அணை அமைத்து, அதற்கு முன் கண்ணிவெடிகள், அகழிகள், பொறிவெடிகள் என முகமாலையை ஒத்த முன்னரண் திட்டத்தை பால்ராஜ் சொன்னார். இதை சொன்னதும் சில தளபதிகள் எதிர்த்தனர்.

இப்பொழுது மன்னார் உயிலங்குளத்தில் நிற்கிறோம், முழங்காவில் வரை பின்வாங்குவதா, அவ்வளவு இடத்தையும் விட்டுவிட்டு என்ன செய்வதென்பது அவர்களின் கேள்வி. மன்னாரில் இராணுவத்தின் எல்லையிருந்த தள்ளாடிக்கு அண்மையான கிராமங்களிலிருந்து வெள்ளாங்குளம் வரையான பகுதிகளை சும்மா இழப்பதா, இது முட்டாள்தனம் என அந்த தளபதிகள் கருத்து சொன்னார் கள். இராணுவத்துடனான யுத்தம் அவ்வளவு சிரமமாக இருக்காது, எதற்காக இவ்வளவு பிரதேசங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
தீபன், சூசை தவிர்ந்த மற்றையவர்கள் இதேவிதமான அபிப்பிராயத்தில் இருந் தனர். தீபன் யாழ்ப்பாண மோதலை ஆதரித்தார். ஆனால், மன்னார் மோதலை எதிர்க்கவில்லை.சூசை இந்த கலந்துரையாடலில் ஆர்வமாக இருக்க வில்லை. இவர்கள் இருவரை பற்றியும் பின்னர் தனியாக பேச வேண்டும்.
இறுதியுத்த சமயத்தில் இருவரது மனநிலை என்ன, அவர்கள் போர் பற்றி சொன்னவை என்னவென்பது துரதிஸ்டவசமாக பதிவுசெய்யப்படவில்லை. நிச்சயம் அது பதிவு செய்யப்பட வேண்டும். அதை இந்த பகுதிகளின் பின்பகுதி களில் பார்க்கலாம். பால்ராஜின் திட்டம் அங்கு எடுபடவில்லை. அப்பொழுது தமிழேந்தி அமைப்பில் செல்வாக்கானவர். அவர்தான் பண முடிவுகளை எடுக்க வேண்டும்.

பால்ராஜின் திட்டத்திற்கு அண்ணளவாக ஐந்து கோடியாவது தேவையென கூட்டத்தில் சொன்னார். 5 கோடியை செலவழித்து, மன்னாரின் கிராமங்களை யும் கைவிட்டு பின்வாங்க வேண்டுமா என்பது பெரும்பாலானவர்களின் கேள்வி.
ஐந்து கோடியை செலவழித்து பின்வாங்குவதை விட, அதற்கு ஆயு தம் வாங்கினால் இராணுவத்தை வடக்கிலிருந்தே கலைத்துவிடலாம் என கஸ்ரோ அபிப்பிராயம் சொன்னார். இந்த சமயத்தில் பொட்டம்மான், கஸ்ரோ இருவரும்தான் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு விவகாரத்தை கையாண் டார்கள்.
குமரன் பத்மநாதன் (கே.பி) மீதான அதிருப்தி பிரபாகரனிற்கு ஏற்பட்டதைய டுத்து அவருக்கு மாதாந்தம் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு, ஒதுங்கி யிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கப்பல் ஒன்று கட்டுவதற்கும் பணம் கிரமமாக வழங்கப்பட்டு வந்தது. (இந்த கப்பலை தான் யுத்தம் முடிந்த பின்னர் கோத்தபாய கொழும்பிற்கு கொண்டுவந்து, புலிகளின் ஆயுதக்கப்பல் என கண்காட்சி நடத்தினார்)
ஐந்து கோடி தேவையில் லாத பணம் என ஆயுதக்கொள்வனவிற்கு பொறுப்பாக இருந்தவர்களும் சொல்ல, தமிழேந்தியும் அதையே சொன்னார்.
பால்ராஜின் திட்டத்தை விட்டுவிட்டு, ஆயுதக்கப்பலை கொண்டு வரலாம் என சொன்னார். பால்ராஜின் திட்டம் எல்லோராலும் நிராகரிக்கப்பட்டது.
மற்றைய முக்கிய தளபதிகளிடம் இப்படியொரு திட்டமிருந்து, அதை தளபதிகள் கூட் டத்தில் அங்கீகரிக்கப்படவில்லையெனில் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பிரபாகரனை சந்தித்து அதைக் கூறுவார்கள்.
அது பொருத்தமான திட்டமெனில் தளபதிகளின் முடிவை மாற்றவைப்பார் பிரபாகரன். ஆனால் பால்ராஜிற்கு அந்த வாய்ப்பும் இல்லை. காரணம், இறுதிக் கட்டத்தில் பிரபாகரன், பால்ராஜை தனிப்பட்டரீதியில் சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கிறார்.

பால்ராஜ் இறப்பதற்கு முன் கடைசி மூன்று வருடங்கள் வரை பால்ராஜை தனிப்பட்டரீதியில் பிரபாகரன் சந்திக்கவில்லை. சில நிகழ்வுகளில் எதிர்ப்பட்ட தற்கு அப்பால், தனிப்பட்டரீதியில் நெருக்கமாக- மனம் விட்டு- பேச்சு வார்த்தை நடக்கவில்லை.
வேறுயாருமெனில் பிரபாகரனிற்கு முன்பாக அடிக்கடி சென்று முகத்தை காட்டி, வழிய வருவார்கள். பால்ராஜிடம் அந்த இயல்பு கிடையாது. பிரபாகர னும் அழைக்கவில்லை, பால்ராஜூம் போகவில்லை. காரணம், ஒரு திருமண பிரச்சனை.
வேறுயாருமெனில் பிரபாகரனிற்கு முன்பாக அடிக்கடி சென்று முகத்தை காட்டி, வழிய வருவார்கள். பால்ராஜிடம் அந்த இயல்பு கிடையாது. பிரபாகர னும் அழைக்கவில்லை, பால்ராஜூம் போகவில்லை. காரணம், ஒரு திருமண பிரச்சனை.
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!