728x90 AdSpace

<>
Latest News
Monday, 9 September 2019

பொட்டம்மானை இரகசியமாக கண்காணித்த கருணா!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 26

கிழக்கு பிளவிற்கு உண்மையில் தத் துவார்த்த அர்த்தங்களோ, கொள்கை ரீதியான காரணங்களோ கிடையாது. 

அது கருணா என்ற தனி மனிதனின் முரண்பாடு என்பதை கடந்த பாகங் களில் குறிப்பிட்டிருந்தோம். பிளவின் பின்னரே அதற்கு தத்துவார்த்த அர்த் தங்களை உருவாக்க முயன்றார்கள். 

இதை உருவாக்கியதில் சிவராம் முக்கியமா னவர். (சிவராமிற்கு புலிகள் மாமனிதர் கௌ ரவம் வழங்கியதும் இந்த மோதலின் தொடர்ச் சிதான்) மற்றதெல்லாம், அரசினால் இரகசிய மாக இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டவர்கள். 


அவர்களை பற்றிய விபரங்களையெல்லாம் இந்த பகுதியில் சொல்வோம். தன்முனைப்பு (Eco) தான் இந்த பிளவின் பின்னணி காரணி. அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்கு தலிற்கு முன்னர் இன்னொரு சம்பவமும் நடந்தது. 

கிழக்கு அணிகள் வன்னியிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு திரும்பியிருந்த சம யத்தில், கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் ஒரு உள்வீட்டு மோதல் ஏற்பட்டது. அடுத்த துணைவேந்தர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. 

அதிகார போட்டி ஏற்படுமிடங்களில் மனித மனங்கள் விதவிதமான சூழ்ச்சி பொறிகளை ஏற்படுத்தும். அதிலும் படித்தவர்கள் என நமது சமூகத்தில் கௌர வமாக பார்க்கப்படுபவர்கள் தமது நலன்களிற்காக எந்தவகையான சூழ்ச்சிக் கும் தயாராக இருப்பார்கள் என்பதற்கு கிழக்கு பல்கலைகழக சம்பவம் உதாரணம்.

2000களில் கிழக்கு பல்கலைகழகத்தில் துணைவேந்தருக்கான போட்டி ஏற் பட்டது. இந்த போட்டியில் சம்பந்தப்பட்டவர்களை நாம் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் கிழக்கு பல் கலைகழகத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்தனர். 

கிழக்கை சேர்ந்த சில விரிவுரையாளர்களும் துணைவேந்தர் பதவியை குறி வைத்தனர். இந்த சமயத்திலேயே முதன் முதலாக வடக்கு, கிழக்கு பிளவுக் கான அத்திவாரம் இடப்பட்டது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிக்கு வராமல் தடுப்பதற் காக, கிழக்கை சேர்ந்தவர்கள்தான் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக வர வேண்டுமென்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். 

இது வடிவ மாற்றம் பெற்று, வடக்கிலுள்ளவர்கள் கிழக்கு மக்களை சமமாக மதிப்பதில்லை, கிழக்கின் அதிகாரபீடங்களையும் வடக்கிலுள்ளவர்களே ஆக்கி ரமித்துள்ளனர் என்ற ரீதியில் பிரசாரப்படுத்தப்பட்டது.

கிழக்கு துணைவேந்தர் சிக்கலை இரண்டு அணிகளும் விடுதலைப்புலிகளிடம் எடுத்து வந்தன. கிழக்கை சேர்த்தவர்கள் கருணாவை சந்தித்து, கிழக்கு துணை வேந்தர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு தலை வர்களை சந்தித்து பேசினர். அற்புதன் மாஸ்ரர், மனோ மாஸ்ரர் போன்றவர்க ளுடனேயே இந்த பேச்சுக்கள் நடந்தன. 

கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் மோதல் பற்றிய செய்திகள் அப்பொழுது ஊடகங்களிலும் வெளியாகியிருந்ததால், அதை விலாவாரியாக குறிப்பிடா மல் விட்டு, அந்த சமயத்தில் வெளியில் வராமல் இருந்த உள்ளக தகவல் களை மட்டும் சொல்கிறோம்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள், மட்டக்களப்பில் உள்ள புல னாய்வுத்துறை பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் விடயத்தை அறிந்ததும், கருணா ஒருமுறை அவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கையும் விட்டி ருந்தார். 

கருணாவிடம் இருந்த போராளிகளின் எண்ணிக்கைதான் அவரை தன்னிச் சையாக நடக்க வைக்கிறது என்பதும் புலிகளிற்கு தெரியும். என்றாலும், கருணா விடயத்தில் அவசரப்படாமல், நிதானமாக செயற்பட முடிவெடுத் தார்கள். 

இந்த சமயத்தில் கிழக்கில் கருணா அணியினர் நடத்திய கட்டாய ஆட் சேர்ப்பையும் நினைவூட்டுகிறோம். 2001 இல் மட்டக்களப்பில் கருணா கட்டாய ஆட்சேர்ப்பை ஆரம்பித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு கட்டாயமாக இள வயதினரை படையில் இணைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான். 


இது ஏன் நடந்ததென்பது தெரியுமா? பலரும் நினைக்கிறார்கள், இது புலிகளின் தலைமையின் சம்மதத்துடன் நடந்ததென. அதற்கு வசதியாக ஒரு கதையை யும் உருவாக்கி உலாவவிட்டுள்ளனர். 

அந்த கதையை முதலில் குறிப்பிடுகிறேன். கட்டாய ஆட்சேர்ப்பு விடயம் சர் வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாக தொடங்க, கருணாவை புலிகள் வன் னிக்கு அழைத்தார்களாம். 

கட்டாய ஆட்சேர்ப்பை நிறுத்துமாறு மற்ற தளபதிகள் சொல்ல, “தலைவருக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் ஐயாயிரம் போராளிக ளுடன் வருவேன். அதற்கு தயாராக இருக்கி றேன். நீங்கள் என்ன செய்தீர்கள்?“ 

என கேட்டாராம். இதை கருணா பிரிந்த பின் னர் அவருக்கு ஆதரவான யாரோ கிளப்பிவிட, ஒரு சுற்றுசுற்றி வந்துள்ளது. உண்மையில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. 

கருணா கட்டாய ஆட்சேர்ப்பை ஆரம்பித்ததே விடுதலைப்புலிகளிற்கு நெருக் கடி கொடுக்கத்தான்!இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். அதை விளக்கமாக சொல்கிறேன். 

அப்போது அதன் பின்னணி விளக்கமாக புரியும். விடுதலைப்புலிகளின் கட் டமைப்பிற்குள் இனி கருணா செயற்படுவது சிரமம், அவர் தனித்து செயற்பட விரும்புகிறார் என்பதை 1999, 2000களிலேயே பிரபாகரன் துல்லியமாக கணித்து விட்டார். 

வன்னிக்குள் படைத்துறை, நிர்வாக கட்டமைப்புக்களை கருணா கடைப்பிடிக் காமல் விட்டது எப்படியென்பதை ஏற்கனவே விலாவாரியாக குறிப்பிட்டுள் ளோம். அவரை கிழக்கிலேயே செயற்பட அனுப்பிவிடுவோம் என பிரபாகரன் 2000 இல் முடிவெடுத்து அனுப்பினார். 

கிழக்கிற்கு கருணா வந்ததும், அவர் தனித்து இயங்குவதற்கான அத்தி வாரங் களை இட தொடங்கிவிட்டார். விடுதலைப்புலிகளிற்கு எப்பொழுதாவது சவால் அளிக்கலாமெனில், அது தன்னிடமுள்ள ஆளணி எண்ணிக்கையை வைத்துதான் 

என்பது கருணாவிற்கு நன்றாக தெரியும். போரிடும் ஆற்றலுள்ள பெரிய படை யணிகளை கட்டியமைத்தால், புலிகளை தவிர்த்து தன்னால் தனித்து இயங்க முடியுமென அவர் நம்பினார். 

கணிசமான படையணிகளை உருவாக்கினால், புலிகளுடன் மோதல் ஏற்பட் டாலும் அரச பின்னணியில் கிழக்கை கட்டுப்படுத்திக் கொண்டு நிலை கொண் டிருக்கலாமென நினைத்தார். 

படையணியை பெருக்கினால் புலிகளை நெருக்கடிக்குள்ளாக்கலாம், கிழக்கு விசயத்தில் மூக்கை நுழைக்கமாட்டார்கள் என நினைத்து, உடனடியாக ஆட் சேர்ப்பிற்கு உத்தரவிட்டார். 

கட்டாய ஆட்சேர்ப்பில் இளவயதானவர்களையும் இணைத்தார்கள். இது சர்வதேச அளவில் விமர்சனத்தை உண்டாக்கியது. சர்வதேச பிரதிநிதிகள் இது பற்றி கருணாவிடம் கேட்கமாட்டார்கள். வன்னியிலுள்ள அரசியல்துறையின ரைதான் தொடர்புகொண்டு விசனத்தை தெரிவித்தார்கள். 

விடுதலைப்புலிகள் தை பற்றி கருணாவிடம் பலமுறை சொல்லியும் அவர் ஆட்சேர்ப்பை நிறுத்தவில்லை. இறுதியில் ஒருமுறை, சர்வதேச பிரதிநிதிக ளுடனான சந்திப்பிற்கு கருணாவையும் புலிகள் அழைத்தனர். 

இனி சிறுவர்களை படைக்கு இணைக்கமாட்டோம் என, கருணாவை வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் வாக்களித்த பின்னரே, கருணா கட்டாய ஆட் சேர்ப்பை நிறுத்தினார். 

 கிழக்கு பிரதிநிதித்துவத்தை கருணா அதிகபட்சமாக எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்ட பின்னரே, கருணாவிற்கும் தனி ஹெலிகொப்டர் ஏற்பாடு செய்து அவரையும் பேச்சில் இணைத்துக் கொண்டார்கள். 

இந்தவகையில் பார்த்தால், கிழக்கு பிரதிநிதித்துவத்தை புலிகள் சமமாக பேணினார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். கிழக்கில் கருணா தனித்து செயற்பட முடிவெடுத்தபோது, அவரின் கீழ் 5,858 போராளிகள் இருந்ததாக புலிகளின் தலைமைசெயலக பதிவுகள் குறிப்பிட்டன. 

இதில் கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 அளவில் வரும். விடுதலைப்புலிகள் தன்மீது திடீர் தாக்குதல் நடத்தி, தன்னை கைது செய்யலாமென்ற அச்சம் 2001 ஆம் ஆண்டிலேயே கருணாவிற்கு வந்து விட் டது. 

இதனால் அவர் பாதுகாப்பு ஏற்பாடொன்று செய்திருந்தார். தனது படைய ணிகளை பிரித்து பல முகாம்களில் வைத்திருந்தால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாகிவிடும் என்பதால், தரவையில் பிரமாண்ட முகாம் அமைத்து அங்கேயே அனைத்து போராளிகளையும் நிலைகொள்ள வைத்தார். பிரமாண் டமான இராணுவ வலயமாக அது விளங்கியது. 

அந்த பிரமாண்ட இராணுவ வலயத்திற்குள் கருணா இருக்கும் வரை புலிக ளால் அவரை எதுவும் செய்ய முடியாது. இது கருணாவிற்கும் தெரியும், புலி களிற்கும் தெரியும்.புலிகள் அமைப்பை விட்டு பிரிந்து செல்வதாக கருணா அறிவிக்கவிருந்த சமயத்தில், கருணாவை கைது செய்ய புலிகள் ஒரு இரகசிய ஒப்ரேஷன் ஒன்றை செய்ய திட்டமிட்டனர். 

அந்த ஒப்ரேஷனின் முக்கிய அங்கமே, கருணாவை தரவை இராணுவ வலயத் திற்கு வெளியில் சந்தேகமில்லாமல் அழைத்து வருவது தான்! கருணாவிற்கும் புலிகளிற்குமிடையில் 2001 இல் இந்த இரகசிய மோதல் தீவிரம் பெற் றாலும், பிரபாகரன் இந்த மோதலை விரும்பவில்லை. 

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையில்லாமல் அனைவரையும் ஒற்றுமையாக வைத்திருக்கவே விரும்பினார். 2002 இன் நடுப்பகுதியில் பொட்டம்மானை அழைத்த பிரபாகரன், கருணா விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத் தியிருந்தார்.

கிழக்கில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு அணி பலமாக நிலைகொள்வதா, கருணாவின் அணி பலமாக நிலைகொள்வதா என்பதில் இரண்டு தரப்பிற்கு மிடையில் மறைமுக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இதன் விளைவுதான் அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலும்.

கிழக்கில் புலிகளின் புலனாய்வு அணிகளை தற்காலிகமாக செயலிழக்க செய்யலாம், தென்பகுதி நடவடிக்கை அணிகளை மட்டும் கிழக்கிலிருந்து செயற்பட வைக்கலாமென பிரபாகரன் ஆலோசனையும் சொன்னார். இது பொட்டம்மானிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இருந்தாலும், பிரபாகரன் சொன்னால் அவர் தட்டமாட்டார். அதனால்தான் பிரபாகரனிற்கு அவரில் அவ்வளவு நம்பிக்கை. அரை மனதுடன் ஏற்றுக் கொண்டார். பிரபாகரன் இத்துடன் நிறுத்தவில்லை. பொட்டம்மானை உடனே கிழக்கிற்கு சென்று, கருணாவுடன் பேசி பிரச்சனைகளை களைய சொன்னார். கிழக்கிலிருந்து புலிகளின் புலனாய்வு அமைப்புக்களை கொஞ்சம் ஒதுங்கியிருக்க செய்து, கருணாவுடன் பிரச்சனைகளை மனம்விட்டு பேசு மாறு அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்.

பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்புவதற்கு முன்னர், தொலைத்தொடர்பு கருவியில் பிரபாகரனே நேரடியாக கருணாவை தொடர்பு கொண்டு பேசினார். வடக்கு, கிழக்கென இப்படி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தால் நடக்கும் விபரீ தங்களையெல்லாம் புரிய வைத்து, பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்பி வைக்கும் விடயத்தையும் சொன்னார்.

பொட்டம்மானை அனுப்பி வைக்கிறேன், அவருக்கு ஆபத்து நேராமல் பார்த்து கொள்ளலாமா என பிரபாகரன் கேட்டார். ஏற்கனவே அற்புதன் மாஸ்ரரிற்கு நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிட்டு, இராணுவம் ஏதாவது தாக்குதல் நடத்தாமல் பார்த்து கொள்ளலாமா என்றுதான் பிரபாகரன் கேட்டார்.

பிரபாகரன் எதையும் அறியாதவர் போல இப்படி கேட்டதன் அர்த்தம், கருணா அணியினரால் ஆபத்தில்லாமல் பொட்டம்மானை திருப்பி அனுப்பி வைக்க முடியுமா என்பதுதான். அது கருணாவிற்கும் தெரியும்.

பொட்டம்மானை பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கும் பொறுப்பு தன்னு டையதென கருணா வாக்களித்தார். பொட்டம்மான் என்றால் கருணாவிற்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

தனது ஓட்டு மாட்டுக்களை பொட்டம்மான் எப்படியோ கண்டுபிடித்து விடு கிறார் என்பதில் கருணாவிற்கு பயங்கர கடுப்பு. போர்நிறுத்த கண்காணிப்பு குழு ஊடாக முறைப்படி அறிவித்துத்தான் பொட்டம்மான் கிழக்கிற்கு சென் றார்.

புளியங்குளம் சோதனைச்சாவடியினால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியி னால் வாகனத்தில் அவர் சென்ற விடயம் அப்பொழுது வெளியில் வர வில்லை. புலிகள், அரசாங்கம் ஆகியவற்றின் உயர்மட்டமும், போர்நிறுத்த கண்காணிப்புகுழுவும் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயம் இது.

அதனால் தகவல் வெளியில் கசியவில்லை. பொட்டம்மான் விட்டுக் கொடுப் புக்களிற்காக மட்டக்களப்பிற்கு சென்றாரே தவிர, அதற்கான சாத்தியங்கள் அங்கு இருக்கவில்லை. பொட்டம்மானை கண்காணிப்பதிலேயே கருணாவின் அணிகள் குறியாக இருந்தன.

பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்ததும், மட்டக்களப்பில் இருந்த புல னாய்வுத்துறை போராளிகளின் பாதுகாப்பில், அவர்களது முகாமில் தங்க முடி வெடுத்தார். ஆனால் கருணா வேறு விதமாகச் சொன்னார்.

பொட்டம்மானை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டியது தனது பொறுப்பு, அதனால் புலனாய்வுத்துறைக்கு மேலதிகமாக தனது அணிகளும் அவருக்கு பாதுகாப்பு வழங்கும், கஞ்சிகுடிச்சாறில் இருந்த தனது முகாமொன்றிலேயே பொட்டம்மான் தங்கியிருக்கலாமென்றார்.

பொட்டம்மானிற்கு அதில் பிரச்சனையிருக்கவில்லை. கருணாவை எப்படி கையாள்வதென பொட்டம்மானிற்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்? பொட்டம்மானுடன் புலனாய்வுத்துறை போராளிகள்தான் தங்கியிருந்தனர். அந்த பகுதியில் கருணாவின் நம்பிக்கைக்குரிய போராளிகள் நிறைந்திருந் தனர்.

கஞ்சிகுடிச்சாறில் இருந்த புலனாய்வுத்துறை முகாமைப்பற்றி தெரிந்தவர்க ளிற்கு நாம் சொல்லும் லொக்கேஷன் புரியும். பொட்டம்மான் தங்கியிருந்த சமயத்தில், அந்த முகாமிற்கு வெளியில் கருணாவின் கட்டளையின் கீழ், கிழக்கு போராளிகள் வீதிச்சோதனை சாவடியொன்றை அமைத்திருந்தார்கள். காரணம்- பொட்டம்மானின் பாதுகாப்பிற்காம்!

இதன் மூலம் அங்கு வருபவர்கள், போகிறவர்கள், பொட்டம்மான் எங்கு போகி றார் என்பதையெல்லாம் கருணா உடனுக்குடன் அறிந்தபடியிருந்தார். மொத் தத்தில்

பொட்டம்மான் அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன், தனக்கு தெரியாமல் அவரால் ஒருவரைக் கூட சந் திக்க முடியாது, அப்படி சந்திக்காவிட்டால், கிழக்கில் தனது படைய ணிக்குள் உள்ள சிக்கல்களை அவரால் அறிந்துகொள்ள முடியாதென கருணா நினைத் தார்! 

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொட்டம்மானை இரகசியமாக கண்காணித்த கருணா!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 26 Rating: 5 Reviewed By: Thamil