யாழ்ப்பாணத்தை சேர்ந்த அற்புதன் மாஸ்ரர் மீது 2001ஆம் ஆண்டு கிளை மோர் தாக்குதல் ஒன்று நடந்ததாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந் தோம்.
அந்த தாக்குதல் முடிந்த கையுட னேயே, இராணுவத்தால் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கருணா தரப்பினால் வன்னிக்கு அறிவிக்கப்பட் டிருந்தது.
அது உண்மையா?
அந்த தாக்குதலை நடத்தியது யார்?
இந்த தாக்குதல் பற்றி இப்போது விசாரித்தால், கருணா அணியிலுள்ளவர்கள் மறுப்பார்கள். தமக்கு அதில் சம்பந்தமேயில்லையென கூறுவார்கள். ஆனால் இலங்கை புலனாய்வு வட்டாரங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்ப வர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள்.
அவர்களின் தகவல்படி, அந்த தாக்குதலில் கருணா தரப்பை சேர்ந்தவர்களின் பங்கும் இருந்ததென்கிறார்கள்!
சரி, இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என் பதற்கு அப்பால், புலிகளின் பிளவு வெளிப்பட்ட முதலாவது சம்பவமாக இதை கொள்ளலாம்.
தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிதான் நடத்தியதாக கருணா வன்னிக்கு தகவல் அனுப்பினார். ஆனால், மட்டக்களப்பிலிருந்த புல னாய்வுத்துறையினர், பொட்டம்மானிற்கு அனுப்பிய ரிப்போர்ட் வேறு வித மாக இருந்தது.
அது - இந்த தாக்குதலை கருணா அணியே நடத்தியதாக அதில் குறிப்பிடப்பட் டிருந்தது. கருணாவின் கீழ் இரகசியமாக புலனாய்வு அணியொன்று உருவாக் கப்பட்டதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அந்த அணிதான் தாக்குதலை நடத்தியதாக புலனாய்வுத்துறை அனுப்பிய ரிப் போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பவம் நடைபெற்ற உடனே தயாரிக்கப் பட்ட ரிப்போர்ட் அது.
இப்படியான ரிப்போர்ட்டுகளை பற்றி அறிந்தவர்களிற்கு ஒரு விடயம் தெரி யும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தின் ஆணிவேரில் தவறிருக்காது. ஆனால், சில சம்பவங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கும்.
ஏனெனில், எதிர்தரப்பு புலனாய்வு அணியால் நடத்தப்பட்ட தாக்குதல் முறையை அவ்வளவு துல்லியமாக உடனே அறிக்கையிட முடியாது. புலிக ளின் அறிக்கையிலும் அப்படியான சில சம்பவ மாற்றங்கள் நிகழ்ந்திருக்க லாம்.
எது எப்படியோ, இப்போது புலனாய்வு வட்டாரங்களில் அடிபடும் தகவலை குறிப்பிட்டு விடுகின்றோம்.
இலங்கை புலனாய்வு அமைப்புக்களுடன் இரண் டாயிரங்களில் ஓரளவு தொடர்பிருந்தவர்கள்- மண்டைப்பீஸ் சுரேஸ் என்ற பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார்கள்.
2000ஆம் ஆண்டு வரை ஜெயந்தன் படையணியில் செயற்பட்டவர். பின்னர், விடுதலைப்புலிகளில் இருந்து தப்பியோடி கொழும்பிற்கு சென்றார். அங்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பேற்பட்டு, அவர்களுடன் நெருங்கிச் செயற்பட்டார்.
அப்போது இராணுவ புலனாய்வுத்துறையுடன் தமிழ் இளைஞர்கள் அணி யொன்றும் இயங்கிக் கொண்டிருந்தது. புளொட்டில் இருந்து விலகிச் சென்ற புளொட் மோகன்தான் அந்த அணியின் தலைவர். அவரது அணியில் மண்டைப் பீஸ் சுரேசும் இணைக்கப்பட்டார்.
மட்டக்களப்பிற்குள் விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி முதன் முத லில் தாக்குதல் நடத்தியது இந்த அணிதான்! புளொட் மோகன் இந்த அணியை வழி நடத்தினாலும், மண்டைப்பீஸ் சுரேஷ்தான் தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்!
தனது பழைய தொடர்புகளின் மூலம் கருணாவிற்கு நெருக்கமான சிலருடன் மண்டைப்பீஸ் சுரேஸ் தொடர்பில் இருந்தார், இந்த தாக்குதலில் கருணா தரப் பின் பங்கு என்பது- மண்டைப்பீஸ் சுரேஷ் அணி ஊடுருவி சென்றதை “கண் டும் காணாமலும்“ விட்டதுதான் என்கிறார்கள் அந்த புலனாய்வுத்துறை வட் டாரங்கள்.
மண்டைப்பீஸ் சுரேஷ் மிகக்குறுகிய காலத்திற்குள்ளேயே இராணுவ புல னாய்வு அணிக்குள் மிகப்பிரபல்யமாகி விட்டார். அதாவது, புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதில் புளொட் மோகனை விட மண்டைப்பீஸ் சுரேஷ் தான் கில்லாடியென புலனாய்வுத்துறையினர் கணக் கிட்டு வைத்திருந்தனர்.
மண்டைப்பீஸ் சுரேஸினால் தமக்கு தலைவலியென்பதை புலிகள் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்களா? தெரிந்தார்கள். சுரேஸை மேலே அனுப்பி வைக் கும் வேலையையும் செய்தார்கள்.
மண்டைப்பீஸ் சுரேஸ் அப்பொழுது நுகே கொடை பகுதியில் தங்கியிருந்தார்.
அவரது முக்கியம் கருதி அவருக்கு பலத்த பாதுகாப்பிருந்தது. அவரை சுட்டுக் கொல்ல பலமுறை புலிகள் முயன்றார்கள். நெருங்கவே முடியவில்லை.
இதன்பின்னர் தான் வேறொரு ஐடியா செய்தார்கள்.
மண்டைப்பீஸ் சுரேஸிற்கு ஊரில் (மட்டக்களப்பில்) ஒரு காதலி இருந்தார். அவர் மீது புலிகள் ஒரு கண் வைத்திருந்தார்கள்.
திடீரென ஒருநாள் அவர் புலிகளில் இணைந்து விட்டார்.
ஆரம்பத்தில் புலிக ளிற்கு சந்தேகமாக இருந்தது. ஏதாவது உள்நோக்கத்துடன் வந்திருப்பாரோ என்று சந்தேகித்தனர். பின்னர் போகப்போக விடயம் தெரியவந்தது.
புலிகளில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் சுரேஷிற்கும் அவருக்கும் தொடர் பேதும் இருக்கவில்லை.அவரையே பாவித்து சுரேஸை கொன்றால் என்ன என்று யோசித்தனர்.
இதிலிருந்த ஒரே சிக்கல்- அந்த பெண், தனது முன்னால் காதலனை கொல்ல தயாராக இருக்கிறாரா என்பதே.
புலிகள் அவருடன் மெல்லமெல்ல பேச- சுரேஸ் செய்தது துரோகம், அவரால் அமைப்பிற்கு பெரிய நெருக்கடி ஏற்பட் டுள்ளது, அவரை கொல்வதை தவிர வேறுவழியில்லையென்பதை அந்த பெண் ஏற்றுக்கொண்டார்.
அது மட்டுமல்ல, சுரேஸை கொல்லும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்!
துப் பாக்கி சுடும் பயிற்சி மற்றும் புலனாய்வுத்துறை பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர் தயார்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கொழும்பிற்கு தொழில் தேடி செல்ப வராகச் சென்றார்.
அங்கு சுரேசுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தினார்.
காதலி தன்னை தேடி வந்ததில் சுரேஷிற்கு பெரிய சந்தோசம். இராணுவத்துடன் சேர்ந்தியங்குவதை விட்டுவிட்டு, மத்திய கிழக்கிற்காவது சென்றுவிடுமாறு காதலி வற்புறுத்தி னார்.
அந்த விடயத்தில் மாத்திரம் தலையிட கூடாதென சுரேஸ் கண்டிப்பாக கூறி விட்டார். கொழும்பில் தனியாக இருக்கிறார் சுரேஸ். காதலியும் கொழும்பிற்கு வந்து விட்டார்.
தனியாக சந்திக்காமல் இருப்பது எப்படி?
நண்பர்கள் மூலம் அறையொன்றை பெற்று, காதலியையும் அங்கு ஒருநாள் அழைத்தார். விடயம் புலிகளின் புலனாய்வுப்பிரிவு போராளிகளிற்கு அறிவிக் கப்பட, அவர்கள் வாகனத்தில் காதலியை அழைத்துச் சென்று, சுரேஸின் இருப் பிடத்திற்கு அருகில் இறக்கிவிட்டு, காத்திருந்தார்கள்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த காதலி, அவர்களின் வாகனத்திலேயே ஏறி, மட் டக்களப்பிற்கு போய்ச் சேர்ந்து விட்டார். சுரேஸை சடலமாகத்தான் இராணுவ புலனாய்வுத்துறையினர் கண்டெடுத்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் - இத் தாக்குதலை உயர்மட்ட உத்தர வின்றி கருணாவின் புலனாய்வு போராளிகள் செய்திருக்கவோ, தாக்குதலை செய்தவர்களிற்கு உதவியோ செய்ய முடியாது.
கிழக்கு பிளவை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கா கவே கால ஒழுங்கில் சம்பவங்களை குறிப்பிட்டு வருகின்றோம். கிழக்கு பிள விற்கு உண்மையில் தத்துவார்த்த அர்த்தங்களோ, கொள்கைரீதியான கார ணங்களோ கிடையாது.
அதுவெறும் மனிதர்களிற்கிடையிலான முரண்பாடு என்பதை இதை படிப்ப வர்கள் புரிந்துகொள்ளலாம். பிளவின் பின்னரே அதற்கு தத்துவார்த்த அர்த் தங்களை உருவாக்க முயன்றார்கள்.
இதை உருவாக்கியதில் சிவராம் முக்கியமானவர். (சிவராமிற்கு புலிகள் மாம னிதர் கௌரவம் வழங்கியதும் இந்த மோதலின் தொடர்ச்சி தான்) மற்றதெல் லாம், அரசினால் இரகசியமாக இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டவர்கள்.
அவர்களை பற்றிய விபரங்களையெல்லாம் இந்த பகுதியில் சொல்வோம். சிவராம் கொலையில் மண்டைப்பீஸ் சுரேஷ் தொடர்புபட்டுள்ளார். சிவராம் கொலையை பற்றி பின்னர் விரிவாக குறிப்பிடுவோம்.
அப்போது, சுரேஸின் பங்கு என்னவென்பதை வாசகர்கள் அறிந்து கொள்ள லாம்.
தன்முனைப்பு (Eco) தான் இந்த பிளவின் பின்னணி காரணி. அற்புதன் மாஸ்ரர் மீதான தாக்குதலிற்கு முன்னர் இன்னொரு சம்பவமும் நடந்தது.
கிழக்கு அணிகள் வன்னியிலிருந்து மீண்டும் கிழக்கிற்கு திரும்பியிருந்த சம யத்தில், கிழக்கு பல்கலைக் கழகத்திற்குள் ஒரு உள்வீட்டு மோதல் ஏற்பட்டது. அடுத்த துணைவேந்தர் யார் என்ற போட்டி ஏற்பட்டது.
அதிகார போட்டி ஏற்படுமிடங்களில் மனித மனங்கள் விதவிதமான சூழ்ச்சிப் பொறிகளை ஏற்படுத்தும். அதிலும் படித்தவர்கள் என நமது சமூகத்தில் கௌர வமாக பார்க்கப்படுபவர்கள் தமது நலன்களிற்காக எந்தவகையான சூழ்ச் சிக்கும் தயாராக இருப்பார்கள் என்பதற்கு கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் உதாரணம்.
2000களில் கிழக்கு பல்கலைகழகத்தில் துணைவேந்தருக்கான போட்டி ஏற்பட் டது. இந்த போட்டியில் சம்பந்தப்பட்டவர்களை நாம் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். அப்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலர் கிழக்கு பல் கலைகழகத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இருந்தனர்.
கிழக்கை சேர்ந்த சில விரிவுரையாளர்களும் துணைவேந்தர் பதவியை குறி வைத்தனர். இந்த சமயத்திலேயே முதன்முதலாக வடக்கு, கிழக்கு பிளவுக் கான அத்திவாரம் இடப்பட்டது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிக்கு வராமல் தடுப்பதற் காக, கிழக்கை சேர்ந்தவர்கள்தான் கிழக்கு பல்கலைகழகத்திற்கு துணை வேந்தராக வர வேண்டுமென்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.
இது வடிவ மாற்றம் பெற்று, வடக்கிலுள்ளவர்கள் கிழக்கு மக்களை சமமாக மதிப்பதில்லை, கிழக்கின் அதிகார பீடங்களையும் வடக்கிலுள்ளவர்களே ஆக் கிரமித்துள்ளனர் என்ற ரீதியில் பிரசாரப்படுத்தப்பட்டது.
கிழக்கு துணைவேந்தர் சிக்கலை இரண்டு அணிகளும் விடுதலைப்புலிகளிடம் எடுத்து வந்தன. கிழக்கை சேர்த்தவர்கள் கருணாவை சந்தித்து, கிழக்கு துணை வேந்தர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் புலனாய்வுத்துறையின் மட்டக்களப்பு தலை வர்களை சந்தித்து பேசினர். அற்புதன் மாஸ்ரர், மனோ மாஸ்ரர் போன்ற வர்களுடனேயே இப் பேச்சுக்கள் நடந்தன.
கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் மோதல் பற்றிய செய்திகள் அப்பொழுது ஊடகங்களிலும் வெளியாகியிருந்ததால், அதை விலாவாரியாக குறிப்பிடா மல் விட்டு, அந்த சமயத்தில் வெளியில் வராமல் இருந்த உள்ளக தகவல் களை மட்டும் சொல்கிறேன்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள், மட்டக்களப்பில் உள்ள புல னாய்வுத்துறை பொறுப்பாளர்களை சந்தித்து பேசும் விடயத்தை அறிந்ததும், கருணா ஒருமுறை அவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கையும் விட்டிருந் தார்.
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!