728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 59

கடந்த பாகங்களில் தளபதி சொர்ணம் குறித்த தகவல்களை பார்த்தோம். 

அப்பொழுதே குறிப்பிட்டிருந்தோம், சொர்ணத்தை தொடர்ந்து விடுதலைப் புலி களின் பெருந்தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் தொடர்பான தகவல்களை தரப்போவதாக. ஆனால் அதற்கு முன்னர் ஒரு இடையீட்டு நிகழ்வை குறிப் பிட்டாக வேண்டும்.

இந்த தொடரில் அதை பேச பொருத்த மான சமயம் இதுவாகத்தான் இருக் கும். மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந் தோம். ஒரு வரியில் கடந்து செல்லும் காடு அல்ல அது. 

விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத ஒரு காடு அது. இந்த வாரம் காடு, அதில் செல்வாக்கு செலுத்திய தளபதிகள், காட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி பேசலாம். மண லாறு காடு எனப்படுவது முல்லைத் தீவின் செம்மலைக்கு அப்பால் நாயாற்று பாலத்தின் முடிவிலிருந்து ஆரம்பிக்கிறது. 

கடற்கரையோரமாக கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கிராமங்கள் மண் கிண்டிமலை, தண்ணிமுறிப்பு காடு என்பவற்றை எல்லையாக கொண்டது. வடக்கில் உள்ள இயற்கையான பெருங்காடுகளில் முதன்மையானது மண லாறு.

1985 களிலேயே மணலாற்று காட்டில் விடுதலைப்புலிகள் தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்து விட்டனர். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்தவர் பசீலன். அவரது அணியில் பால்ராஜ், நவம், வெள்ளை முதலான சுறுசுறுப்பான போராளிகள் இருந்தனர். பால்ராஜ், நவம் இருவரும் கொக்குத் தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காடு பற்றிய பரிச்சயம் அதி கமாக இருந்தது. 

இதில் நவம்தான் பிரதானமானவர். திசையறி கருவி இல்லாமல் காட்டின் ஒவ் வொரு துண்டு நிலத்தையும் நினைவில் வைத்திருந்தார். அப்போது இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று முல்லைத்தீவில் இருந்தது. அவர்களிட மிருந்து தப்பிக்க மணலாற்று காட்டுக்குள் சில தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். 

அதுபோல தண்ணிமுறிப்பு காட்டிலும் தங்கியிருந்தனர். இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. இந்திய இராணுவம் வந்ததுமே, புலிகள் செய்தது- மணலாற்று காட்டுக்குள் மறை விடங்களை உருவாக்கியதுதான். 

இந்திய இராணுவம் எதிர்பார்க்காத இடமாக இருக்க வேண்டுமென சிந்தித்த தில் முல்லைத்தீவை பிரபாகரன் தேர்வு செய்தார். முல்லைத்தீவில் மண லாற்று காட்டை பசீலன் தேர்வு செய்தார்.

உடனடியாக காட்டுக்குள் சீமெந்தாலான முகாம்கள் அமைக்கப்பட்டன. இப்படி இரண்டு முகாம்கள் காட்டின் மையத்தில் உருவாக்கப்பட்டன. அதில் முதன் மையான முகாமில் சீமெந்தாலான பதுங்கு குழியும் அமைக்கப்பட்டது. 

இந்தியா- புலிகள் மோதல் ஆரம்பித்தபோது பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடத்தை குறிவைத்து 1987 இல் சீக்கியபடைகள் கொக்குவிலில் ஹெலிகொப்ரரில் ஒரு தரையிறக்கம் செய்தன. 

பிரபாகரனை உயிருடன் அல்லது பிணமாக பிடிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் அவர் கள் தரையிறங்கியபோது பிரபாகரன் வேறு இடத்திற்கு மாறி விட்டார். தரையிறங்கிய அணியையும் புலிகள் அழித்தார்கள். இதன்பின் பிரபாகரன் வன்னிக்கு சென்று மணலாற்று காட் டுக்கு சென்றுவிட்டார்.

பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்ற குழப்பம் இந்திய இராணுவத்துக்கு. யாழ்ப்பாணத்திலா, கிழக்கிலா, வன்னியிலா என தலையை பிய்த்து கொண் டிருந்தனர். பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய ஒரு சூழ்ச்சிகரமான திட்டம் போட்டனர். புலிகளுடன் ஒரு இரகசிய பேச்சை ஆரம்பித்தனர். 

இந்தியாவின் சூழ்ச்சியை புலிகள் அறியவில்லை. பேச தொடங்கினார்கள். இந்தியா ஒரு சமரச திட்ட வரைபை கொடுத்தது. அதை தலைவருடன் ஆலோ சித்துதான் பதிலளிக்கலாமென புலிகளின் பிரதிநிதிகள் சொல்லி விட்டனர். 

இந்திய இராணுவமும் “ஆஹா… தாராளமாக ஆராய்ந்து வாருங்கள்“ என சொன்னார்கள்.அந்த திட்டத்துடன் புலிகளின் தளபதி லெப்.கேணல் ஜொனி புறப்பட்டார். (இவர் வடமராட்சியின் 1ம் கட்டை பகுதியை சேர்ந்தவர். நல்ல தொழில்நுட்ப அறிவுள்ளவர். 

வெடிபொருள் தயாரிப்பிலும் வல்லவர். பின்னாளில் புலிகள் தயாரித்த அதி சக்தி வாய்ந்த மிதிவெடிக்கு ஜொனி என இவரது பெயரையே இட்டனர்) ஜொனி கிளிநொச்சிக்கு வந்து, பரந்தன் வீதியால் முல்லைத்தீவை நோக்கி திரும்பினார். 

ஜொனியின் பயணத்தை இந்திய உள வாளிகள் அவரே அறியாமல் பின் தொடர்ந்தனர். ஜொனி விசுவமடுவை நெருங்க, பிரபாகரன் வன்னிக்காட்டுக் குள்தான் இருக்கிறார் என்பதை இந்திய இராணுவம் புரிந்து கொண்டது. இனி ஜொனி தேவையில்லை. 

விசுவமடுவில் ஜொனியை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது.மணலாற்று காட்டுக்குள் புலிகளை அழிக்க ஒப்ரேசன் செக்மேற் 1,2,3 என இந்தியா பெரு மெடுப்பில் படைநடவடிக்கை செய்தது. இலங்கையில் இந்தியப்படைகளை வழிநடத்தின லெப்.ஜெனரல் கல்கட் நேரடியாக இந்த நடவடிக்கைகளை வழி நடத்தினார். 

ஒருமுறை அவருக்கே புலிகள் மரணபயம் காட்டினர். நித்திகைகுளத்தில் கல்கட் ஹெலிகொப்ரர் மூலம் வந்திறங்கியபோது, புலிகள் பதுங்கித் தாக்கு தல் மூலம் ஹெலியை அழிக்க முயன்றனர். ஆர்.பி.ஜி தாக்குதலில் ஹெலி மயிரிழையில் தப்பியது. 

கல்கட் பதுங்குகுழிக்குள் பாய்ந்து விட்டார். இந்த ஆர்.பி.ஜி தாக்குதலிற்கு சென்றவர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் சொர்ணம். அவர்தான் ஆர்.பி.ஜியை அடித்தார். மற்றவர் தேவன். கடற்புலிகளில் இருந்தவர். கிட்டு பாவித்த ரிவோல்வரை இறுதிவரை வைத்திருந்தவர். 

இந்திய படைகளில் கூர்கா ரெஜிமென்ற் விசேட பயிற்சிபெற்ற கொமாண் டோக்கள். மணலாற்று காட்டுக்குள் அவர்கள்தான் இறக்கப்பட்டனர். கூர்க் காகள் கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்க மாட்டார்கள் எனப்படு வதுண்டு. மணலாற்றில் கூர்க்காக்கள் கத்தியை போட்டுவிட்டு தப்பியோடி னார்கள்.

உணவு, மருந்து, வெடிபொருள் தடையை சமாளித்து புலிகள் போரிட்டனர். அப்போது புலிகளின் களஞ்சியம் மர உச்சிகள்தான். சிறிய சிறிய பொதி களாக்கி, மரஉச்சியில் கட்டி தொங்கவிட்டுவிடுவார்கள். பின்னர் உணவுத் தேவைக்கு அவற்றை எடுப்பார்கள். சில சமயங்களில் மரத்தினடியில் இரா ணுவம் இருக்கும். 

இரவில் கயிறு கட்டி இராணுவத்திற்கு தெரியாமல் உணவை இறக்குவார்கள். சமைக்க முடியாது. புகை எழுந்தால் புலிகளின் இருப்பிடத்தை வானத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்திய ஹெலிகொப்ரர் கண்டுபிடித்துவிடும். இப்படி பெரும் சவாலின் மத்தியிலேயே காட்டுக்குள் புலிகள் போரிட்டனர்.

உணவு, தண்ணீர் பிரச்சனைகளை சமா ளித்து புலிகள் தாக்கு பிடித்ததற்கு முக்கிய காரணம்- காட்டை அறிந்த சில போராளி கள் இருந்தது. அந்த சில போராளிகளில் முதன்மையானவர் லெப்.கேணல் நவம். 

நெடுங்கேணி பாடசாலையில் இருந்த இந் திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி யதில் காயமடைந்து பின்னர் மரணமானவர். ஏற்கனவே வெடிவிபத்தொன்றில் ஒரு கையை மணிக்கட்டுடன் இழந்தவர். 

ஒற்றைக்கையுடன்தான் மணலாற்று காட்டுக்குள் நின்று இந்தியர்களிற்கு தண்ணி காட்டினார். நவம், மலையக பின்னணியை உடையவர்.இந்திய இரா ணுவத்தின் முற்றுகைக்குள்ளால் அவர்களே அறியாமல் சென்று உணவு, தண்ணீர் எடுத்து வருவார். 

மணலாற்று காட்டில் பிரபாகரனுடன் நிலை கொண்டிருந்த அணிகளிற்கு நவம் தான் கட்டளையதிகாரி. பால்ராஜூம் ஒரு அணியை வழிநடத்தினார். அது காட் டோரமாக இராணுவத்துடன் மோதிக்கொண்டிருந்தது. யுத்தத்தில் அங்கங் களை இழந்த புலிகளிற்கு ஒரு கல்விக்கூடம் அமைத்து அதற்கு லெப்.கேணல் நவம் அறிவுக்கூடம் என பிரபாகரன் பெயர் சூட்டினார்.

மணலாற்று காட்டில் இந்தியர்களின் முற் றுகையை உடைத்ததில் நவத்தின் பங்க ளிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பிரபாகரனே சொன்னார். 2000 ஆம் ஆண்டு, நவம் அறிவுக்கூட ஆண்டு நிறைவு விழா வில் விருந்தினராக கலந்து கொண்டார் பிரபாகரன். 

மேடையில் பிரபாகரன் உரையாற்ற ஆரம் பிப்பதற்கு முன்னர், பின்பக்கமாக திரும்பி நவத்தின் உருவப்படத்தை நன்றாக பார்த் தார். பின், ஒரு வரியில் நவத்தின் முக்கி யத்துவத்தை சொன்னார். “நவம் மட்டும் இல்லாவிட்டால் நான் இப்போது இந்த மேடையில் நின்றிருக்க மாட்டேன்“. 

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ‘நவம் இல்லாவிட்டால் நான் இப்போது இருந்திருக்க மாட்டேன்’: நெகிழ்ந்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 59 Rating: 5 Reviewed By: Thamil