நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் நேற்று (23) தகனம் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி மேற்கொள் ளப்பட்ட இந்த இனவாத நடவடிக்கையின்போது, பொலிசாரின் நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகளால் உடல் தகனம் செய்யப்பட்டுள் ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபருக்கு நேற்று முன்தினமே (22) கடிதம் மூலம் அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி. விக்னேஸ்வரன்.
நேற்று முன்தினம் மாலை, வடமாகாண சிரேஷ்ட உப பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடித மொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை நடக்கவுள்ள நிலையிலேயே, தகனம் செய்யும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், உடனடியாக தலையிட்டு இதை தடுத்து நிறுத்துமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.
எனினும், நேற்று உடல் தகனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.