
அதாவது இந்த நாடுகளை அச்சாக வைத்து சுற்றிக்கொண்டிருப்பார்கள். ஆயு தம் கிடைக்கும் நாடுகளிற்கு கப்பல் அனுப்பப்படும். அனேகமாக கிழக்காசிய நாடுகளில்தான் புலிகளிற்கு ஆயுதங்கள் கிடைத்தன.
அங்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு, மலேசிய, சிங்கப்பூர் கடற்பரப்பிற்கு அண்மையாக வந்து, இந்தோனேசியா விற்கும் சிங்கப்பூரிற்குமிடையிலான கடற்பரப்பினால் பயணித்து, நிக்கோபர் தீவுகளின் உள் பக்கமாக ஏதாவதொரு ஆளற்ற தீவிற்கு அண்மையாக கப்பலை நிறுத்தி வைத்து விடுவார்கள்.
ரினியூன் தீவுகளில் இருக்கும் அமெரிக்க ரடரால் இவற்றை கண்காணிக்க முடியாது. தப்பித்தவறி அவர்களின் கண்ணில் பட்டாலும், ‘அது இந்தியர்களின் ஏரியா… நமக்கு என்ன’ என இருந்து விடுவார்கள். நிக்கோபர் தீவு இந்தியர்க ளின் கடலாதிக்கத்திற்கு உட்பட்ட இடம்.
ஆனால் இந்தியர்களின் கடற்படை, கடலோர காவல்படையின் இலட்சணம் முன்னர் எப்படியிருந்ததென தெரியும்தானே. அந்தமான் தீவுகளில் இந்திய கடற்படை தளம் இருந்தது. ஏதோ தண்டத்திற்கு இருப்பதை போல இருந்தார் கள்.
அவர்களிடம் நிக்கோபர் தீவுகளை கவனிக்கும் வசதியிருக்கவில்லை. நிக்கோ பரின் புவியியல் அமைவிடமும் இதற்கு ஒரு காரணம்.
நிக்கோபர் தீவுகளில் நிறுத்தப்படும் கப்பல் சில நாட்களும் தரித்து நிற்கலாம், ஆறு ஏழு மாதங்களும் தரித்து நிற்கலாம்.
கடற்புலிகள் கிளியர் செய்து எடுப்பதை பொறுத்தது அது. ஆயுதக்கடத்தல் பல பிரிவுகளின் ஒருங்கிணைந்த வேலையென்பதை முன்னர் சொல்லியிருந் தேன். ஆயுத பேரத்தை முடிப்பது ஒரு பகுதி, பணம் செலுத்தி ஏற்றும் விபரங் களை உறுதிசெய்வது ஒரு அணி, ஆயுதங்களை ஏற்றி வருவது ஒரு அணி.
இந்த அணிதான் இப்பொழுது நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையில் கப்பலுடன் வந்து நிற்கிறது.
அடுத்த அணி- வன்னியில் இருந்த கடற்புலிகள். அவர்கள் இனி ஆயுதங்களை வாங்க வேண்டும். ஒரு பெரிய கடற்சமரிற்கு தங்களை தயார்படுத்துவார்கள். அதன்பின்னரே ஆயுதங்களை இறக்க தயாராகுவார்கள்.
முல்லைத்தீவில் இருந்து செல்லும் கடற்புலி படகுகள் ஆழ்கடலில் ஆயுதக் கப்பலை சந்தித்து, ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கரை திரும்புவது தான் செயற்பாடு. அதை சாதாரணமாக சொல்லலாம். செய்வது கடினம். கடலில் டோரா படகுகளின் ரோந்து இருக்கும்.
முதலில் டோராக்களின் ரோந்து இல்லாத நாள், நேரம் பார்க்க வேண்டும். காங்கேசன்துறை கடற்படை தளத்தில் டோராக்கள் சில சமயம் குறைவாக இருக்கும். காங்கேசன்துறையில் இருந்து ரோந்து கிளம்பிய டோராக்கள் திரு கோணமலையில் கட்டப்பட்டிருக்கும்.
ஓய்வின் பின் அடுத்த சுற்றில் திரும்பி வருவார்கள். இதுதான் கடற்புலிகளிற்கு பொருத்தமான சமயம். பருத்தித்துறை, காங்கேசன்துறையில் டோராக்கள் குறைவாக இருக்கும் சமயம், ஒரு கடற்சண்டைக்கு தயாராக உள்ள சமயம் எல்லாம் பொருந்தி வந்தால், கடற்புலிகள் ஆயுதம் இறக்க தயாராகுவார்கள்.
இந்த தகவல் நிக்கோபர் தீவுகளில் நிற்கும் கப்பலிற்கும் அறிவிக்கப்படும். அவர்கள் சர்வதேச எல்லையை கடந்தால் அடுத்தது இலங்கை கடற் பரப்பு தான்.
புலிகளின் ஆயுதக்கப்பல் பாதை
பருத்தித்துறைக்கு அப்பாலான சர்வதேச கடற்பரப்பில்தான் ஆயுத பரிமாற்றம் நடக்கும். அதற்கு காரணம்- பருத்தித்துறை கடற்படை முகாமில் டோராக்கள் தரித்து நிற்பதில்லை. முல்லைத்தீவில் இருந்து கிளம்பும்போது கடற்படை யின் ரோந்தை கவனித்து, இரகசியமாக புறப்பட்டு விடுவார்கள்.
போகும்போது கடற்படையுடன் முட்டுப்பட்டு சண்டை நடந்தால் ஆயுதங் களை இறக்க முடியாது. காங்கேசன்துறை பக்கம் ஒரு அணி, திருகோண மலை பக்கம் ஒரு அணி அரண் அமைக்க, நடுப்பகுதியால் ஆயுதங்கள் கரை க்கு கொண்டு வரப்படும்.
முல்லைத்தீவில் இருந்து கிளம்பும்போதே கடற்படையுடன் முட்டுப்பட்டால், நீண்டநேரம் கடற்சமர் புரிய வேண்டும். அது சாத்தியம் குறைந்தது. கடற்படை தன்னிடமுள்ள முழு வல்லமையையும் திரட்டி வந்தால் எதிர்கொள்வது ஆரம்பத்தில் கடற்புலிகளிற்கு சிரமமாக இருந்தது.
ஓரிரண்டு கரும்புலி தாக்குதல்களுடன் சில மணி நேரங்கள் கடற்படையை சமாளிக்கலாம். ஆனால் நீண்டநேரம் சமாளிக்க முடியாது. ஆனால் 1999, 2000 களில் இதில் கடற்புலிகள் ஓரளவு வளர்ச்சியடைந்து விட்டனர். முழு நாளும் கடலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சம்பவங்களும் உள்ளன.
அப்பொழுது பகலிலும் ஆயுதங்களை இறக்கினார்கள். சில விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கடலில் உலங்கு வானூர்திகளையும் சுட்டு வீழ்த்தியிருந் தனர். இதன்பின்தான் அரசு கிபிர், மிக் போன்றவற்றை கடலில் பயன்படுத்த ஆரம்பித்தது.
கடற்படையின் ரோந்து கப்பல்கள் இல்லாத சமயத்தில் கடற்புலிகளின் விநி யோக அணிகள் பருத்தித்துறைக்கு அப்பால் ஆழ்கடலிற்கு செல்ல, காங்கேசன் துறை மற்றும் திருகோணமலை கடற்பரப்பிலிருந்து வரும் கடற்படையை தடுக்க தாக்குதலணிகள் செல்லும்.
சில சமயம் திசைதிருப்ப காங்கேசன்துறை, திருகோணமலை, மன்னார் பகுதி களில் கடற்படை தளங்கள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் மீது தாக்கு தல் நடத்தப்படும். இதனால் கடற்படை பதற்றமடைந்து, அங்கு தாக்குதல் பட குகளை வரவழைத்து கடலில் தேடுதல் நடத்தும்.
இந்த இடைவெளிக்குள் முல்லைத்தீவில் புலிகள் ஆயுதங்களை இறக்கிவிடு வார்கள்.
முல்லைத்தீவில் இருந்து அணிகள் வரும் என சொல்லப்படும், ஆனால் பல சமயங்களில் ஆயுதக்கப்பலும், கரையிலிருந்து செல்லும் விநி யோக அணிகளும் சந்திக்காமலும் போகலாம்.
கடலில் ஏற்படும் திடீர் மோதல், ஆயுதக்கப்பலிற்கு ஏற்படும் திடீர் பிரச்சனை கள் காரணமாக திட்டம் குழம்பும்.
மீண்டும் அடுத்த வாய்ப்பு வரும்வரை நிக் கோபர் தீவுகளில் கப்பலை கட்ட வேண்டும். அதுவரை கப்பலில் உள்ள உணவைத்தான் சாப்பிட்டு சமாளிக்க வேண்டும்.
கப்பலில் உள்ள மருந்துகளை பாவித்து நோய்களை தீர்க்க வேண்டும். ஒரு வருக்கு கடுமையான நோய் ஏற்பட்டால், அவருக்காக கப்பலை ஆயுதத்துடன் திருப்பி கொண்டு செல்ல முடியாது.
ஆயுதத்துடன் கப்பலை எந்த கரைக்கு கொண்டு செல்வது?
இதற்குள் முல் லைத்தீவில் இருந்து வரும் விநியோக அணியை சந்தித்தால் நோயாளியை யும் கொடுத்து விடுவார்கள். அப்படி நடந்தால், அவர் அதிஸ்டக்காரன். இல்லா விட்டால் கப்பலிற்குள்ளேயே மரணமாக வேண்டியதுதான்.
இப்படி மரணமானவர்கள் அனேகர்.
ஆரம்பத்தில் ஆயுதக்கப்பலில் பொது மக் களே வேலை செய்தனர். இப்படி நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள், மோதல்க ளில் இறப்பவர்கள் தொகை அதிகரித்ததையடுத்து ஆயுதக் கப்பல்களையும் போராளிகளிடம் ஒப்படைக்க புலிகள் தீர்மானித்தனர்.
1990 இன் நடுப்பகுதியில் இருந்து போராளிகளே முழுமையாக ஆயுதக்கப்பல் களை பொறுப்பேற்று விட்டனர்.
அதற்கு முன்னர் சாதாரண பொதுமக்களிடம் ஆயுதக்கப்பல் இருந்த சமயத்தில் சுமார் 10 தொடக்கம் 12 வரையானவர்கள் நோய்வாய்ப்பட்டு கப்பலில் இறந்தனர்.
இது நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்ட சமயத்தி லேயே நடந்தது. இறந்தவர்களின் உடல்களை நிக்கோபரின் ஆளற்ற தீவொன் றில் புதைத்தார்கள். அங்கு அவர்களிற்காக ஒரு நினைவுத்தூபியும் கட்டப் பட்டுள்ளது.
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!