இறுதி யுத்தத்தில் புலிகள் ஏன் தோல் வியடைந்தார்கள் என்பது இன்று வரை முக்கியமான பேசுபொருள். சர் வதேச நாடுகளின் கூட்டிணைவு, போர் விதி முறைகளை மீறி ஆயுதங் களை பயன்படுத்தியது என பலரும் சொன்னாலும் சரியான தகவல்கள் இது வரை வெளியாகியிருக்கவில் லை. தோல்விக்கான காரணங்களை துல்லியமாக யாரும் அடையாளம் காணவில்லை.
சர்வதேச கூட்டிணைவு தோல்விக்கு கார ணமென்றபோதும் அந்த கூட்டிணை வால் எப்படியான பாதகங்கள் நிகழ்ந்ததென்பது பற்றிய விலாவாரியான தகவல்கள் வெளி யாகியிருக்கவில்லை. அவை வெளிவராத பட்சத்தில் இறுதி யுத்த விவகாரம் சிதம்பர இரகசியத்தை போலாகிவிடும்.
புலிகளின் தோல்விக்கு பிரதானமான கார ணங்கள் சில உள்ளன.
1. புலிகளின் கடல் பலம் முடக்கப்பட்டது.
2. கடல்பலம் முடக்கப்பட்டதுடன் இணைந்ததாக ஆயுத இறக்குமதி தடை
செய்யப்பட்டது.
3. புலிகளின் புலனாய்வு கட்டமைப்பை தென்னிலங்கையில் சீர் குலைத்தமை.
செய்யப்பட்டது.
3. புலிகளின் புலனாய்வு கட்டமைப்பை தென்னிலங்கையில் சீர் குலைத்தமை.
4. மரபுவழி யுத்தத்தை விரும்பிய புலிகள் நவீனபோரியல் முறைமைக்கு
தங்களை தயாராக்கி கொள்ளாமை.
தங்களை தயாராக்கி கொள்ளாமை.
5. புலிகளின் பிரதேச இரகசியங்களை இலங்கை பாதுகாப்புத்துறை விரல்
நுனிக்கு கொண்டு வந்தமை.
நுனிக்கு கொண்டு வந்தமை.
6. இலங்கை பாதுகாப்புத்துறை பற்றிய அலட்சியம்.
7. நீண்ட சமாதானம்
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தமைக்கான நேரடி காரணங்கள் இவை. சர்வதேச கூட்டிணைவு போன்ற மறைமுக காரணங்கள் ஏற்படுத்திய நேரடி விளைவுகள் இவை.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை யில் மரபுவழி யுத்தத்தையே விரும்பினார்கள்.
எல்லா அமைப்புக்களும் சிறிய குழுக்களாக இருக்க, முறையான இராணுவ கட்டமைப்பை உருவாக்குவதில் பிரபாகரன் ஆர்வமாக இருந்தார். தேவை யான ஆயுதம், முறையான பயிற்சி, படையணி கட்டமைப்பு என அவர் முறை யான சிந்தனையை கொண்டிருந்தார். அதுதான் புலிகளின் அசாதாரண வெற்றி களிற்கு காரணமாக இருந்தது.
புலிகளை சிறிய அணியாக எதிராளிகள் கணக்குப்போட்டுக் கொண்டிருக்க, அவர்கள் தமக்குள் நிறைவான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் கள். இந்திய இராணுவம் புலிகளை கெரில்லாக்களாக கருதியது. ஆனால் அந்த சமயத்தில் புலிகள் கெரில்லாவும் அல்லாத மரபு இராணுவமும் அல்லாத இடைப்பட்ட வடிவமொன்றை எடுத்துவிட்டார்கள்.
இந்திய படைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது புலிகள் மரபு இராணுவ த்தை போன்ற பாணியில் எதிர்தாக்குதல் நடத்தியபடி பின் வாங்கினர். இதற்கு முன்னரே யாழ்ப்பாண கோட்டையை முற்றுகைக்குள் வைத்திருந்து, வடக்கி லுள்ள படையினரை முகா ம்களிற்குள் முடக்கி ஒரு அரை மரபு இராணுவ பகுதியை எட்டி விட்டனர்.
1986 இல் ஒப்ரேசன் லிபரேசன் மூலம் இராணுவம் கைப்பற்றிய நெல்லியடி மத் தியமகா வித்தியாலயம் மீதான தாக்குதல் கூட அரை மரபுவழி தாக்குதல் தான்.
பின்னாளில் 1991 இல் ஆனையிறவு பெருந்தளம் மீதான ஆகாய கடல் வெளி சமர்தான் புலிகளின் மரபுவழி இராணுவமாகியதாக ஆய்வாளர்கள் கூறி னாலும், அதற்கு முன்னரே மரபுவழி இராணுவ தகுதியை புலிகள் எட்டத் தொடங்கி விட்டனர்.
மரபுவழி இராணுவமாக புலிகளை மாற்றுவது பிரபாகரனின் இலட்சிய மாக இருந்துள்ளது. அதனை திறம்பட செய்துவிட்டார். இந்த சமயத்தில் எழு ச்சி பெற்ற தளபதிகளான பால்ராஜ், சொர்ணம், அன்பு, பானு, தீபன் போன் றவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போரில் ஜொலித்தார்கள்.
கெரில்லா அனுபவங்களுடன் உருவான மரபு போருக்தியை புலிகள் சிறப்பாக செயற்படுத்தினார்கள். உதாரணமாக சிலவற்றை குறிப்பிடலாம். நள்ளிரவின் பின் முகாமிற்குள் தாக்குதலை நடத்துவது, எதிராளிகளின் நிலையை இரகசி யமாக ஊடறுத்து கடந்து பின் பக்கத்தால் தாக்குதலை ஆரம்பிப்பது, இரகசிய மான நகர்ந்து ஆயுதக்கிடங்குகளை தகர்ப்பது என புலிகள் புதிது புதிதாக உத்தி களைக் கையாண்டு கொண்டிருந்தார்கள்.
இலங்கைப்படைகள் மரபுப்படையாக இருந்தாலும் புலிகளின் போருத்திகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு நெருக்கடியான சம யத்திலும் மிகநுணுக்கமான திட்டமிடலுடன் புலிகள் ஒவ்வொரு கள முனை யையும் திறந்தார்கள்.
ஒப்ரேசன் லிபரேசன் சமயத்தில கரும்புலி தாக்குதல் வடித்துடன் நெல்லிய டியில் பேரதிர்ச்சி கொடுத்தனர். 1992 இலும் இப்படியொரு சம்பவம் நடந்தது. 1991 இல் புலிகளை மரபுப்படையணியாக உலகம் அங்கீகரித்த சமர் ஆகாய கடல் வெளி சமர் நடந்தது. 53 நாட்கள் நீடித்த பெருஞ்சமர்.
புலிகள் இப்படியொரு சமரை செய்வார்களென யாரும் எதிர்பார்க்கவில்லை. இலக்கை அடைய முடியாத அந்த சமரில் 573 போராளிகள் மரணமானார்கள். எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் அதிகளவான வெடிபொருட்களை புலிகள் செலவிட்டு விட்டனர்.
ஆனால் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. அமைப்பிற்குள் பெரும் வெடி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. கையிருப்பில் இருந்த வெடிபொருள் அடுத்த நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கவில்லை. அப்பொழுது புலிகள் கடல் மார்க்கமாக ஆயுதம் கொண்டுவர ஆரம்பிக்கவில்லை.
இராணுவத்தளங்களை தாக்கித்தான் ஆயுதங்களை எடுத்தார்கள். ஆனால், இர ண்டாம் கட்ட ஈழப்போர் தொடக்கத்தில் கோட்டை, கொக்காவில், கொண்டச்சி முதலான படைமுகாம்களை தாக்கி அழித்துவிட்டனர். அதன்பின் பாதுகாப் பற்ற படைமுகாம்களை வடக்கில் அகற்றி விட்டனர்.
இச் சமயத்தில் புலிகள் கட்டைக்காடு மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தினர். ஆனையிறவு பெருந்தளத்துடன் இணைந்ததாக இருந்த கட்டைக்காடு தளம் ஆயுதக்களஞ்சியமாகவும் இருந்தது.
சொர்ணம் தலைமையில் கட்டைக் காடு மினிமுகாமை தாக்கியழித்து சுமார் 150 வரையான எப்என்சி (FNC) துப்பாக்கிகளையும், பெருமளவான வெடிபொருட்களையும் கைப்பற்றி னார்கள். அது புலிகளிற்கு பேருதவி யாக இருந்தது. 1996 இல் முல்லைத் தீவு படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இன்னொரு பாய்ச்சலே.
நான்காம் கட்ட ஈழப்போரில் இப்படியான பாய்ச்சல்களை புலிகளால் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம், இராணுவத்தை குறைவாக எடை போட் டதும், மரபுவழி போரில் தம்மை புதுப்பித்துக் கொள்ளாததுமே.
2002 இல் ஏற் பட்ட சமாதான உடன்படிக்கை நீண்டுகொண்டு சென்ற சமயத்தில் இராணுவம் தன்னை போதுமானளவு புதுப்பித்துக்கொண்டது.
இதுவரை புலிகளுடன் போரிட்ட அனுபவத்தில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது. முக்கியமாக படையணியை பெருக்கினார்கள். மரபும், கெரில்லா வும் இணைந்த போருத்தியை கையாண்டார்கள். பெரும் ஆளணியை களமி றக்காமல் சிறு சிறு குழுக்களை களமிறக்கினார்கள்.
புலிகளின் முதுகுக்குப் பின்னால் தாக்கினார்கள். வானிலிருந்து இலக்குகளை அடையாளம் கண்டு, வானிலிருந்தும் தரையிலிருந்தும் துல்லியமாக தாக்கும் வல்லமையை பெற்றதுடன், அடையாளம் காணல், வான் மற்றும் தரைத் தாக் குதலை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.
கடல் நடவடிக்கையில் வான்படையின் துல்லியமாகத் தாக்கும் வல்லமை யைப் பயன்படுத்தினார்கள். புலிகள் பாணியில் சிறிய கலன்களை களமிறக் கினார்கள். புலனாய்வு தகவல்களை ஒரேகூரையின் கீழ் கொண்டு வந்து நட வடிக்கை பிரிவுகளை ஒருங்கிணைத்தார்கள்.
புலிகளின் உலகளாவிய வலையமைப்பை உடைக்க சர்வதேச ஒத்தாசை களை பெற்றார்கள்.
2006இல் யுத்தம் ஆரம்பித்தபோது புலிகள் நினைத்ததை போல யுத்தம் இருக்கவில்லை. அவர்களால் இலகுவாக படைகளை எதிர் கொள்ள முடியவில்லை.
முக்கியமாக புலிகளால் ஒன்றுதிரள முடியவில்லை. தமது வழக்கமான உத் திகளுடன் போருக்குச் சென்ற புலி கள், போர்க்கள நிலவரம் தலை கீழாக மாறி யிருந்தபோது சற்றுத் தடுமாறிப் போனார்கள். இந்த தடுமாற்றத்திற்கு இன் னொரு காரணமுமிருந்தது.
அதற்கு காரணம் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி!
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!