728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 3 September 2019

பிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 04

தமிழீழ விடுதலையை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முப்பது வரை யான இயக்கங்களின் தலைவர்களில் மிக அறிவார்ந்தவர்களில் பாலகுமார னும் ஒருவர்.
உலக அரசியல், இடது சாரித்துவ கொள்கை, அரசியல் விஞ்ஞானம் என அறிவுபூர்வ உரையாடல்களிற்கு பால குமாரன் பொருத்தமானவர். ஆனால் ஒரு தலைவராக பாலகுமாரன் சோபி க்கவில்லை என்றுதான் கூற வேண் டும்.

ஈரோஸ் அமைப்பு கொண்டிருந்த ஆள ணி, ஆயுத தளபாட வசதிகளிற்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறைவானது. பாலகுமாரன் தீவிரமாக ஆயுத வழிமுறையை தலைமை தாங்க பொருத்தமானவரும் இல்லை.


ஆளணியில் சிறிய இயக்கங்கள் எல் லாம் பெயர் சொல்லும் விதமாக ஏதா வதொரு தாக்குதலை நடத்தியிருந்த போதும், ஈரோஸின் வரலாற்றில் அது மிஸ்ஸிங். ஈரோஸ் இயக்கத்தினர் நல்ல கருத்தியல்வாதிகளாக இருந் தார்கள். ஆனால் செயற்பாட்டாளர்க ளாக இருக்கவில்லை.

ஈரோஸ் அவ்வளவாக இராணுவ சிந்தனையுடன் இயங்காதது, புலிகளுடன் நெருக்கத்தை பேணியது போன்ற காரணங்களால், 1985 இல் புலிகள் மற்ற இயக்கங்களை தடை செய்தபோது ஈரோஸ் தப்பிப்பிழைக்க வழி சமைத்தது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல்.எவ் போன்ற என்பன இந்திய இராணுவத்தின் பின்னணியில் இயங்கின. புளொட் இலங்கை இராணுவத்தின் ஆதரவில் இயங் கியது. 

ஈரோஸ் யாருடைய ஆதரவில் இயங்கியது என்பதை அறுதியிட முடியாமல், “ஈரோஸ்தனத்துடன்“ இயங்கியது! இது ஈரோஸ்காரர்களை கொச்சைப்படுத் தும் கருத்தல்ல. அப்பொழுது இருந்த சூழலில் ஒரு நுணுக்கமான இராஜதந்திர அணுகு முறையை அவர்கள் கையாண்டார்கள் என்றும் சொல்லலாம். 

ஏனெனில், இன்று திரும்பி பார்க்க எல்லாமே அழிவில்தான் முடிந்துள்ளன. அந்த நெருக்கடிக்குள் ஈரோஸ் போராளிகளை அதன் தலைமை காப்பாற்றி யிருக்கின்றது.

இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய சமயத்தில்தான் இயக் கங்களிற்கு சிக்கல் உருவானது. இயக்கங்களின் முன்னால் மூன்று தேர்வு இருந்தது. ஒன்று அரசுடன் இணைவது அல்லது இந்தியாவிற்கு செல்வது. இரண்டு புலிகளுடன் இணைவது. மூன்றாவது தனித்து இயங்குவது. தனித்து இயங்கும் வல்லமை புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களிற்கு இருக்க வில்லை. 

அதற்கு சில வருடங்கள் முன்னரே புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக் கங்களின் ஆளணியை புலிகள் கணிசமாக அழித்து விட்டார்கள். ஈழப் போரா ட்ட வரலாற்றில் நடந்த இந்த சகோதரப் படுகொலையை பின்னணியில் நின்று இந்தியாதான் நடத்தி முடித்தது. 

இயக்கங்கள் நிதானமாக, விழிப்பாக நடந்து இந்த சிக்கலை கடந்து ஒற்றுமை யாக செயற்பட்டிருந்தால் ஈழப்போராட்டம் வேறு முடிவுகளை எட்டியிருக்க லாம். ஆனால் அது நடக்காதது உண்மையில் துரதிஸ்டமே. இந்திய இராணு வம் வெளியேறியபோது ஈரோசும் உறுதியான முடிவெடுக்க வேண்டிய நிலை யேற்பட்டது. 

அப்பொழுது ஈரோஸிற்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்திய இராணுவம் வெளியே றியபோது, ஈரோஸ் பிரமுகர்கள் கொழும்பில் தங்கியிருந்தனர்.

பாலகுமாரன் யாழ்ப்பாணம் வருவதென்ற முடிவை எடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் காட்டினார். அப்போதைய அரசியல் சூழலில் பாலகுமாரனிற்கு வேறு வழிகள் இருக்கவில்லை. 

அப்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளியான புலிகளின் ஆதரவு பத்திரிகையான ஈழநாட்டில் ஒரு கருத்துப்படம் வெளியாகியிருந்தது. மதில் மேல் பூனை மாதிரி, மதில் மேல் பாலகுமாரன் இருக்கும் படம். புலிகளிடம் வரப்போகின் றாரா, அரசுடன் இருக்கப் போகிறாரா என்பதே அதன் கேள்வி. ஈரோஸின் ஒரு பகுதியினர் இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் முடிவை எடுத்தனர். 

இன்னொரு பகுதியினர் வீட்டிற்குச் சென்றனர். தலைவர் பாலகுமாரன்- ஈரோஸ் என்ற அமைப்பையே கலைத்துவிட்டு, யாழ்ப்பாணத்திற்கு புலிக ளிடம் வந்தார். அவருடன் சேர்ந்து ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் புலிகள் அமைப்பிற்கு வந்தார்கள். 

சிலர் போராளியாகவும் இருந்தார்கள். புலிகளின் நீதி நிர்வாகத்துறை பொறுப் பாளராக இருந்த பரா அவர்களில் ஒருவர். பலர் புலிகள் அமைப்பில் ஊதியம் பெறும் பணியாளர்களாக செயற்பட்டார்கள். வர்ணராமேஸ்வரன், சின்னபாலா போன்றவர்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வர்ணராமேஸ்வரன் பின் னர் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். 

சின்னபாலா பின்னர் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டுச் சென்று, கொழும்பில் ஈ.பி.டி.பியின் ஊடகத்தில் பணியாளராக இருந்தார். பின்னர், இனம் தெரியாதவர்களால் அவர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்கு புலி களை குற்றம் சொல்பவர்களும் உள்ளனர். 

ஆனால், வலுவான குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி மேல்தான் உள்ளது. பாலகுமார னிற்கு புலிகள் எந்த பொறுப்பும் வழங்கவில்லை. தமது இயக்கத்தில் இணை ந்த இன்னொரு இயக்க தலைவர் என்பதால் முக்கிய உறுப்பினர் என்று அழைத்து கௌரவம் வழங்கி, வீட்டில் உட்கார வைத்தனர். 

இது புலிகள் பாணி. கொள்கை முடிவு, தாக்குதல் விவகாரங்களில் பாலகுமார னுடன் புலிகள் ஆலோசிப்பதில்லை. இது பாலகுமாரனிற்கு ஆரம்பத்தில் வருத்தத்தை கொடுத்தது. தனிப்பட்ட உரையாடல்களில் அதை பதிவு செய் தார். 

என்றாலும், புலிகள் முடிவை மாற்றத்தால் பாலகுமாரனிற்குள் இருந்த வருத் தமே வழக்கமாகி விட்டது. எனினும், நெருக்கமானவர்களுடனான பேச்சில் அந்த வருத்தத்தை வெளிப்படுத்தவும் செய்வார்.

வன்னிக்கு புலிகள் சென்ற பின்னர் புதுக்குடியிருப்பில் பாலகுமாரனிற்கு வீடு வழங்கினார்கள். சமாதானத்தின் பின்னர், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதி யில் மாடி வீடொன்றை அமைத்துக் கொடுத்தார்கள். 

பாலகுமாரனின் மனைவி மருத்துவ மாது. இரண்டு பிள்ளைகள். ஒரு மகன். ஒரு மகள். இறுதியுத்தத்தின் ஆரம்ப சமயத்தில், புலிகள் கட்டாயமான ஆட் சேர்ப்பை ஆரம்பித்தார்கள். இதன் ஆரம்பகட்டத்தில் கட்டாயமான பிரச்சாரம் நடந்தது. வீதிகளில் செல்பவர்களை மறித்து, பிரச்சாரம் நடந்தது. 

கிட்டத்தட்ட கட்டாய ஆட்சேர்ப்பின் முதற்படி அது. உடையார்கட்டு பகுதியில் இந்த நடவடிக்கையின் முக்கியஸ்தராக பாலகுமாரன் இருந்தார். இந்த நடவ டிக்கையில் பாலகுமாரன் விருப்பத்துடன் ஈடுபடவில்லையென பாலகுமா ரனை தனிப்பட அறிந்தவர்கள் சிலர் இப்பொழுது சொல்கிறார்கள். 

ஆனால், அந்த சமாதானம் பாலகுமாரனை வரலாற்றின் பழியிலிருந்து விடு பட வைக்காது. இந்த அநீதியில் அவர் விரும்பாமல் ஈடுபட்டார் என்று சொல்ல முடியாது. 

காரணம், கட்டாய பிரசாரம், ஆட்சேர்ப்பில் ஈடுபட விரும்பாத சாதாரண போரா ளிகள் பலரே அதிலிருந்து விலகி யுத்தமுனைக்குச் சென்றனர். புலிகளின் முக் கியஸ்தரான பாலகுமாரன் ஏன் சிறு அதிருப்தியையும் பகிரங்கமாக வைக்க வில்லை? 

மாறான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத இயல்பு தான் பாலகுமாரனின் பலவீனமாக இருந்தது. ஒரு தலைவராக அவரால் உருவாக முடியாமல் போனதற்கு காரணமும் இதுதான். இறுதியுத்தத்தில் 2009 ஜனவரி அளவில் அவர் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் காயமடைந்தார். 

உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவம் மிலேச்சனமான தாக் குதல் நடத்தியபோது, அதில் காயமடைந்தார். உடையார்கட்டு பாடசாலை வைத்தியசாலையாக இயங்கி வந்தது. அந்த வைத்தியசாலைக்குள்ளிருந்து வெளியில் வந்தபோதே- வைத்தியசாலை வாசலில் காயமடைந்தார்.

காயமடைந்ததன் பின்னர் பாலகுமாரன் விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தொடர்புகள் அனைத்தையும் இழந்துவிட்டார். முன்னரும் அரசியல்துறை பொறுப்பாளர் மட்டத்திலான தொடர்பையும், நிகழ்ச்சிகளில் தளபதிகளை சந் திப்பவராகவும் மட்டுமே இருந்தார். 

பாலகுமாரன் மட்டுமல்ல, அரசியல்த்துறை உயர்மட்ட பொறுப்பாளர்கள் எல் லோருக்குமே இந்தகதிதான். அவர்களால் என்ன நடக்குமென்ற முடிவெடுக்க முடியவில்லை. புலிகளின் தலைமையின் முடிவை அறியவும் முடிய வில்லை. 

இப்பொழுது இலங்கை அரசியல் யாப்பு தொடர்பாக புத்தகம் எழுதி கூட்டத் தால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட புலிகளின் அரசி யல் ஆய்வாளர்கள் வலைஞர்மடத்தில் அருகருகாக குடியிருந்தனர். பால குமாரன், பரா உள்ளிட்டவர்களும் அந்த பகுதியில் அருகருகாக குடியிருந்த னர்.

 இந்த அணிகள் தமக்குள் கூடி யுத்தம் அப்படி முடியுமா, இப்படி முடியுமா என மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்ச்சி. தலைவரிடம் திட் டமுள்ளதா என்பதை அறிவதில் ஆர்வம் காட்டி, சாதாரண களத்திலிருந்து வரும் சாதாரண போராளிகளையும் பேட்டியெடுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்கள். 

தமிழ்ச் சூழலில் முறையான சிந்தனைக்குழாம் உருவாகாததற்கு, முறையான அரசியல் ஆய்வாளர்கள், ஆய்வுமுறைமை உருவாகாததற்கு அந்த சமயங்கள் முழுமையான சாட்சி. 

புலிகளின் காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் சம்பவங்களிற்கு பொழிப்பு கூறுபவர்களே. இதே ஆய்வுமுறை தான் இன்றுவரை தொடர்வது தமிழர்களின் துரதிஸ்டமே. யுத்தம் இறுகிக் கொண்டு வர, புலிகளின் தலைமை என்ன முடிவெடுக்கிறதென்பது தெரியா மல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார். 

அது எப்ரல் மாதம். பாலகுமாரன் ஒரு ஆபத்தான முடிவெடுத்தார். அது புலிக ளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்வது! அப்போது புலிகளின் கட்டுப் பாட் டிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு மக்கள் பெருந்தொகையில் தப் பிச்செல்லத் தொடங்கி விட்டார்கள்.


ஒன்று தரை மார்க்கமாக. இன்னொன்று, கடல் மார்க்கமாக. கடல் மார்க்கமாக தப்பி சுண்டிக்குளத்தில் நிலைகொண்டிருந்த 55வது டிவிசனிடம் சரணடைப வர்களிற்கு உயிருத்தரவாதம் உள்ளதாக ஒரு அபிப்பிராயம் செய்திகளின் வழி யாக உருவாக்கப்பட்டிருந்தது. 

புலிகளின் முக்கியஸ்தர்களை குறிவைத்து அரசு உருவாக்கிய அபிப்பிராயமா கவும் இருக்கலாம். அந்த டிவிசன் கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் இயல்பால் உருவானதாகவும் இருக்கலாம். வலைஞர் மடத்திலிருந்து படகில் தப்பித்து சுண்டிக்குளத்தில் தரித்து நின்ற 55வது டிவி சன் படையினரிடம் சரணடைவதென பாலகுமாரன் முடிவெடுத்தார்.


இதற்காக இரகசிய திட்டம் தீட்டினார். இது 2009 மார்ச் மாதத்தில் ஆரம்பித்த திட்டம். அதாவது தமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச்செல்லும் பொதுமக்களி ற்கே மரண தண்டனை வழங்கவும் புலிகள் எத்தனித்த சமயம். தனது உதவி யாளர்கள் மூலம் படகொன்றை தயார் செய்தார். 

படகோட்டிக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது. பாலகுமாரன், மனைவி, பிள்ளைகள், நம்பிக்கைக்குரிய ஒரு சிலரின் குடும்பங்கள் தான் படகில் செல்ப வர்கள். ஏப்பரல் முதல்வாரத்தில் பாலகுமாரனின் தலைமையில் படகில் தப் பிச்சென்றார்கள். 

வலைஞர்மட கடற்கரையில் மறைந்திருந்து, மக்கள் தப்பிச்செல்லாமல் ஏற்ப டுத்தப்பட்டிருந்த புலிகளின் காவல்வேலிக்கு டிமிக்கி கொடுத்து படகில் ஏறி னார் புலிகளின் முக்கியஸ்தர். படகு மெல்லமெல்ல வேகமெடுத்து கரையை கடக்க எத்தனிக்க, யாரோ தப்பிச்செல்வதை கடற்புலிகளின் படகொன்று அவ தானித்து விட்டது. 

துரித கதியில் விரட்ட தொடங்கினார்கள். தப்பிச்செல்பவர்களை பிடிப்பதே அந்த அணியின் பணி. யாரோ பொதுமக்கள் தப்பிச்செல்கிறார்கள் என நினை த்த கடற்புலிகள் விரட்டிச் சென்று, அருகில் சென்று படகு மீது துப்பாக்கி பிர யோகம் செய்தார்கள். படகிலிருந்து அலறல் சத்தங்கள். 

கிட்டச் சென்று வெளிச்சம் பாய்ச்சினால், பாலகுமாரன் தலையை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தார். அவரது இளவயது மகள் மகிழினியின் கையில் காயம். எலும்பு முறிந்திருந்தது. 

(அண்மையில் தமிழகம் திருச்சியில் மகிழினியின் திருமணம் நடந்திருந்தது)


தம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கும்படி பாலகுமாரனின் மனைவி போராளிகளை மன்றாட்டமாக கேட்டார். போராளிகளிற்கும் சங்கடமாகி விட் டது. அந்த படகை தடுத்து வைத்திருந்தபடி, கடற்புலிகளின் தளபதி சூசையை தொடர்பு கொண்டனர். 

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!


































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 04 Rating: 5 Reviewed By: Thamil