இந்த நாட்டில் பிக்குகளிற்கென தனி மரியாதை உள்ளது. ஆனால் வடக்கி லுள்ள அரசியல்வாதிகளின் பின்புலத்தில் செயற்படும் சில சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதித்து, பிரச்சனையை ஊதிப்பெருப்பித்து விட்டனர்.
இப்படி தெரிவித்துள்ளார் பொதுஜன பெர முனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட் டாபய ராஜபக்ச.
நேற்று நீதிமன்ற உத் தரவையும் புறந்தள்ளி, அடாவடியாக ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள், புற்றுநோயால் இறந்த பிக்குவின் உடலை பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் தகனம் செய்து, அட்டூழியம் புரிந்திருந்தனர்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே, கோட்டாபய மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.“இறந்த விகாராதிபதியின் உடலை அமைதியான இடத்தில் தகனம் செய்யவே பிக்குகள் தீர்மானித்திருந்தனர். ஆனால் தமிழ் அரசியல் வாதிகளின் பின்புலத்தில் இயங்கும் சட்டத்தரணிகள் பிக்குகளை அவமதிக் கும் விதத்தில் செயற்பட்டனர்.
இந்த சட்டத்தரணிகள்தான் ஆலய நிர்வாகத்தையும் நீதிமன்றத்திற்கு இழுத்து வந்து விடயத்தை ஊதிப்பெருப்பித்தனர். இது தேவையில்லாத நடவடிக்கை.
இதற்காக நீதிமன்றத்தின் உத்தரவையோ, தீர்ப்பையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை.
களத்தில் என்ன நடந்ததென்பது உண்மையில் எனக்கு தெரியாது. எனினும், அண்மைக்காலத்தில் பிக்குகளை அவமதிக்கும் விதத்தில், அவர்களை சீண் டும் விதத்தில் சில நடவடிக்கைகள் நடக்கின்றன“ என்றார்.
சிங்கள கடும் போக்குவாதத்தை பிரதிபலித்து வந்த கோட்டாபாய, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பின்னர், தன் குறித்து யாரும் அச்சமடைய வேண் டாம், அனைத்து மக்களிற்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவேன் என குறிப்பிட்டு வந்திருந்தார்.
எனினும், நீராவியடி விவகாரத்தில் அவரது கருத்து, அவரது பழைய நிலைப் பாட்டையே புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.