728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 10 September 2019

இரகசிய ஆவணங்களுடன் கடல்வழியாக வன்னிக்கு வந்த போராளி!- கருணா பற்றிய ஆதாரங்கள் புலிகளிடம் போனது இப்படித்தான் இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 27

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பொட்டம்மானை கஞ்சிகுடிச்சாறு முகாமில் தங்க வைத்து, தமது நம் பிக்கையான ஆட்கள் மூலம் முகாமை கருணா கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன். 



பொட்டம்மான் கிழக்கிற்கு அனுப்பப்பட்டதன் காரணம்- கருணாவிற்கும், பொட்டம்மானிற்குமிடையிலான சிக்கல்களை பேசித்தீர்ப்பதே. பொட்டம்மா னின் புலனாய்வுத்துறை நிர்வாகமும், கருணாவின் நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதாமல், இணைந்து செயற்படும் விதமான கட்டமைப்பை உருவாக்குவதற்காகத்தான் பொட்டம்மான் அனுப்பப்பட்டார்.

ஆனால், அவருக்கு வரவேற்பு நன்றாக அமையவில்லை. பொதுவாக ஒரு பிர தேசத்திற்கு தளபதியொருவர் சென்றால், அங்குள்ள தளபதியைத்தான் முத லில் சந்தித்து பேசுவார். அதுதான் வழக்கம். 

ஆனால், மட்டக்களப்பிற்கு சென்ற பொட்டம்மானால் உடனடியாக கருணா வைச் சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள், சந்திப்புக்கள் என காரணம் கூறி இரண்டுநாளை இழுத்தடித்து விட்டார்கள். மூன்றாம் நாள்தான் பொட்டம்மான், கருணா சந்திப்பு நடந்தது. 

அது எங்கே தெரியுமா? எப்படி தெரியுமா? 

தரவையில் அந்த சந்திப்பு நடந்தது. இச் சந்திப்பில் கருணா விடுதலைப்புலி களிற்கு ஒரு செய்தி சொன்னார். அமைப்பின் நிர்வாகங்களிற்கிடையிலான சிக்கல்களை இரண்டு தரப்பும் பேசி தீர்க்கும் நடவடிக்கை சரிவராது, கிழக்கை எம்மிடமே விட்டு விடுங்கள், வீணாக தலை போடாதீர்கள் என்பதே அந்த செய்தி. 

அதை எப்படி சொன்னார் தெரியுமா? தரவையில் கிழக்கு படையணிகள் மொத் தமாக நிலைகொள்ள வைக்கப்பட்டிருந்தன என்பதை ஏற்கனவே குறிப்பிட் டிருந்தேன். கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகள் அந்த இராணுவ வலயத்தில் நிலைகொண்டிருந்தனர். 

அவர்களின் மத்தியிலேயே கருணா தங்கியிருந்தார். தரவையில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்றை கருணா ஏற்பாடு செய்தார். அந்த அணிவகுப் பிற்கு பொட்டம்மானும் அழைக்கப்பட்டிருந்தார். கிழக்கிற்கு சென்ற பொட்டம்மான், அங்கு வைத்துதான் கருணாவை சந்திக்க முடிந்தது! 

அந்த அணிவகுப்பு சென்ற பொட்டம்மானை வரவேற்றது கருணாவிற்கு அடுத்தநிலையில் இருந்த ரமேஷ். நிகழ்விற்கு தாமதமாகவே கருணா வந்தார். பொட்டம்மானுடன் அவ்வளவாக மனம் விட்டும் பேசவில்லை.


அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளோம். 

இருவரது உடல்மொழியையும் கவனிப்பவர்களிற்கு, அவர்களிற்கிடையிலான முரண்பாடு நன்றாக புரியும்.தரவையில் சுமார் மூவாயிரம் போராளிகளின் பிர மாண்ட இராணுவ அணி வகுப்பு நடந்தது. அன்றிரவு மீனகத்தில் பொட்டம் மானும், கருணாவும் தனிமையில் பேசினார்கள். 

கிழக்கு புலனாய்வு அமைப்புக்கள் அனைத்தும் தனக்கு பொறுப்புக் கூறுபவர் களாக இருக்க வேண்டுமென கருணா வலியுறுத்தினார். ரெஜினோல்ட் ஆட்க ளின் பிரிவின் பின்னர், மட்டக்களப்பு உள்ளக புலனாய்வு விவகாரங்களை கவனித்த நீதன், பிரபா ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்றும் முறையிட்டார். 

கிழக்கில் உள்ள புலனாய்வுத்துறை அணிகள் அனைத்தும் கருணாவின் கீழ் செயற்படுவது சாத்தியமில்லை. தெற்கில் நடவடிக்கையில் ஈடுபடும் புல னாய்வு அணிகள் எவ்வளவு இரகசியமாக உருவாக்கப்படுகின்றன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 

இரகசிய நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவருக்கு, தன்னுடன் இணைந்து யார் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியாது. பெரும்பாலான நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களிற்கு, தம்மால் வழிநடத்தப்படுபவர்களின் முகங்களே தெரி யாது. அப்படியாகத்தான் இரகசிய அணிகள் உருவாக்கப்படுகின்றன.

இரகசிய அணிகளை கையாளுபவர்க ளும் கிழக்கில்தான் தங்கியிருந்தனர். அவர்களையெல்லாம் கருணாவின் கீழ் செயற்பட அனுமதிப்பது உண்மை யிலேயே புத்தி சாலித்தனமல்ல. 

எந்த புலனாய்வு அமைப்பும் இப்படி யொரு முடிவெடுக்காது. பொட்டம்மான் கிழக்கில் நின்ற சம யத்தில் ஒரு இரகசிய சந்திப்பொன்றையும் நடத்தினார். கருணா விவகாரத் தில் புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திய சந்திப்பு அது. 

கிழக்கில் வரி வசூலிப்பதும் கருணா வின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. நிதித்துறை கிழக்கில் செயற்பட ஆரம்பித்து, வரி வசூலை தமது கட்டுப் பாட்டில் கொண்டு வர முயன்ற போதுதான் கருணா அதிகமாக சிக்கலை கொடுக்க ஆரம்பித்தார். கிழக்கு படையணி கள் இயங்க வரி வசூலிக்க வேண்டியது அவ சியம் என்றார். புலிகளின் நிதித்துறை பொறுப் பாளர் தமிழேந்தியை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 

ஒருவருக்கு காலையில் எத்தனை கிராம் சீனி தேவை, மதியம், மாலையில் எத்தனை கிராம் சீனி தேவை, கத்தரிக்காய் எத்தனை கிராம் தேவை என ஒவ் வொரு விடயத்திலும் நுணுக்கமாக கணக்கு பார்த்து, பராமரிப்பு செலவை தீர் மானிப்பார். 

நிர்ணயிக்கப்படும் பட்ஜெட் படியே அனைத்து போராளிகளிற்குமான பொருட் கள் அனுப்பிவைக்கப்படும். கடும் பயிற்சியெடுக்கும் அணிகளிற்கு விசேட பட்ஜெட் என வேறொரு வழங்கல் இருக்கின்றது. 

சாதாரண பட்ஜெட்டின் அடிப்படையில் ஐயாயிரம் போராளிகளிற்கு ஆகும் பராமரிப்பு செலவை கருணாவிற்கு அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்ன போது, கருணா அதை ஏற்கவில்லை. இறுதியில் மாதாந்தம் ஒரு கோடி ரூபா அனுப்பிவைக்கலாமென புலிகள் சொன்னார்கள். 

ஒரு கோடியென்பது அதிக பட்சம். இதற்கும் மறுப்பு சொல்ல முடியாது. ஆனால் கிழக்கிலேயே வரி வசூல் பண்ணினால் இந்த ஒரு கோடி ரூபாவை விட அதிகமாக வரி வசூல் பண்ணுவார்கள். வன்னியிலிருந்து பணம் அனுப்பப்படுவதை கருணா உண்மையில் விரும்பவில்லை. 

என்றாலும், ஒரு கோடி ரூபாவையும் காணாதென சொல்ல முடியாத நெருக் கடியால் சம்மதித்தார்கள். கருணாவின் நிதி பொறுப்பாளராக இருந்தவர் குகநேசன் (பின்னாளில் இவரை புலிகள் கொழும்பில் சுட்டுக்கொன்றார்கள்). கருணாவிற்கு மிகமிக விசுவாசமானவர். 

அதனால்தான் கருணா அவரை நிதிப்பொறுப்பாளராக்கினார். ஏனென்றால், மாதாந்தம் சிலபல கோடி ரூபா புரண்டு கொண்டிருந்த சமயம் அது. நம்பிக் கையான ஆளை வைத்திருந்தால்தான், “அனைத்தையும் கச்சிதமாக“ முடிக்க லாம்! 

கிழக்கு படையணிகளின் நிதி விசயங்களில் நிறைய சிக்கல் இருக்கிறதென் பதை நிதித்துறை அறிந்து விட்டது. கிழக்கு, கொழும்பில் உள்ள வர்த்தகர் களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் கணிசமான பங்கு “குறிப்பிட்ட ஒரு வருடைய“ கணக்கில் செல்கிறது, கிழக்கு வரி வசூலிப்பில் மோசடிகள் நடக் கின்றன என்ற முதற்கட்ட தகவல் புலிகளிற்கு கிடைத்தது. 

ஆனால் அதை உறுதிசெய்ய முடியவில்லை. காரணம், கருணாவின் நிதிப் பிரிவு மிக இறுக்கமாக கண்காணிக்கப்பட்டது. குகநேசன் உள்ளிட்ட ஓரிரண்டு போராளிகளிற்குத்தான் முழு கணக்கு வழக்கும் தெரியும். எப்படியும் ஒரு போராளியை பிடித்து, கணக்கு விசயங்களை வெளியில் எடுக்க புலனாய் வுத்துறை போராளிகள் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில்தான் எதிர்பாராத திருப்பமாக, கிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஊடு ருவக்கூடிய சந்தர்ப்பமொன்று புலிகளிற்கு கிடைத்தது! இப்பொழுது மட் டக்களப்பு நகரத்தில் இருக்கும் ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவர், அப் பொழுது கிழக்கு நிதிப்பிரிவு போராளிகளிற்கு கணக்காய்வு தொடர்பாக சில வகுப் புக்களை எடுத்து வந்தார். 

அந்த சமயங்களில் கிழக்கு கணக்கு குழுவின் கணக்கறிக்கைகளையும் ஒழுங் குபடுத்தி கொடுத்திருக்கிறார். அதிக வருவாய், குறைந்த செலவு, மிகுதிப் பணம் வைப்பிலிடப்படும் விடயத்தை கவனித்து வைத்தார். அங்கிருந்த பொறுப்பான போராளியொருவருடன் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்துள் ளார். 

அந்த போராளிதான் நிதி விடயங்களில் உள்ள ஓட்டைகளை குறிப்பிட்டு, அதை யாராவது தெரிந்தவர்கள் மூலம் புலிகளிற்கு அறிவிக்குமாறு கூறி யிருக்கிறார். வயதான நேரத்தில் கணக்காளர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. பேசாமல் இருந்துவிட்டார்.

சில மாதங்கள் கழித்து வேறொரு அலுவலாக மட்டக்களப்பு எம்.பியொருவரை சந்திக்க போயிருக்கிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பேச்சோடு பேச்சாக, கிழக்கு நிதி விடயங்களை சொல்லியிருக்கிறார். அவர் சாதாரண மாகத்தான் சொன்னார். 

ஆனால் அந்த எம்.பி விடயத்தின் முக்கியத்துவத்தை புரிந்து, மட்டக்களப்பில் தங்கியிருந்த புலிகளின் நிதித்துறை போராளிகளிடம் சொன்னார். அவ்வளவு தான். கணக்காளரை புலிகள் தோண்டிம்தோண்டி விசயத்தை கறந்தனர். ஆனால் எதற்கும் எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கிடையாது! 

அப்படியான ஆதாரம் இல்லாமல், அதை நிரூபிக்க முடியாது. எப்படி ஆதா ரத்தை பெறுவது? கணக்காளரையே பாவித்து அதற்கு முயற்சிப்பதென முடி வெடுத்தார்கள். கணக்காளரும் சம்மதித்தார். 

தன்னுடன் மனம் விட்டு பேசிய கிழக்கு நிதிப்பிரிவை போராளியை பின்னர் சந்திக்கும்போது, மெல்லமெல்ல விடயங்களைச் சொல்லி, அவரை தயார்ப் படுத்தினார். 

அந்த போராளிக்கு இரட்டை மனம். ஆதாரங்களை எடுத்து கொடுத்து, அல்லது ஆதாரங்களுடன் வன்னிக்கு சென்றால் அடுத்ததாக என்ன நடக்குமென தெரி யாமல் திண்டாடினார். ஏனென்றால், புலிகள் அமைப்பில் பிளவு வருமென அப்பொழுது யாரும் கற்பனையும் செய்திருக்க மாட்டார்கள். 

விசயம் வெளியில் கசிந்தால் தனது குடும்பத்திற்கு ஏதும் சிக்கல் வரலாமென நினைத்தார். அதனால் உறுதியான முடிவை சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். கிழக்கு நிதிப்பிரிவிற்குள் ஒரு சாதாரண பிரச்சனையொன்று வந்தது. 

அங்கிருந்த போராளியொருவருக்கு- அவரது பெயர் கம்சன்- காதலிருந்தது. அன்பரசி படையணியில் இருந்தார் காதலி. பின்னர் அன்பரசி படையணி தளபதியாக இருந்த நிலாவினியின் மெய்பாதுகாவலராகவும் இருந்தவர். இந்த காதல் விசயம் நிலாவினிக்கு தெரியவர, அவர் அந்த பெண் போராளியை கடுமையாக திட்டியிருக்கிறார். 

முகாமைவிட்டு வெளியில் செல்லவே அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னா ளில் விடுதலைப்புலிகளால் கிழக்கு தலைமை மீது சுமத்தப்பட்ட ஒழுக்கமீறல் குற்றச்சாட்டுக்களிற்கான முதல் ஆதாரத்தை புலிகளிற்கு வழங்கியவர் இந்த பெண் போராளிதான். 

இந்த விசயத்தில், இப்போதைக்கு அதிகமாக எதையும் எழுத முடியாது. அதனால் இத்துடன் முடித்துக்கொள்கிறோம். 

காதல் விசயத்தை நிதிப்பொறுப்பாளர் குகநேசனிடமும் தெரியப்படுத்தினார் நிலாவினி. கிழக்கு நிதி விவகாரங்களில் சிக்கலிருந்ததால், அங்கு பணிபுரியும் போராளிகளை கடுமையான கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். 

காதல் உறவு, வெளித்தொடர்புகள் வைத்திருக்க அந்த போராளிகள் அனுமதிக் கப்பட்டிருக்கவில்லை. கம்சனின் காதல் விவகாரத்தை பெரிய விசயமாக குகநேசன் எடுத்துக்கொண்டார். அதன்பின் கம்சனை வெளியிடங்களிற்கு அனுப்பாமல் திட்டமிட்டு தவிர்த்தார். 

இது காதலர்களிற்கு பெரிய விரக்தியை ஏற்படுத்தியது. கணக்காளருடன் பேசிய, மட்டு நிதிப்பிரிவு முக்கிய போராளியுடன் கம்சன் மனம்விட்டு பேசிய சமயத்தில்தான், கருணா விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பம் நடந்தது. 

கிழக்கு நிதிப்பிரிவின் ஆவணங்களை, விடுதலைப்புலிகள் எடுப்பதற்கு முயற் சிக்கிறார்கள், கிழக்கு நிதி விவகாரங்கள் விடுதலைப்புலிகளிற்கு உவப்பில் லாமல் நடக்கிறதென்ற விடயம் முதன்முதலாக கம்சனிற்கு தெரிய வரு கின்றது. 

ஏற்கனவே அதிருப்தியில் இருந்தவர், இந்த சமயத்தை பயன்படுத்த நினைக் கிறார். அவரை பயன்படுத்தி விடயத்தை தலைமைக்கு தெரியப்படுத்தலாம் என, கணக்காளரிடம் பேசிய போராளியும் நினைக்கிறார். 

2004 ஜனவரி மாதம். கம்சனின் காதலி விடுதலைப்புலிகளை விட்டு தப்பி யோடி, செங்கலடியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார். அவரை ஆரையம்பதி யில் உள்ள தெரிந்த வீடொன்றில் சில வாரங்கள் குடும்பத்தினர் தங்க வைத்தனர். 

இந்த சமயத்தில் மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினருக்கு பொட்டம்மானிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது. அந்த உத்தரவு இதுதான்- 

“ஆரையம்பதியில் — என்ற முகவரியில் தங்கிருக்கும் பெண்ணுடன் பேசுங் கள். அவர் மூலமாக கம்சனை தொடர்பு கொண்டு, அவரிடமுள்ள ஆவணங் களுடன் அவரை, பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு வாருங்கள்“.

மட்டக்களப்பில், அன்பரசி படையணியில் இருந்து தப்பியோடிய ஒரு பெண் போராளி, ஆரையம்பதியில் எந்த முகவரியில் தங்கியிருக்கிறார் என்பதும், மட்டு நிதிப்பிரிவிற்குள் ஒரு போராளி அதிருப்தியுடன் இருக்கிறார் என்பதும், வன்னியிலிருந்த பொட்டம்மானிற்கு எப்படி தெரிந்தது? 

 அதுதான் புலிகளின் புலனாய்வு நெற்வேர்க்! 

பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்தபோது, அவரை ஒருவர் இரகசியமாக சந்தித்தார் என்று சென்னேன் அல்லவா, அவர் யார் தெரியுமா? கருணாவின் நிதிப்பிரிவிற்கு வகுப்புக்கள் எடுத்த அந்த கணக்காளர்தான். 

மட்டக்களப்பு எம்.பியுடன் அவர் பேச, அது நிதித்துறைக்கு போய், அங்கிருந்து புலனாய்வுத்துறைக்கு போய், பொட்டம்மான் வரை போனது. கிழக்கில் தங் கியிருக்கும் சமயத்தில், கருணாவின் ஆட்களிற்கு தெரியாமல் அவரை சந்திப் பதென்ற திட்டமும் பொட்டம்மானிடம் இருந்தது. 

இரகசியமாக அந்த சந்திப்பு நடந்தது. 

ஆரையம்பதியில் தங்கியிருந்த கம்சனின் காதலியுடம் புலிகளின் புலனாய்வு பிரிவினர் தொடர்புகொண்டு, கம்சனுடன் தொடர்பை ஏற்படுத்தினர். நிதிபிரி விலுள்ள அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் வெளியேற தயாராக இருப் பதாக கம்சன் சொன்னார். 

ஆவணங்களுடன் வெளியேறும்போது சின்னச் சிக்கலும் ஏற்படக்கூடாது, அப் படி நடந்தால் கிழக்கு படையணிகள் உசாராகி விடுவார்கள். அதன்பின்னர் நிதிப்பிரிவு ஆவணங்களை வெளியில் எடுப்பது குதிரைக்கொம்பாகிவிடும்.

கஞ்சிகுடிச்சாறில் இருந்த முகாமில் இருந்த வெளியேறும் கம்சனை, யாருக் கும் சந்தேகம் இல்லாமல் வன்னிக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த பொறுப்பை மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நீலன் ஏற்றுக்கொண்டார். 

கிழக்கு நிதிப்பிரிவின் அனைத்து ஆவணங்களையும் வசதி கிடைக்கும் தருணங்களில் பென்ட்ரைவ்களில் சேமிக்க தொடங்கினார் கம்சன். உயிரையே பறிக்கும் ரிஸ்க்கான காரியம் இது என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிந்து செய்தார். 

ஒரு வாரத்தில் கிழக்கு நிதி பிரிவில் இருந்த அத்தனை ஆவணங்களையும் தனது பென்ட்ரைவில் ஏற்றினார். ஒருநாள், ஏதோ அலுவலாக முகாமைவிட்டு வெளியில் வருவதை போல வந்து, புலனாய்வுத்துறை போராளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். 

அவரை வன்னிக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட் டிருந்தது. அதன்படி, வாகரைக்கு அண்மையாக படகில் ஏற்றப்பட்டு, செம் மலையில் இறக்கப்பட்டார். 

வன்னிக்கு வந்து சேர்ந்ததும், பொட்டம்மானிடம் அழைத்துச் செல்லப்பட்டார் கம்சன். பொட்டம்மான் இத்தனை நாளாக எதிர்பார்த்திருந்த தகவல்கள் அனைத்தையும், ஒரு பென்ட்ரைவிற்குள் அடக்கி, அவரது மேசையில் வைத் தார் கம்சன். 

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரகசிய ஆவணங்களுடன் கடல்வழியாக வன்னிக்கு வந்த போராளி!- கருணா பற்றிய ஆதாரங்கள் புலிகளிடம் போனது இப்படித்தான் இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 27 Rating: 5 Reviewed By: Thamil