728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 10 September 2019

எய்மர் கடாபி சுட்டு விழுத்தியது குருவியை அல்ல; விமானத்தை!- பிரபாகரன் பிஸ்டலை கழற்றி கொடுத்ததற்கும் காரணமுண்டு!

யுத்தத்தின் இறுதி நிமிடங்கள் கட்டுக் கதைகளும் உண்மைக்கதைகளும்  இம்ரான்-பாண்டியன் படையணி தளப தியாக கடாபி இருந்த காலத்தில் கடும் கட்டுக்கோப்புடன் படையணி யை வழி நடத்தினார். 


இம்ரான்-பாண்டியன் படையணிக்குள் பல உப பிரிவுகளை உருவாக்கியிருந்தார். அவற்றில் ஒன்றுதான், படைய ணிக்கான புலனாய்வு பிரிவு. ஈழ யுத்தத்தின் இறுதியில் பெரும் புகழ் பெற்றி ருந்தவர்களில் ஒருவர்- இரட்ணம் மாஸ்ரர். சாதாரண போராளியாக இருந்த இரட்ணம் மாஸ்ரரை, இந்த நிலைக்கு அழைத்து வந்தது கடாபிதான். 

பிரபாகரனின் பாதுகாப்பு விவகாரங்களை கவனித்து வந்ததால், இம்ரான்- பாண்டியன் படையணிக்குள்ளும் ஒரு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. பிரபாகரனின் பாதுகாப்பு படையணியிலுள்ள போராளிகளை கண்காணிப்பது, பிரபாகரனின் முகாம் அமைந்துள்ள பகுதியின் வெளிப்புற பாதுகாப்பை கவ னிப்பது, விசாரணை பிரிவு, சிறைச்சாலை பிரிவு என்பனவற்றுடன் பெரிய தொரு நிர்வாக அலகாக வளர்ச்சியடைந்திருந்தது. 

விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறை ச்சாலைகளில் மிகப்பயங்கர மான சிறைச்சாலையாக, இம்ரான்-பாண்டி யன் படையணி சிறைச்சாலையே இருந்தது. கைது செய்யப்பட்ட இரா ணுவ அதிகாரிகளும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்துதான், இம்ரான்- பாண்டியன் படை யணிக்குள் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு படை யணியில் இருப்பவர்கள் அனுமதியின்றி விடுமுறையெடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றம். 

சிவில் குற்றங்களில் ஈடுபடுவது அதைவிட பயங்கரமான குற்றம். பாதுகாப்பு படையணியில் இருந்த நிலையில், புலிகள் அமைப்பை விட்டு விலகுவதும் தண்டனைக்குரிய குற்றம்.இதில் எந்த வகைக்குள் அடங்கியிருந்தாலும், அவர் படையணியின் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்படுவார். 

இதில் அதிக காலம் தண்டனைக்கு உள்ளாகுபவர்கள், பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்து, அமைப்பை விட்டு விலக முடிவெடுப்பவர்கள் தான். அதற்கு காரணமும் இருந்தது.

பிரபாகரனின் இரகசிய இருப்பிடத்தை அறிந்தவரை வெளியில் விட்டால், பிரபாகரனிற்கு ஆபத்து ஏற்படலாமென புலிகள் நினைத்தனர். அதனால், பிரபாகரனின் பாதுகாப்பு படையணியில் இருந்து அவர் விலக்கப்பட்டு, இரண்டு வருடம் தண்டனை வழங்கப்பட்ட பின்னர்தான் வீட்டுக்கு அனுப்பப் படுவார். 

இதில் ஆறு மாதமோ, ஒரு வருடமோ தனிமைச்சிறையாக இருக்கும். இரு ளான பதுங்குகுழிக்குள்ளும் அடைக்கப்படுவார்கள். வெளியுலக தொடர்பு எது வும் அவர்களிற்கு இருக்காது.இந்த இரண்டு வருட இடைவெளியில் பிரபாகர னின் பாதுகாப்பு நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். 

அவரது இருப்பிடமும் மாறியிருக்கும். இரண்டு வருடங்களின் முன்னர் பாது காப்பு அணியிலும் மாற்றம் நிகழ்ந்திருக்கும். சிறைச்சாலையிலிருந்து வெளி யில் வருபவரால், பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியை மீண்டும் அணுகி, தகவல் எதுவும் பெற முடியாது.

கடாபி விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் உச்சநிலையில் இருந்தபோதும், அவர் வெளியில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. கடாபி பற்றிய செய்திகளோ, படங்களோ வெளியில் அதிகம் வரவில்லை. காரணம், அவர் செய்தது அத்தனையும் புலிகளின் இரகசியமான வேலைகளை. வெளியில் வரவில்லை என்பதற்காக அவர் சாதாரண ஆள் கிடையாது. 

அன்றாடம் செய்திகள் வெளியான தளபதிகளை விட, அதி முக்கியமான ஆளாக புலிகளிற்குள் இருந்தார். அமைப்பிற்குள் அப்படி பெயரும், புகழும் கொண்டிருந்த கடாபி, ஒரே நாளில் அனைத்தையும் இழந்தார். 

கடாபி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு இரட்ணம் மாஸ்ரரை பிரபாகரன் நியமித்தார். கடாபிக்கு கொஞ்சநாள் எந்த பொறுப்பும் வழங்கப்பட வில்லை. பின்னர், புதிய போராளிகளிற்கான பயிற்சி முகாம் பொறுப்பாளர் என்ற சாதாரண பொறுப்பொன்றை கொடுத்தார் பிரபாகரன். அது மிகச் சாதாரண பொறுப்பு.

இந்த இடத்தில்தான் கடாபியை பற்றிய இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். முன்னரே குறிப்பிட்டிருக்க வேண்டும், தவறிவிட்டது. அது- கடாபி யின் நிர்வாக ஆளுமை. இம்ரான்- பாண்டியன் படையணியின் கீழ் எண்ணற்ற பிரிவுகள் இருந்தாலும், மிகச்சாதாரணமாக அதை நிர்வகித்தார். 

அவரது நிர்வாக ஆளுமைதான் காரணம். சிறிய படையணிகளிலேயே ஆட் பதிவு, துப்பாக்கி பதிவு, இதர விபரங்களில் சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்க… ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிக போராளிகளையும், பிரி வுகளையும் வைத்து நிர்வகித்த கடாபி, மிகச்சாதாரணமாக அதை நிர்வகித் தார். 

அனைத்து விபரங்களையும் விரல்நுனியில் பேணினார். அனைவருக்குமான தேவைகளையும், உணவு வழங்களையும் திறம்பட நிர்வகித்தார். இதற்காக நிர்வாக கட்டமைப்புக்களை கச்சிதமாக உருவாக்குவார்.புலிகளின் ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம்கள் தனி அலகாக இருந்ததில்லை. 

ஏதாவதொரு படையணியின் கீழ் இயங்கும். கடாபியின் கீழ் ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம் ஒதுக்கப்பட்ட பின், தனி அலகானது. மிகப்பிரமாண்டாக கட்டி யெழுப்பப்பட்ட இம்ரான்- பாண்டியன் படையணியில் இருந்து (அதை கடாபிதான் அப்படி கட்டியெழுப்பினார்) 

என்னை நீக்கினால் என்ன, ஒன்றுமேயில்லாத இடத்திலிருந்தும் என்னால் அப்படியொரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்க முடியுமென பிரபாகரனிற்கே சவால் விட்டதைபோல, செயலில் செய்து காட்டினார்.

சில மாதங்களிலேயே புலிகளின் ஆரம்ப பயிற்சி முகாம் கட்டமைப்பு, கச்சி தமான நிர்வாக கட்டமைப்புக்களுடன் பிரமாண்டமானதாக மாறியது. கடாபி உருவாக்கிய அந்த நிர்வாக கட்டமைப்பை பார்த்து பிரபாகரனே அசந்து விட் டார். 

ஆரம்ப இராணுவ பயிற்சி முகாம் நிர்வாகத்தை இப்படியொரு, சிறந்த நிர்வாக கட்டமைப்பாக மாற்ற முடியுமென நானே எதிர்பார்க்கவில்லையென பிரபாகரன் மனம் திறந்து கடாபியை பாராட்டினார். அதுதான் கடாபி! கடாபி யின் இத்தனை வருட வரலாற்றில், அவர் நிழலை பார்த்து வானத்தில் பறக் கும் பறவையை சுட்டதோ…

இன்னொரு போராளியின் தலையில் அப்பிளை வைத்து சுட்டு விழுத்தியதோ கிடையாது. அதெல்லாம் இட்டு கட்டப்பட்ட கதைகள். ஆனால் கடாபி துல்லி யமாக சுடக்கூடியவர். புலிகள் அமைப்பிற்குள் அவர் சேர்ந்தபோதே, அவரது துப்பாக்கி சுடும் திறமையை அவதானித்தவர் கிட்டு. 

இதனால்தான் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணிக்குள் அப்பொழுதே இணைந்து விட்டார். கடாபி இறுதிவரை பாவித்தது EAGLE ரக பிஸ்டல். அதை ஆரம்பத்தில் பாவித்தவர் பிரபாகரன். ஏனோ தெரியவில்லை, விடுதலைப் புலிகள் அந்த ரக பிஸ்டலை அதிகம் வாங்கவில்லை. 

மற்றைய பிஸ்டல்களை விட, EAGLE பிஸ்டல் அதிக சத்தத்தை எழுப்பும். துப்பாக்கிகளில் இருந்து பெரிய சத்தம் வருவது பிரபாகரனிற்கு ஒத்துவராது. இயன்றவரை சத்தம் குறைவான துப்பாக்கிகளின் மீதே அவருக்கு ஆர்வ மிருந்தது. EAGLE பிஸ்டலை கடாபியிடம் கொடுத்துவிட்டார் பிரபாகரன்.  

துப்பாக்கி சுடும் போட்டியொன்றில் பிரபாகரனும், கடாபியும் ஈடுபட்டதாகவும், அதில் பிரபாகரன் தோல்வியடைந்ததை தொடர்ந்து EAGLE பிஸ்டலை கடாபியிடம் கொடுத்தார் என்றும் ஒரு கதையுள்ளது. 

அதுவும் தவறானது. விடுதலைப்புலிகளிற்கு நவீன ஆயுதங்கள் எது வந்தா லும், அதை முதலில் கையாண்டு பார்க்கும் ஆள் கடாபிதான். அவரது துல்லி யமான சூட்டு திறமையினாலேயே, இந்த நிலையை அடைந்தார். 

சிறிய துப்பாக்கிகளில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வரை எது வந்தா லும், கடாபியை கடந்துதான் புலிகளிற்குள் செல்ல வேண்டும்! சரி, இந்த இடத் தில் இன்னொரு தகவலையும் சொல்லி விடலாம். 

விடுதலைப்புலிகள் பாவித்த ஏவுகணை குறித்து படைத்தரப்பிற்கு நீண்ட காலமாக குழப்பமிருந்து கொண்டிருந்தது. சாம், ஸ்ரிங்கர் போன்ற ஏவுகணை தான் புலிகள் பாவிக்கிறார்கள் என நினைத்தார்கள். ஆ

னால் உண்மையில் புலிகள் இறுதியாக பாவித்தது strela விமான எதிர்ப்பு ஏவுகணைகள்.உக்ரைனில் வாங்கினார்கள். வெப்பத்தை நாடிச்செல்லும் இந்த ஏவுகணைகளை 1999 இல் விடுதலைப்புலிகள் வாங்கினார்கள். 

இந்த டீலை ஏற்பாடு செய்தது கே.பி. ஆனால் மற்றைய ஆயுதங்களை போல பெட்டியில் கொண்டு வந்து இறக்கிவிட்டு, இங்கு பரீட்சித்து பார்க்க முடியாது. குறிப்பிட்ட தொகையான ஏவுகணைகளைத்தான் வாங்க முடிந்தது. 

உக்ரைனிலேயே அதைப்பற்றிய பயிற்சியெடுத்து விட்டு வந்தால் நல்லதென பிரபாகரன் நினைத்தார். ஏவுகணைதான் அப்போது புலிகளின் கனவாக இருந்தது. அது கிடைத்ததில் சூசையும் உற்சாகமாக இருந்தார். 

தானே நேரில் சென்று கொண்டு வர வேண்டுமென விரும்பினார். ஏவுகணை பற்றி உக்ரைனில் பயிற்சியெடுக்க சென்றது இருவர். ஒருவர் இப்போது உயிரோடு இல்லை. அவர்- கடாபி! இன்னொருவர் உயிரோடு இருக்கிறார். 

இலங்கை சிறையில். அவரைப்பற்றி ஏன் குறிப்பிட்டோம் என்றால், வெறும் ஐந்து இலட்சம் ரூபா இல்லாததால், வழக்கை நடத்த முடியாமல் அவர் சிறையில் இருக்கிறார்! 

புலிகள் வெற்றிகரமாக முதலில் பாவித்த விமான எதிர்ப்பு ஏவுகணையை இயக்கியவரும் கடாபிதான். 1995 இல் யாழ்ப்பாணத்தில் இரண்டு புக்காரா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. கடாபிதான் அவற்றை சுட்டு விழுத்தி னார். இதன்பின், பல ஹெலிகொப்ரர்களையும் சுட்டுவீழ்த்தினார். 

அதாவது, உருவாக்கப்பட்ட புனைகதைகளில் சொல்லப்படுவதைபோல, தலை க்கு மேல் அப்பிளை வைத்து அவர் சுடவில்லை. நிழலை பார்த்து குருவியை யும் சுடவில்லை. தலைக்கு மேல் பறந்த விமானத்தைதான் சுட்டு விழுத்தி னார். கடாபியின் துல்லியமான சூட்டை யாரும் சந்தேகிக்க முடியாது. 

அதற்காக அவரைப்பற்றி அளவிற்கு அதிகமாக- இல்லாத கதைகளை- பரப்ப வேண்டிய அவசியமில்லைத்தானே. இம்ரான்- பாண்டியன் படையணி தளபதி யிலிருந்து கடாபியை, பிரபாகரன் நீக்கினாலும், இருவருக்குமிடையில் இருந்த நெருக்கம் கடைசிவரை குறையவில்லை. 

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவமுண்டு. புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அமைப்பிற்குள் ஏற்பட்ட குழப்பத்தால் பிரபாகரனும் வருத்தத்தில் இருந்தார். 

கருணா பிரிந்து செல்ல அறிவித்த சமயத்தில், பிரபாகரன் மாற்று ஏற்பாடு களிற்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, தனிமையான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டார். அவரது மனம் சோர்ந்திருந்தது. 

தனிமையில் இருக்க வேண்டுமென தோன் றியதால், காட்டுக்குள்ளிருந்த தனது இரகசிய மறைவிடம் ஒன்றிற்கு சென்று விட்டார். தனியாக போகவில்லை. கடாபியையும் அழைத்துக்கொண்டுதான் போனார்! அங்கு நீண்ட நேரம் கடாபியுடன் தனிமையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார். 
கருணா என்ற போராளியில் எவ்வளவு நேசமும், நம்பிக்கையும் கொண்டிருந் தேன், அவருக்கு எப்படியெல்லாம் வாய்ப் புக்கள் கொடுத்தேன் என பழைய நினைவு களையெல்லாம் அசை போட்டிருக்கிறார். 

கடாபி தொடர்பாக உலாவிய கட்டுக் கதை கள், அவற்றின் உண்மைகள் பற்றி கடந்த இரண்டு வாரமாக குறிப்பிட்டிருந்தோம். இதை படித்த பின் வாசகர்களிற்கு, தெளிவு பிறந்திருக்குமென நம்புகிறோம். 

சரி, முக்கியமான விசயத்தை சொல்லாமல் தப்பிக்க பார்க்கிறோம் என்று நினைக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். கடாபியின் முடிவு எப்படி அமைந்த தென்பதை கட்டாயம் குறிப்பிடுவோம். 

ஆனால், இந்தப் பாகத்திலல்ல, அடுத்த பாகம் வரை காத்திருங்கள். 

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: எய்மர் கடாபி சுட்டு விழுத்தியது குருவியை அல்ல; விமானத்தை!- பிரபாகரன் பிஸ்டலை கழற்றி கொடுத்ததற்கும் காரணமுண்டு! Rating: 5 Reviewed By: Thamil