728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 4 September 2019

அம்பகாம சண்டையில் புலிகள் ஏன் தோற்றனர்?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? – 09

அம்பகாமம் களமுனையில் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி தூய தமிழில் கட் டளைகள் வழங்கிக் கொண்டிருந்தார் என்பதையும், அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரபாகரனிற்கு எரிச் சல் வந்ததென்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.


அம்பகாம தாக்குதல் புலிகளிற்கு கிட் டத்தட்ட வாழ்வா சாவா தாக்குதல் தான்.. ஏனெனில், 2006 இன் பின்னர் புலிகளால் குறிப்பிடத்தக்க வலிந்த தாக்குதல் எதனையும் செய்ய முடிய வில்லை. சம்பூரில், முகமாலையில் செய்த தாக்குதல்கள் வெற்றியளிக்க வில்லை. 

அதன் பின்னர் வன்னியில் குறிப்பிடத்தக்கதாக தாக்குதல் எதையும் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம், இராணுவத்தின் இடைவிடாத நகர்வு. புலி கள் ஆசுவாசப்பட, சுதாகரிக்க, ஒன்று திரள அவகாசம் கொடுப்பதில்லையென் பதில் இராணுவம் குறியாக இருந்தது. 

இதுதான் நான்காம் ஈழ யுத்தத்தில் இராணுவத்தின் அடிப்படையான போரு த்தி. வன்னியை நாலா பக்கத்திலும் வளைத்து அவகாசமே இல்லாமல் போரி ட்டு புலிகளை களைப்படைய செய்தது. இதனை புலிகளால் எதிர்கொள்ள முடி யவில்லை. 

நிலப்பரப்பு பெரியதாக இருந்தபோது அணிகளை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்த அவர்களால் முடியவில்லை. வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றி, புலிகளை விசுவமடு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நெருக்கிய பின்னர் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் இது. 

இதில் வெற்றியடைய வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். ஏனெனில் வாழ்வா சாவா நிலையை அப்பொழுதே உணரத் தொடங்கிவிட்டார்கள். தொட ர்ந்து பின்வாங்கி சென்றால், மீளவே முடியாத பொறிக்குள் சிக்கி விடுவோ மென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

விடுதலைப்புலிகளுடனான அதுவரையான போரியல் அனுபவங்களை திர ட்டி, நான்காம் ஈழப்போரில் இராணுவம் புதிய போருத்திகளை பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. 

புலிகள் வலிந்த தாக்குதல் நடத்தினால் தற்காலிகமாக அரண்களை பின் நகர்த்துவது, புலிகளை உள்ளே வரவிட்டு பெட்டி (BOX) அடிப்பது போன்ற பல உத்திகளை கையாண்டு கொண்டிருந்தனர். ஜெயசிக்குறுவில் முன்னேறி வந்த படையினரை ஓயாத அலைகள் மூன்றில் ஒரேயடியாக விரட்டியதை போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காக புலிகள் காத்திருந்தனர். 

ஆனால், இனி அப்படியான சந்தர்ப்பத்தை கொடுத்துவிடக் கூடாதென்பதில் இராணுவம் குறியாக இருந்தது. ஜெயசிக்குறு காலத்தில் விட்ட தவறு கைப்பற் றிய பிரதேசத்தை வெறும் கோதாக- முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யாமல் முன்னரணை மாத்திரம் பலப்படுத்தி வைத்திருந்தது. 

முன்னரணை தகர்த்தால் சரி. உள்ளே ஓட்டை. அதுதவிர, ஆயுதக்களஞ்சியங் களையும் முன்னரணிற்கு நெருக்கமான பேணினார்கள். களஞ்சியத்தை அழி க்க அல்லது கைப்பற்றவும் புலிகளிற்கு வாய்ப்பாக இருந்தது. நான்காம் கட்ட போரில் இவற்றையெல்லாம் இராணுவம் மாற்றியது. 

அம்பகாமத்தில் புலிகள் தாக்கத் தொடங்கிய போது இராணுவம் மூர்க் கமாக எதிர்த்து போரிடவில்லை. சில பகுதி முன்னரண்களிலிருந்து அணி களை பின்னகர்த்தியது. நான்காம் ஈழப்போரில் புலிகள் இராணுவத்தை அதிகம் பின்னகர்த்திய தாக்குதல்க ளில் இதுவும் ஒன்று. ஆனால் இதில் இராணுவம் பின் னகர்ந்ததும் ஒரு தந்திரோபாய நகர்வே. அது மழைக்காலம். 

நினைத்ததைபோல புலிகளால் தாக்குதல் நடத்த முடியவில்லை. ஆட்லறி களை நினைத்த வேகத்தில் நகர்த்த முடியவில்லை. காட்டிற்குள் உருவாக் கப்பட்ட பாதையில் சப்ளை வாகனங்கள் ஆங்காங்கு புதையத் தொடங்கி விட் டன. 

காலநிலையும் புலிகளிற்கு எதிராக நின்றது. பொதுவாகவே புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை செய்வதென்றால் ஆறு மாதத்திற்கு முன்னரே நன்றாக திட் டமிடுவார்கள். அந்த தாக்குதல் இலக்கிற்கு செல்லும் வீதிகளை செப்பனிட்டு, பாலங்களை சரி செய்வார்கள். 

ஆட்லறி, ராங்கியென கனரக ஆயுதங்களை புலிகள் பெற்ற பின்னர், இப்படி யான ஏற்பாடுகளை கச்சிதமாக செய்ய வேண்டியிருந்தது. மூன்றாம் ஈழப் போரில் நடந்த தாக்குதல்கள் அனைத்தையும் இப்படித்தான் புலிகள் திட்ட மிட் டனர். 

அம்பகாம சண்டையில் புலிகள் தோல்வியடைந்ததற்கு முறையான திட்ட மிடலின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்று. புலிகளின் வழக்கமான தாக் குதல்களின்போது, தாக்குதலிற்கு பல மணித்தியாலங்கள் முன்னரே ஆட்ல றிகளை தேவையான நிலைகளிற்கு நகர்த்திவிடுவார்கள். 

ஆனால் அம்பகாம தாக்குதலில் முன்னரணில் சண்டை தொடங்கும்வரை சில இடங்களிற்கு ஆட்லறி மோட்டார்கள் சென்றுசேரவேயில்லை. மழை, சகதி காரணமாக புதைந்து, அவற்றை எடுப்பதில் பெரும் பிரயனப்பட வேண்டியி ருந்தது. 

சண்டையொரு பக்கம், புதைத்த ஆட்லறிகளை இழுத்தெடுப்பது இன்னொரு பக்கமென பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது. வன்னிக்கான ஆயுத மார்க்கங்கள் முடங்கியதன் பின்னர் விடுதலைப்புலிகளின் எறிகணை இருப்பு பெருமளவு தீர்ந்து போய்விட்டது. 

ஓயாத அலைகள் ஒன்றில் முல்லைத்தீவு கைப்பற்றிய தாக்குதலிலிருந்து பின்னால் நடந்த எல்லா தாக்குதல்களிலும் புலிகளின் வெற்றிக்கான காரணங் களில் ஒன்று எறிகணை. தாராளம் மற்றும் துல்லியம்தான் புலிகளின் ஆட்லறி பிரிவின் வெற்றி இரகசியம். 

துல்லியமாகவும் தாராளமாகவும் எறிகணைகளை ஏவினால் எதிரிகள் நிலை குலைந்து போய்விடுவார்கள். ஆனால் கடல் மார்க்க ஆயுத விநியோகம் தடுக் கப்பட்டதன் பின் துல்லியம் மட்டுமிருந்ததே தவிர தாராளம் இல்லாமல் போனது. 

கையிருப்பிலிருந்த எறிகணைகளை மருந்து பாவிப்பதை போலத்தான் பாவி க்க வேண்டியிருந்தது. அம்பகாமத்தில் தாக்குதல் மேற்கொண்டபோது தாராள எறிகணை பாவனை புலிகளிடம் இருக்கவில்லை. 

அது தவிர்ந்த நேரடி சமரில் சூட்டுவலுவில் இராணுவம்தான் மேலோங்கி யிருந்தது. நான்காம் கட்ட ஈழப்போரில் இராணுவம் பாவித்த அடுத்த போருத்தி இது. புலிகளை விட சூட்டுவலுவில் மேலோங்க வேண்டுமென்பது. 

ஆகவே, அம்பகாம தாக்குதலை இராணுவம் சுலபமாக கையாண்டது. ஆரம் பத்தில் சில பகுதி அணிகளை பின்நகர்த்தி, இன்னொரு பகுதியில் விடுதலைப் புலிகளின் அணியொன்றை முற்றுகையிட்டு விட்டது. 

தாக்குதல் திட்டம் வெற்றியளிக்கவில்லை. முற்றுகைக்குள்ளிருந்த அணியை மீட்டு தாக்குதலை கைவிட புலிகள் முடிவு செய்தார்கள். சாள்ஸ் அன்ரனி கட்டளை மையத்தில் உட்கார்ந்திருந்து தூய தமிழில் கட்டளைகளை வழங்கி னார். அது தமிழிற்கு நல்லதே தவிர களத்திற்கு நல்லதல்ல. 

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த பிரபாகரன் உடனடியாக கட்டளை மையத்தில் மாற்றம் செய்ய பணித்தார். பானு கட்டளை மையத்திற்கு மாற் றப்பட்டார். பானுதான் குட்டிசிறி மோட்டார் அணியை உருவாக்கி களங்களில் வெற்றிகரமாக கையாண்டவர்.


களத்திற்கு பின்னால் உள்ள மோட்டார் நிலைகளில் இருந்து துல்லியமாக எறிகணை ஏவுவதற்கு மோட்டார்காரர்கள் மட்டுமல்லாமல், வரைபடம் தயா ரிப்பவர்கள், களத்தில் நின்று இலக்கு குறிப்பவர்கள் என பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப விடயம் அது. அதனை பானு சிறப்பாக உருவாக்கியிருந்தார். 

மூன்றாம் கட்ட ஈழப்போரில் பெரும்பாலும் அவர் மோட்டார் அணிகளைத் தான் வழிநடத்தினார். பிரபாகரனின் உத்தரவையடுத்து, சாள்ஸ் அன்ரனிக்கு பதிலாக பானு கட்டளையிடும் அதிகாரியானார். 

இந்த தாக்குதலில் பகுதி பொறுப்பாளர்களாக ஜெயம், கீர்த்தி, வசந்தன், லோறன்ஸ் உள்ளிட்ட பலர் பங்காற்றினார்கள். இறக்கும்வரை சாள்ஸ் அன்ர னியிடம் களத்தை வழிநடத்த முடியாத பலவீனம் இருந்தது. பின்னாளில் நடந்த கேப்பாப்பிலவு, தேவிபுர சண்டைகளிலும் சாள்ஸ் அன்ரனி நிறைய தடுமாறி, அந்த தாக்குதல்களும் எந்த பலனையும் கொடுக்கவில்லை. 

(அதைப்பற்றி பின்னர் விபரமாக குறிப்பிடுவோம்) ஆனால், அதனை புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. இறுதிவரை அவர்தான் முடிவெடுப்பவராகவும், களங்களை திட்டமிடுபவராகவும் இருந்தார். சடுதியான தோல்விகளிற்கு இது வும் காரணம். 

போரிடும் திறன் குறைந்த புதிய போராளிகள், போதிய ஆயுத தளபாடங்கள் இன்மை, முறையான திட்டமிடல் வழிகாட்டல் இல்லையென எல்லாமும் சேர புலிகளின் வீழ்ச்சி சடுதியானது. அப்படியெடுக்கப்பட்ட சில முடிவுகள் மூத்ததளபதிகள் பலருக்கு பிடிக்காமலும் இருந்தது. 

ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதுபோல மூத்த தளபதிகள் வைத்த யோசனைகள் ஏற்றும்கொள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட இரண்டு சம்பவங் களை குறிப்பிட வேண்டும். அந்த யோசனையை வைத்த தளபதிகள் பால்ராஜ், 
தீபன். அவர்கள் வைத்த யோசனை என்ன?

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அம்பகாம சண்டையில் புலிகள் ஏன் தோற்றனர்?: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? – 09 Rating: 5 Reviewed By: Thamil