தமிழ் கட்சிகள் ஐந்து இணைந்து புதிய ஆவணமொன்றை தயாரித்துள்ள நிலை யில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படை யில் தீர்வு வருமா என்பது எனக்கே சந்தேகமாகத்தான் உள்ளது என தெரிவித்துள் ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
யாழ்ப்பாணத்திலுள்ள செய்தியாளர்க ளிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற் றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகி யோர் இரவு விருந்தளித்து, நட்புரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன் போது, எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த போதே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த கேள்வியை உங்கள் இருவரில் (ரணில், சுமந்திரன்) யாரிடம் எழுப்பு வதென தெரியவில்லை. நான் கேட்கிறேன், யாராவது ஒருவர் பதிலளியுங்கள். ஐ.தே.கவின் அடுத்த ஆட்சியில், தற்போதைய ஆட்சியில் தயாரிக்கப்பட்ட இடைக்கால வரைபின் அடிப்படையில் தீர்வு திட்டம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதில் பங்குபற்றிய தரப்புக்களே (சுமந்திரன்) கிட்டத்தட்ட அதை நிரா கரிக்கும் – அதற்கு மாற்றான- வேறு வடிவமொன்றில் கையெழுத்திட்டுள்ள னர். இடைக்கால வரைபின் அடிப்படையில், அரசியல் தீர்வு வருமா? வராதா? என கேள்வியெழுப்பப்பட்டது.
இந்த கேள்வியையடுத்து, தனக்கு பக்கத்திலிருந்த சுமந்திரனை திரும்பிப் பார்த்து விட்டு, “அதுதான் எனக்கும் மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது“ என்றார் ரணில்.
படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் ஏன் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லையென இன்னொரு கேள்வியெழுப்பப் பட்டபோது,
விசாரணைகளை செய்யும் அதிகாரிகள் பற்றாக்குறைகளால் தான் விசார ணைகளை ஆரம்பிக்கப்படவில்லை, விரைவில் ஆரம்பிப்போம் என பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த பொது தேர்தலில், புதிய ஜனநாயக கூட்டணி 125 வரை யான ஆசனங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகவும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 வரையான ஆசனங்களை வெல்ல வாய்ப்புள்ள தாகவும், இரண்டும் இணைந்து 140 ஆசனங்களை வென்றால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவில் பெற்றுக்கொள்ளலாமென்றும், இதன் பின் புதிய அரசியலமைப்பை உருவாக்கலாமென்றும்