தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணை கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விசாரணை ஒக் டோபர் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்காக விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையிலான குழுவினர் டெல்லியிலி ருந்து இன்று காலை மதுரை வந்தடைந்துள்ளனர்.
அவர்களுக்குப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங் கப்பட்டிருக்கிறது.
அவர்கள் மதுரையில் முகாமிட்டிருக்கும் 4 நாட் களில் முக்கிய பிரமுகர்கள் விசாரணைக்காக ஆஜ ராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இந்த விசாரணையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை யாவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த விசாரணைக் குழுவானது மதுரையில் உள்ள இலங்கை அக திகள் முகாமிலும் விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இந் நிலை யில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த விசார ணையில் ம.தி.மு.க பொதுக் செயலாளர் வைகோ, மற்றும் தமி ழீழ ஆதர வாளர்கள் கலந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏன் நீக்க வேண்டும் என்பது தொடர்பாக தங்களின் கருத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.