வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய் யப்பட்டிருந்ததுடன் அவரது உடல் பாதி தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட் டிருந்தது.
கடந்த 9.10.2019 அன்று இந்த சம்பவம் நடந்தது.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் பலதரப்பட்ட கோணங் களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கொலையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவரை வவு னியா பொலிசார் கைது செய்துள்ளார்.
அத்துடன் அந்நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நபர் தானே தனிநபராக கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி யுள்ளதாக அறியப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதியின் கழுத் திலிருந்த ஒரு பவுண் தங்க சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த அரை பவுண் மோதிரத் திற்காவுமே கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொலை செய்ய திட்டம் தீட்டி நெடுங் கேணிக்கு அழைத்துச் சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் 09.10.2019 அன்று தனது திட்டத்தின்படி கொலை செய்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கொலை சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
சந்தேக நபரை நாளை அல்லது நாளை மறுதினம் வவுனியா நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, தவறான தொடர்பு ஒன்றினால் ஏற்பட்ட முரண்பாட்டில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வந்தது குறிப் பிடத்தக்கது.