யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு பல தமிழ் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி. விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல். எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கோரியே இந்த சந்திப்புக்கள் நடந்தன.
தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக, யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய ரணில், நேரில் உதயன் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு, கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதாக கூறப்பட்ட போதும், அது சில நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றது. ரணி லுடன் அதிக நேரம் சரவணபவன் இரகசிய பேச்சில் ஈடுபட்டார்.
தேர்தலில் அவரது பத்திரிகையை பாவிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் ஈடு பட்டதாக கருதப்படுகிறது.
பின்னர் ரணில் கலந்து கொண்ட உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த பயணங்களில் சிலவற்றில் ரணிலின் வாக னத்திலேயே சுமந்திரனும் பயணித்தார்.
மாவிட்டபுரம் நிகழ்வுகளிற்கு சென்றபோது, மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரனுடன் தனிப்பட்ட பேச்சில் ஈடுபட்டார்.
இரவு யாழ் நகரத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி யின் தலைவர்களை சந்தித்து பேசினார்.