தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக் கூடாது. இன்று எமக்குள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என் பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தனது ஆதரவு யாருக்கு என்று அறிவிக்கவில்லை. இதற்கிடையில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு யாதென சிறீதரனிடம் கேட்ட போது,
2005 ஆம் ஆண்டு நாம் தேர்தலைப் புறக்கணித்தபோது காரணம் நியா யமாது. தமழர்கள் ஆயுத பலத்துடன் நின்று அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்ட போதே விடுதலைப்புலிகளினை பிளவுபடுத்தி தமிழர்களின் பலத்தை பல வீனப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாடம் ஒன்றினை புகட்ட வேண் டிய தேவை இருந்தது. அதனால் தமிழர்களாகிய நாம் தேர்தலைப் புறக் கணித் தோம்.
அப்போது தமிழர்களிடம் ஆயுதபல மும் படையணிகளின் பலமும் இருந் தது. தற்போது தமிழர்களிடம் உள்ள ஒரே பலம் வாக்குகள் ஆகும் அந்தப் பலத் தினை காட்டவேண்டிய தேவை தமிழர்களிடம் தற்போது உள்ளது .
கோத்த பாய ராஜபக் ஷவை ஆதரிப்ப தாக அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக என்பது குறித்தும் நாம் தீர்மானமெடுக்க காலம் உள்ளது.
இப்போது பிரதான வேட்பாளர்கள் தத்தமது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படி யாக முன்வைத்து வருகின்றனர். ஆகவே இன்னமும் சிறிது நாட்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்ற வகையில் நாம் மக்களுக்கு ஏற்ற தீர்மானம் ஒன்றினை எடுப்போம்.
தமிழ் மக்கள் எம்மை பிரதிநிதிகளாக தெரிவு செய்து அரசியல் களத்தில் எம்மை இறக்கியுள்ள நிலையில் எமது மக்களை கைவிட்டு சுயநல அரசியல் செய்ய எம்மால் முடியாது. நாம் எப்போதும் எமது மக்கள் நலன்கள் சார் விடயங்களையே முன்னெடுப்போம்.
கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப் பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக் கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது. இன்று எமக்குள்ள ஒரே யொரு ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை என்பதை மறந்துவிடக்கூடாது என் றார்.