எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், வாக்க ளிப்பு மையங்களிற்கு இன்று (10) வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட வுள்ளது.
எல்பிட்டிய தொழிற்பயிற்சி நிறுவனத் தில் இருந்து கடுமையான பாதுகாப் புடன் உரிய மையங்களிற்கு அனுப்பி வைக்கப்படும் என காலி மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்தள்ளார்.
எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள னர். 47 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடைபெறும்.
அங்கீகாரம் பெற்ற ஐந்து அரசியல் கட்சிகளின் 155 வேட்பாளர்கள் பிரதேச சபையில் 28 இடங் களை கைப்பற்ற போட்டியிடுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலிற்கு முந்தைய இந்த தேர்தல் தேசிய ரீதியில் கவனம் பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது.