பொதுஜன பெரமுனவின் பக்கம் தாவியதாக நேற்று பரபரப்பாக பேசப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர் ப.ஜெயகாந்தனை கட்சியை விட்டு நீக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
இன்று (15) அவர் நேரில் அழைக்கப் பட்டு விளக்கம் கோரப்பட்ட பின்னர், கட் சியை விட்டு நீக்கப்படுவார்.
முன் னாள் வடக்கு ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி யாழ்ப்பாணத்தில் கோட் டாபயவின் தேர்தல் பணிகளில் ஈடு பட்டு வருகிறார்.
முன்னர் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களை அவர் மீள ஒருங்கிணைத்து வருகிறார்.
இதன்படி, சாவகச்சேரியில் நடந்த கூட்டமொன்றில் கோட்டாபய ஆதரவு அணியில் கைகோர்த்துள்ளார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர் பஜெயகாந்தன்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் இன்று யாழிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு ப.ஜெயகாந்தன் அழைக் கப்பட்டுள்ளார். கட்சி நடைமுறைகளிற்கு அமைய, அவரிடம் விளக்கம் கோரப் படவுள்ளதாகவும், அதன் பின்னர் அவரை நீக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிகிறது.
இதேவேளை, அரச வேலையொன்று பெறுவது தொடர்பாக கலந்துரையாட மட்டுமே அங்கு சென்றேன், அந்த கட்சியில் இணையவில்லையென கட்சி தலைமைக்கு நேற்று விளக்கமளித்துள்ளார். ஆனாலும், அதை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் ஏனையவர்களிற்கும் ஒரு பாடமாக அமைய வேண்டு மென்பதால், கறாரான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.