728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 15 October 2019

கடந்தகாலத்தை மறக்கவேண்டுமென்ற பசிலுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி!

கடந்த கால விடயங்களை மறந்து மன்னிக்க வேண்டும் என பசில் ராஜபக்ச கூறியுள்ள கருத்தை நிராகரித்துள்ள சிவாஜிலிங்கம், போர்க்குற்றவாளிக ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பதா இல்லையா என்பதை பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

யாழ் சங்கிலியன் பூங்காவில் தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியி ருந்த எம்.கே. சிவாஜிலிங்கம் மேற் கண்டவாறு தெரிவித்தார். 

வடக்கு ,கிழக்கு தமிழர் தாயக மக்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள போர்க் குற்றவாளியான கோத்தபாய ராஜபக்சவை ஓரங் கட்ட வேண்டும் என்று சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். 

 தமிழ் மக்கள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமக்கு வாக்களிப்பார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரி விக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த விடயம் சாத்தியமற்றது என்றும் தெரி வித்தார். 

அரைகுறை வாக்குறுதிகளை பெற்று சிங்கள தலைமைகளிடம் தமிழ்த் தலை மைகள் ஏமாந்து விடக் கூடாது என்றும் எம்.சிவாஜிலிங்கம் எச்சரித்தார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சிற்றூழியர்களாக பெரும்பான் மையின சிங்களவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறித்தும் எம்.கே. சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டார். 

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்கென தமிழ் கட்சிகள் ஒன்றி ணைந்து கையொப்பமிட்ட ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை உள்ளடக்கப்படாமை குறித்து சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலாவது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் வலி யுறுத்தியுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கடந்தகாலத்தை மறக்கவேண்டுமென்ற பசிலுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி! Rating: 5 Reviewed By: Thamil