பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக புத்தளம் மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005 மே 30ம் திகதி அவரது வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கி மீட்கப்பட்ட விவ காரத்தில் கைது செய்யப்பட்ட அபேசேகர பிணையில் விடுவிக்கப்பட்ருந்தார்.
பிணை நிபந்தனை களை இரண்டு சந்தர்ப்பங்களில் மீறியதாக பொலிசார் நீதி மன்றத்திற்கு தெரிவித்த தையடுத்து அவர் இன்று (17) வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.