728x90 AdSpace

<>
Latest News
Thursday, 17 October 2019

வடமாகாண பதில் ஆளுனராக பேசல ஜயரத்ன!

வடமாகாண பதில் ஆளுனராக, வட மேல் மாகாண ஆளுனர் பேசல ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நடக்கும் நிகழ் வொன்றில் கலந்து கொள்வதற்காக வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், செயலாளர் எஸ்.சத்தியசீலன் ஆகி யோர் பயணம் செய்கிறார்கள். 

பத்து நாட்கள் அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருப்பார்கள். நாளை 19ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை பிரித்தானியாவில் தங்கியிருப்பார்கள். இதன் பின்னர் தனிப்பட்ட விடுமறையில் 23ம் திகதி முதல் 29ம் திகதி வரை கனடா விற்கு செல்லவுள்ளனர். 

ஆளுனர் பத்து நாள் விடுமுறையில் வெளிநாடு செல்வதால், பதில் ஆளு னராக வடமேல் மாகாண ஆளுனர் பேசல ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுனரின் செயலாளரின் இடத்திற்கு, பதில் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வடமாகாண பதில் ஆளுனராக பேசல ஜயரத்ன! Rating: 5 Reviewed By: Thamil