728x90 AdSpace

<>
Latest News
Saturday, 12 October 2019

புதிய நாடொன்றை நோக்கி நகரும் இலங்கை அகதிகள் -கண்டுபிடித்தது ஐ.நா

இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சம் கோரும் நடவடிக்கைகளை அவுஸ்திரே லியா முழுமையாக நிராகரித்துள்ள பின்னணியில், புதிய நாடொன்றை நோக்கி அவர்கள் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலி யாவிற்குள் பிரவேசிக்கும் அகதிகளை உட னடியாக நாடு கடத்தும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, இலங்கை அகதிகள் இந்த நாட்டை நோக்கி செல்லத் தொடங்கியுள்ள னர். 

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மடகஸ்காருக்கும், மொஸாம்பிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள பிரான்ஸிற்கு சொந்தமான La Réunion மற்றும் Mayotte ஆகிய தீவுகள் நோக்கி இலங்கை அகதிகள் அதிகளவில் செல்ல ஆரம்பித் துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை யான காலப் பகுதியில் மாத்திரம் 291 இலங்கையர்கள், குறித்த தீவுகளில் அகதி அந்தஸ்து கோரி தஞ்சமடைந்துள்ளதாக ஐ நா சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், அகதிகள் அந்தஸ்து கோரப்படும் விண்ணப்பங்கள் பிரான்ஸ் அரசாங்கத்தி னால் அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில், பிரான்ஸ் அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் அகதி அந்தஸ்து கோரிய இலங்கையர்கள் குறித்து சற்று நெகிழ்ச்சி தன்மை காண்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் வரை அங்கு சென்ற 120 இலங்கை அகதிகளில் 34 பேருக்கான தஞ்சக் கோரிக்கையை ஏற்க அனுமதி வழங்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களில் 60 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரான் ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 120 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவ தாக தெரிவிக்கப்படுகின்றது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புதிய நாடொன்றை நோக்கி நகரும் இலங்கை அகதிகள் -கண்டுபிடித்தது ஐ.நா Rating: 5 Reviewed By: Thamil