728x90 AdSpace

<>
Latest News
Monday, 14 October 2019

ஜாதகத்தில் வில்லாதி வில்லன் – மந்தனின் மைந்தன் மாந்தி!

மாந்தியின் காரகத்துவம் என்றால் மற்றவரை துன்படுத்தி சந்தோஷப்படு பவன். கேரள ஜோதிடத்தில் முழுக்கமுழுக்க மாந்திக்கு முக்கிய பங்கு கொடுப் பார்கள். 

அவர்கள் மாந்தியின் நிலையை வைத்துத்தான் முக்கியமான பலன் களைச் சொல்வார்கள். தமிழ் ஜோதி டர்கள் ஒரு சிலர் மட்டும் மாந்தியை வைத்து பலன் கூறுகின்றனர். அறி வியல் ரீதியாக பார்க்கும்பொழுது மாந்தி குளிகன் என்பது சனியின் துணைக்கோள் ஆகும். சனிபகவானின் புத்தி ரன் மாந்தி என்றும் மாந்தியின் சகோதரர் குளிகன் என்றும் அழைப்பார்கள். 

சனியை ஆயுள் மற்றும் கர்மகாரகன் என்றும் அவரின் புத்திரனான மாந்தியை மரண காரகன் என்று கூறுவார்கள். மாந்தி என்பவன் மரணம் அல்லது மரணத் திற்கு ஒப்பான பாதிப்பைக் கொடுக்கும் கொடூர வில்லன் என்று கூறலாம். ஏழு கிரகங்களுக்கு அப்பாற்பட்டு ராகு கேது போன்று மாந்தியும் ஒரு நிழல் கிரகம் ஆகும். 

ஜோதிடர்கள் மாந்தி மற்றும் குளிகன் ஸ்புடம் கணித்து அந்தெந்த ராசி கட் டத்தில் அமரவைப்பார்கள். ஜாதத்தில் இதற்கென்று ஒரு கணக்கு முறை உள்ளது. 

ஒரு குழந்தை பகலில் பிறந்தால் குளிகன் என்றும் இரவில் பிறந்தால் மாந்தி என்றும் சொல்லப்படுகிறது.எங்கெல்லாம் மாந்தி இருக்கிறதோ அந்த பாவ காரகத்துவதை கெடுத்து அழித்துவிடும் மாந்தி முக்கிய முக்கிய பாவமான 1, 5, 9 திரிகோணத்தில் இருந்தால் பிறப்பே ஏன் எடுத்தோம் என்று தோன்றும். மூன்று கர்ம பாவங்களைக் கொடுக்கவல்லது. 

மாந்தி 1, 2, 5, 7, 8, 9 பாவத்திலிருந்தால் கடும் தோஷத்தை ஏற்படுத்தும் இதில் சிம்மத்தில் இருந்தால் இந்த தோஷம் குறைக்கப்படும் என்று கூறுகின்றனர் ஏனென்றால் மாந்தி என்பவர் சூரியனின் பேரன் ஆவர். 

ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சிறப்பான வீடு ஆகும். இவற்றில் முக் கியமக பதினொன்று வீடு மாந்திக்குப் பிடித்த வீடு இங்கு மாந்தி அமர்ந்தால் என்ன செய்வார் என்று கீழே பார்ப்போம்.லக்கின பாவத்தில் மாந்தி இருந்தால் என்னவாகும் என்று புராணக் கதைகள் மூலம் பார்ப்போம். இராமாயணத்தில் மாந்திக்கு ஒரு பங்கு உண்டு. 

அதிபலசாலியான இலங்கேஸ்வரன் ராவணன் எல்லா கிரகங்களையும் தன் கைக்குள் அடக்கவேண்டும் என்று நினைத்தான். அவனின் சிவ பக்தி; தவ வலிமையால் கிரகங்களை தன் வசம் கொண்டுவந்தான். இவனைவிட இவன் மகன் பலசாலியாகவும், ஆயுளோடும் இருக்க ஒரு சதி செய்தான். 

தன் மகன் இந்திரஜித் ஜெனிக்கும் சமயத்தில் சனியானவரை வரவழைத்து “என் மகன் ஜனனம் புரியும் நேரத்தில் அவன் ஜாதக கட்டத்தில் உன்னுடைய சிறந்த இடமான 11ல் இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டான்”. சனிக்கு 12ஆம் வீடுதான் மோசமான வீடு என்று ராவணனுக்குத் தெரியும். 

சனியானவர் கர்மாவை தராசு கொண்டு நடக்கும் ஒரு நீதிமான் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார். இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் 11ல் நின்ற சனி தன் ஒரு கால் 12ம் வீட்டின் கால் சென்றதாம். அதைப் பார்த்த இராவணன் கோபதால் தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டி வீழ்த்த; 

அந்த சனியின் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்து லக்கின புள்ளியில் விழுந்ததாம் அது உருவெடுத்து மாந்தியாக மாறியதாம். அந்த லக்கின புள்ளியில் விழுந்த அந்த மாந்தி ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே தந்தார். ராவணனின் மகனுக்கு சரியான தண்டனையை சனியும் மற்றும் மகனான மாந்தியும் சேர்ந்து இந்திரஜித்தின் ஆயுள் குறைவைக் கொடுத்ததாகப் புராணம் கூறப்படுகிறது. 

ஆகமொத்தம் ஜெனன ஜாதகத்தில் மாந்தி இருந்தால் மற்றவர்களை மதிக்க மாட்டார்கள், வீட்டில் தெய்வ சக்தி குடியிருக்காது, முரடர்கள், நல்ல எண்ணம் இருக்காது, மனக்கவலை இருக்கும், வீண் வம்பு வழக்குகள், உடலில் பாதிப்பு ஏற்படுத்தும். இரண்டாம் இடத்தில் மாந்தி இருப்பவருக்கு குடும்பத்தில் நிம்மதி ஒற்றுமை இருக்காது, வாக்கு தவறும், பேச்சு தெளிவாக இருக்காது, 

ஆரம்பத்திலே கல்வி தடைபெறும், பணம் வரும் ஆனால் நிலைக்காது. மூன் றில் மற்றும் நான்கில் மாந்தி இருந்தால் என்னவாகும் என்று பார்ப்போம். கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க கொற்றவனே துணைவனுடன் போரும் செய்வன் வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன் விளம்புகிறேன் நாலினுட விவ ரங்கேளு பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம் பாலனவன் சிலகாலம் வாழ்ந் திருந்து கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே குற்றமில்லை புலிப்பாணி கூறி னேன! 

இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்றவன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதை யும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச்சமர்த்தன், நல்ல விரத ஒழுக்க முள்ளவன் என்பதையும் உணருக। மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக. 

குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேறி டம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பான். அதனால் குற்றமொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். 

இதை நன்கு ஆராய்ந்து கூறுக என்பது இப்பாடல். முக்கியமாக நான்கில் மாந்தி இருந்தால் வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாத மனை தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடத்தில் மாந்தி இருந்தால் புத்திர தோஷம், பிரேத சாபம் ஏற்படும். புத்திரரால் குடும்பத்திற்குப் பாதிப்பு ஏற்படும், மிகச் சிறந்த வீரனாகத் திடமாக; வெகுதன தான்ய சம்பத்துடைவன் வாழ்பவன்,

ஆறில் மாந்தி இருந்தால் துணிச்சலானவர்கள், அந்த ஜாதகரைப் பார்த்தால் எதிரிகள் பயப்படுவார்கள், தீராத கடன் உண்டாகும், பரோபகாரி, புகழுடன் இருப்பார்கள், ஆயுள் உண்டு, மந்திரங்கள் ஜெபிப்பவன் (எந்தமாதிரி மந்திர ஜபம் என்பது நல்லதா கெட்டதா என்று ஆராயவேண்டும்.) ஏழாம் இடத்தில் மாந்தி இருந்தால் திருமணம் தள்ளிப்போகும் அல்லது தடை ஏற்படும், கணவன் – மனைவி உறவு பாதிப்படையும், 

கூட்டு தொழிலில் நஷ்டம் ஏற்படும், வயிற்றுக்குக் கீழ் பாதிப்பு ஏற்படும். ஜாத கர் எதற்கெடுத்தாலும் வீழ்ந்து வருவார்கள் இது மாந்தி 8ம் இடம் இருந்து பாதிப்பு கொடுப்பார். சிலருக்கு நீரால் கண்டம் ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் அதாவது ஒன்பதில் மாந்தி நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன், கண் நிறை தனம் பெற்று மகிழ்வான். 

தந்தையால் எந்த பயனும் இல்லாத குழந்தை தந்தையால் பாதிப்பு அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமை அல்லது தந்தை இல்லாத நிலை ஏற்ப டும். தந்தை வழி பூர்வீகச் சொத்து இழுபறியாக இருக்கும். கடந்த ஜென்ம பாவ கணக்குகளை இந்த ஜென்மத்தில் தோஷங்களை உண்டாக்கும். 

பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் மாந்தி நிற்கப் பிறந்த சாதகன் கருமி யாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். ஜாதகன் பலவிதமாக யோசி க்க கூடியவன், விசித்திரமானவன், கஞ்சன், கடவுள் மீது பிரியம் கொண்ட வர்கள், ஆகமொத்தம் குடும்பத்தில் சந்தோஷம் கூடி இருக்கும். ஜாதகத்தில் 11,12-ல் மாந்தி இருந்தால் என்னவாகும் என்று புலிப்பாணி கூறும் பலன் பார்ப் போம். 

தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத் தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன் யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு யென்மகனே வசியனடா ஜாலக்காரன் வீணென்ற விரயனடா ரசவாதத்தால் விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான் கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே இப்பாடலில் 11ம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான், சிறந்த தனலாபம் உடையவனே. 

இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் தேவதை வசியன் (ஜாலக்காரன்). மாந்திக்கு 11ம் பாவம் நல்லது என்றும். பன்னிரண்டாம் இடத்தில் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன், ரசவாதம் தேர்ந்தவன், குடும்ப நாசம் செய்பவன், 

குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக. மாந்திக்கு 12ம் பாவம் கெட்டது என்றும், இதுதவிர ஜாதகன் 11ம் வீட்டில் பிறப்பவன் அரசனைப் போல வாழ்வான் மற்றும் சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சி, தலைமை பதவி அல்லது அரசு அதிகாரத்தில் இருப்பான், 

தொழில் மூலம் அதிக லாபம் ஈட்டுவான் கிரக இணைவு: மாந்தியுடன் எந்த கிரகம் இணைகிறதோ அதன் உறவுமுறை பாதிக்கப்படும். எடுத்துக்காட்டாக மாந்தியுடன் சூரியன் சேர்ந்தால் அல்லது ஒன்பதாம் இடத்தில் சேர்க்கை பெற் றால் – தந்தைக்கு பிரச்னை அல்லது கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும். 

அதேபோல் சந்திரன் உடன் மாந்தி இணைந்தால் அம்மா அல்லது மாமியாரு க்கு பாதிப்பு. அதுவே சுக்கிரனோடு சேர்ந்தால் மனைவிக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் கணவனை வேறு ஒருவேரோடு உறவை ஏற்படுத்தும். 

பெண்ணுக்கு ஜாதகத்தில் இவ்வாறு இருந்தால் கணவனுக்கு பாதிப்பு மாறு படும். இராகு, கேதுவுடன் சேர்ந்தால் நெருப்பு, விஷம் ஆகியவற்றால் மரணம் அல்லது அதற்கு நிகரான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் கிரகம் மற்றும் பாவக கிரகத்தோடு ஆராயவேண்டும். 

ஜாதகத்தில் மாந்தி எங்கெங்கு பார்க்கிறாரோ தோஷத்தை ஏற்படுத்துவார் ஒரு சில நூல்களில் மாந்திக்கு பார்வை 2, 7, 12ம் இடம் என்று கூறப்படுகிறது. மேலே கூறிய அனைத்தும் அவரவர் கிரக நிலையை, அவற்றின் பலத்தைக் கொண்டும், சுப கிரக பார்வை பலன் பார்த்துக் கூறவேண்டும். 

மாந்தியால் ஏற்படும் மனை தோஷம், புத்திர தோஷம், பிரேத சாபம், திருமணத் தடை, குடும்ப தோஷம் தீர சனிக்கிழமை அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், சனி பகவான் தன் குடும்பத்துடன் காட்சி தரும் திருநறையூர், மற்றும் உங்கள் அருகில் இருக்கும் மாந்தி இருக்கும் கோவிலுக்குச் சென்று உங்களால் முடிந்த பரிகாரங்களைச் செய்து தோஷ நிவர்த்தி செய்யவும்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜாதகத்தில் வில்லாதி வில்லன் – மந்தனின் மைந்தன் மாந்தி! Rating: 5 Reviewed By: Thamil