ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மூன்று முறை சென்று வந்தோம். அங்கு சென்று வந்தபோது, யாருடைய பணத்தில் போய் வருகிறீர்கள் என நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியவுடன்தான், எமக்கு பின் னால் யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களிற்கு வருகிறதா என கேட்டு, பேஸ்புக் விமர்சகர்களிற்கு சூடு வைத்துள்ளார் அனந்தி சசிதரன்.
இன்று (10) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ஜனா திபதி தேர்தலில் சிவாஜி- அனந்தி கூட்டணி களமிறங்கியதன் பின்னணியில் பணக்கொடுக்கல் வாங்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகிறதே என செய்தி யாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு நாங்கள் செல்லும் போது, உங்களிற்கு இந்த பணம் எங்கிருந்து வருகிறதென நீங்கள் எழுப்பியிருக்க வேண்டும். இது வரை மூன்று முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று வந்தோம். பயணம், தங்குமிடம், சாப்பாடு எல்லாமே எமது பணத்தில்தான் ஐ.நாவிற்கு சென்று வந்தோம்.
இதுவரை அந்த பணத்தை யாரும் எமக்கு தரவில்லை. எமக்கு பின்னால் எந்த மாபியாவோ, வல்லரசோ இல்லை.
இம்முறை கூட பயணச்சீட்டு காசு 130,000 ரூபா செலவானது.
ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணம் வெறும் 75,000தான். சுவிசில் நான் தங்கு மிடத்திலிருந்து ஐ.நா அலுவலகத்திற்கு செல்லும் பஸ் டிக்கட் காசு, போய் வர 6 சுவிஸ் பிராங். இம்முறை நான் செலவிட்டது 65 சுவிஸ் பிராங். 200 ரூபாவால் பெருக்கி இலங்கை பணத்தை கணக்கிடுங்கள்.
ஐ.நா சபைக்குள் நாம் சாப்பிடும் ஒரு சான்ட்விச் 10 பிராங். இலங்கை பணத்தில் 2,000 ரூபா.
இப்படித்தான் நாம் ஐ.நாவில் எமது பணியை முன்னெடுத்தோம். எமது ஓர்மம், சாதிக்க வேண்டுமென்ற வெறியில் செயற்பட்டோம்.
யாரிடமும் கைநீட்டி பணம் வாங்கினோம் என்ற பெயர் வரக்கூடாது என்று தான் 2014 மார்ச்சில் இருந்து ஐ.நா சபையில் எனது செயற்பாடு நடைபெறு கிறது.
இதைவிட இன்னும் பல செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். எமது சொந்தப்பணத்தை செலவிட்டே இதையெல்லாம் செய்கிறோம்.
எமக்கு பின்னால் எந்த நாடும், மாபியாவும் இல்லை. எமது சொந்தப்பணத்தி லிருந்தான் கட்டுப்பணம் செலுத்தியுள்ளோம்.
யாழ் பல்கலைகழக மாணவர் கள் நடத்திய பேச்சுக்கள் பற்றி எனக்கு தெரியாது.
நான் அன்றிரவு 10 மணிவரை யாழ்ப்பாணத்தில் நின்றேன். யாரும் எனக்கு அது பற்றி தெரிவிக்கவில்லை. கட்டுப்பணம் செலுத்துவதற்காக கொழும்பு வந்து கொண்டிருந்தபோதுதான், ஒரு நண்பர் தொலைபேசியில் இந்த விடயத்தை சொன்னார். பல்கலைகழக மாணவர்களின் முயற்சியை நான் அறிந்திருக்க வில்லை என்றார்.