வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்ட நிலையில் ஒரு வர் போத்தல் ஒன்றால் தனது கையை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதனால் காயமடைந்த நபரை புளி யங்குளம் பிரதேச வைத்தியசாலை யில் ஏனைய இளைஞர்கள் சிகிச் சைக்காக அனுமதித்திருந்தனர்.
இந் நிலையில் வைத்தியசாலையில் சிகி ச்சை மேற்கொண்ட , வைத்தியருக் கும், குறித்த இளைஞர்களிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள் ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப் பாடு மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார் அங்கு நின்ற இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதுடன் மேலும் இருவர் உட்பட நான்கு பேரைக் கைதுசெய்து செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களைப் பார்ப்பதற்காக இளைஞர்களின் உறவினர்கள் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது பொலிஸார் தம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றும், எமது பிள்ளைகளை பொலி ஸார் கடுமையாகத் தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மது போதையிலிருந்ததாக பொலிசார் கூறு கின்றனர் அப்படியானால் மது போதையில் நிற்பவர்களை அழைத்துச் சென்று பொலிஸார் கடுமையாகத் தாக்குவது சரியா எனவும் அவர்கள் கேள்வி எழுப் பியிருந்தனர்.
இதனால் சற்று நேரம் குறித்த பகுதியில் குழப்ப நிலை ஏற்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.