இதுவரையான ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற அணிலை மரத்தில் ஏறவிட்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்த தேர்தலிலும் மரத்தில் அணி லை ஏறவிட்ட நாய்களாக இருக்கப் போகிறோமா இல்லையா, எமது உரி மையை இலங்கைக்கும், சர்வதேசத் திற்கும் சொல்லப் போகிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளது
மறுமலர்ச்சிக் கான தேசிய மக்கள் சக்தி (பெயர் தெரி யாமல் சிறிது நேரம் தடுமாறினார்) என்ற வேலைத் திட்டத்தின் கீழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்.
சிங்கள மக்கள் தமிழர்களின் உரித்துக்களை வழங்க தயாராக இல்லை.
ஜனா திபதி தேர்தலில் இருந்து விலகும்படி ரெலோ ஒரு வேண்டுகோளை விடுத் துள்ளது. நான் இந்த இடத்திலே கூற விரும்புகிறேன்.
2வது சங்கிலி மன்னன் வீழ்த்தப்பட்டு 400 ஆண்டுகளின் பின்னர், நாங்கள் எங் கள் இழந்த ஆட்சியை மீட்க தீர்மானித்து மீட்க உக்கிரமாக இருக்கிறோம் என் பதை காட்ட, சங்கிலி மன்னனில் சிலையில் மாலையை அணிவித்து, வணக் கம் தெரிவித்து, சங்கிலியன் பூங்காவின் முன்பாக முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம்.
வடக்கு கிழக்கு தவிர, மலையகம் கொழும்பிலும் பிரசாரத்தை நடத்துவோம். நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமானவர்கள் எம்மை ஆதரிக்கி றார்கள். எனக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது என்றார்.