யுத்தம் இடம்பெற்ற போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாக தமிழர் தரப் பினாலும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தினாலும் தொடர்ச் சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்காது அவற்றை மறந்து முன்னோக்கி நகர்வதற்கு முன் வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை நிலைநாட்டு வதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறை வேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தை நடை முறைப்படுத்தப் போவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சகிதம் முதன்முறையான அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் (15) தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடையங்களை தெரிவித்திருக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜ பக்ச தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ச சகிதம் கொழும்பில் முதன் முறை யாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஏராளமான சர்வதேச ஊடகங்க ளின் ஊடகவியலாளர்களும், உள்ளூர் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடக வியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது முக்கியமாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய நாடு கள் சபையினாலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் தொடர்பிலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பல கேள்விகளை தொடுத்தனர்.
ஆட்சிக்கு வந்தால் சிறையிலுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடு விப்பதாக கூறியுள்ளீர்கள்.
எனது கேள்வி என்னவென்றால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் 1 என்ற ஐ. நா தீர்மானத்தின் படி யுத்தக் குற்றம் உள்ளிட்ட பொறுப்புகூறலை எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?
“நாங்கள் ஏற்கனவே அது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது அரசாங்கத்தின் காலத்தில் நாம் முன்மொழிவொன்றை சமர்ப்பித்து அதன்படி முன்னோக்கிச் சென்றோம்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தப் பொறிமுறையை முற்றாக நிராகரித்து புதிய பொறிறையை முன்னெடுத்துச் சென்றது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பொறிமுறையை நாம் முன்னெ டுத்துச் செல்வோம்”.
கேள்வி - பொறுப்புக் கூறல் தொடர்பில் முன்னெடுத்த முக்கியமான விடயம் என்ன?
கோட்டாபய - புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஊடாக நாம் ஒரு ஆய் வினை மேற்கொண்டோம். இதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து பலர் காணாமற்போயிருந்ததை நாம் கண்டுபிடித்தோம். இதன் மூலம் சரியான தகவல்களை கண்டறிந்து அது தொடர்பிலான ஆவணத்தை யும் நாம் சமர்ப்பித்தோம்.
எனினும் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் வெளிநாட்டு அதிகாரிகள் இங்கு வருவதற்கு முன்னர் அவர்கள் அவர்களுக்குத் தேவையான வகையில் எண் ணிக்கையை குறிப்பிட்டு அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.
காணாமல்போனோர் தொடர்பில் தெளிவற்ற பல அறிக்கைகள் காணப்படுகின் றன. இது சுதந்திரமான ஒரு நாடு. எங்களிடம் பல நிறுவனங்கள் காணப்படு கின்றன.
வெளிநாட்டவரின் தலையீடு இன்றி எங்களால் சில விடயங்களை செய்ய முடியும். வடக்கு கிழக்கு மக்களுக்கு பல தேவைகள் காணப்படுகின்றன. அவர் களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உட்பட பல பிரச்சனைகள் காணப் படுகின்றன.
பழைய விடயங்களை பேசி காலம் கடத்த முடியாது. பழைய விடயங்களை மறந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருக்க முடியாது”.
கேள்வி - வடக்கு கிழக்கில் பல விடயங்கள் இருக்கின்றன. எனினும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அவர் கள் கேட்கின்றார்கள்.
குறிப்பாக நீங்கள் இராணுவத்திற்கு தலைமைவகித்த அந்த காலப்பகுதியில். ஆகவே இராணுவத்திடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது எனக் கூற முடியுமா? அவர்கள் எங்கே?
கோட்டாபய - “நான் இராணுவத்திற்கு தலைமைத் தாங்கவில்லை. இரா ணுவத்திற்கு தளாபதி ஒருவர் இருந்தார். இராணுவத்தை இராணுவத் தளபதி வழி நடத்தினார். சரணடைந்த 13784 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அது மாத்திரமல்ல அவர்களில் சிலருக்கு சிவில் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்புகளை வழங்கினோம். அவர்களில் பலர் இராணுவத்திற்கும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஆகவே நான் நினைக்கின்றேன் உலகில் எந்த நாடும் செய்யாத புனர்வாழ்வு பணியை நாம் செய்து முடித்தோம்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் எமது புனர்வாழ்வு பணியை பாராட்டி னார்கள். நாங்கள் எவரையும் தடுத்து வைக்கவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட பலருக்கு அவர்களின் கால எல்லைக்கு அமைய சிலருக்கு ஆறு மாதங்கள், சிலருக்கு ஒரு வருடம் இரண்டு வருடம் என புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளோம்”.
கேள்வி - அப்படியென்றால் காணாமற்போனவர்கள் என யாரும் இல்லை யென்பதா அர்த்தம்?
கோட்டாபய - “இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், காணாமற்போனவர்கள் இரண்டிற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இராணுவத்தில் சுமார் 4000 பேர் அதிகாரிகள், படையினர் உள்ளிட்டவர்கள் காணாமற் போயுள் ளனர். நீங்கள் யுத்தத்திற்கு செல்கையில், மோதல் இடம்பெறுகையில் எமது படையினரின் சடலத்தை எம்மால் எடுத்துச் செல்ல முடியாது.
நான் அதனை பார்த்திருக்கின்றேன். சண்டை இடம்பெறுகையில் நபர்கள் காணாமற்போவார்கள். பெற்றோர் தமது உறவினரின் சடலத்தை பெற்றுக் கொள்ளாத சந்தர்ப்பத்தில் அவர்கள் காணாமற்போயுள்ளதாக கருதுகின்றார் கள்.
இராணுவத்திலும் பலர் காணாமற்போயிருக்கின்றார்கள். எனினும் சரணடைந் தவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள் ளார்கள்”.
கேள்வி - வடக்கு கிக்கில் மக்கள் இராணுவத்திடன் சரணடைந்தவர்கள் மீளத் திரும்பவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறெனின் அவர்கள் பொய்யுரைப்பதாக கூறுகின்றீர்களா?
கோட்டாபய – “சிலர் அவ்வாறு தெரிவிக்க முடியும். அது குற்றச்சாட்டுதான். நாம் இதுத் தொடர்பில் விசாரணை மேற்கொண்டோம். இதற்கென ஆணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் இவர் இவரிடம் ஒப்படைக் கப்பட்டார் என எங்கும் தகவல்கள் இல்லை”
கேள்வி - உங்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு இது தொடர்பிலான பெயர் விபரங்களை வெளியிட்டதே?
கோட்டாபய – “இல்லை. அவ்வாறு நடந்ததாக நான் நினைக்கவில்லை”.
கேள்வி - காணாமற்போனோர் விடயத்தில் பல பொறிமுறைகளை கையா ண்டதாக குறிப்பிட்டீர்கள். புள்ளிவிரவியல் திணைக்களத்தின் தகவல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டீர்கள். இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்ல எவ்வாறான விடயங்களை முன்னெடுக்கப் போகின்றீர்கள்.?
கோட்டாபய – “நீங்கள் எப்போதும் பழைய விடயங்களையே பேசுகின்றீர்கள். நான் எதிர்கால இலங்கைத் தொடர்பில் சிந்திக்கின்றேன்”.
கேள்வி - கடந்தகாலத்தை விடுத்து முன்னேறிச்செல்ல முடியுமா?
கோட்டாபய –“உண்மையில் அது இயலும்”.
கேள்வி - தமிழ்த் தலைவர்கள் எவ்வாறான நிபந்தனையுடன் உங்களுக்கு ஆதரவளித்துள்ளார்கள்?
கோட்டாபய - தோட்டத் தொழிலாளர் நலன் – தோட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு, வடக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு எதிர்காலம் என்பன பற்றி அந்தப்பகுதி தலைவர்களுடன் பேச்சு நடாத்தியுள்ளேன்.
பெருந்தோட்டங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர் பில் நான் தெரிவித்த விடயங்களுக்கு தொண்டமான் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். டக்ளஸ் தேவானந்தாவுடனும் வடக்கின் அபிவிருத்தித் தொடர் பில் கலந்துரையாடினோம்”.
கேள்வி - நல்லிணக்கச் செயற்பாடுகளில் உங்களை புரிந்துகொள்ள முடிய வில்லை. 13 ஆவது திருத்தம் - 13 பிளஸ் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பிலான உங்கள் நிலைப்பாடு குறிப்பாக தமிழ் மக்களுக்கு.
கோட்டாபய - “அனைத்து பிரஜைகளும் கண்ணியத்தோடு வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். கண்ணியத்துடன் எவ்வாறு வாழ முடியும். அதற்கான வாய்ப்பினையும், கல்வி அறிவையும் வழங்க வேண்டும். அனைத்து மக்களையும் அவர்களின் இனத்தையும் மதிக்க வேண்டும்.
எனினும் எதிர்பாராத விதமான 30 வருட யுத்தம் காரணமான ஏனைய பிர தேசங்களைப்போல் அபிவிருத்தி செய்யப்படவில்லை. எனினும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளை முன்னைய மஹிந்த ராஜபக்ச அர சாங்கம் மேற்கொண்டது.
காணி விடுவிப்புத் தொடர்பில் பேசுகின்றார்கள். எனினும் 90 வீதமான காணி களை விடுவித்தது நாமே. 2014 ஆம் ஆண்டுக்குள் வசாவிளான், தொண்ட மனாறு, யாழ் குடா நாடு ஆகிய பிரதேசங்களில் பெரும்பாலான காணிகளை விடுவித்தோம். சில முகாம்களை அரச காணியில் மீளமைத்தோம்.
பலாலி முகாமை சுற்றிய பகுதிகளில் மக்களுக்கு விவசாயம் செய்ய வாய்ப் பளித்தோம். எனினும் இதுத் தொடர்பில் எவரும் பேசுவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.