முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் ஒரு வாக்கு கூட வழங்கக் கூடாது என ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐ.தே. கட்சி தேர்தல் நடவடிக்கை பிரி வில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட் டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரி விக்கையில்,
ஹிஸ்புல்லாவிற்கு வழங்கும் வாக்குகள் மீண்டும் இன மோதல் களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆட்சிக்கு வர வழங்கும் வாக்குகள்.
பசில் ராஜபக்ஷவிடம் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட் டியிடுகிறார் என்பதை ஹிஸ்புல்லா வெளியிட வேண்டும்.
கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் ஒரு தரப்பிலே உள்ளனர். இவர்களுடன் தான் அவரும் இணைந்துள்ளார்.
இனத்தால் வேறுபட்டாலும் இனவாதிகள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
எமது பக்கம் சகலரும் ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க விரும்புவோரே உள்ளனர்.
கருணா, கம்மம்பில, பிள்ளையான் என சகல இனவாதத்தை தூண்டு வோரும் அப்பக்கமே இருக்கிறார்கள்.
இவர்கள் கடந்த காலத்தில் திட்டமிட்டு இன மோதல்களை ஏற்படுத்தினார் களா என சந்தேகம் வருகிறது.
முஸ்லிம் ஒருவரால் ஜனாதிபதியாக வர முடி யாது. சஜித் பிரேமதாஸவிற்கு கிடைக்கும் வாக்குகளை உடைக்கவே இவர் களமிறங்கியுள்ளார்.
இவருக்கு வழங்கும் வாக்குகள் கோட்டபயவிற்கு வழங்கும் வாக்குகளாகவே இருக்கும்.
கோட்டாபயவிற்கு வாக்களிக்குமாறு ஹிஸ்புல்லா மறைமுகமாக கூறி வருகிறார்.20 வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கும் அவருக்கு 15 ஆயிரம் வரை அவரது தொகுதி வாக்குகள் கிடைக்கும். அவரால் முஸ்லிம் களுக்கு அவமானமே ஏற்படும் என்றார்.