எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 பேர் போட்டியிடுவதால் இறுதி முடிவுகள் நவம்பர் 18ஆம் திகதியன்றே வெளி யாகும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள் ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந் திப்பில் அவரை் இதனைத் தெரிவித் தார். அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில்
அரச மற்றும் தனியார் தொலைக் காட் சிகளில் தாம் விரும்பும் கட்சிகளுக்கு சார்பாக பொதுமக்களை திசை திருப் பும் தவறான பிரசாரங்கள் முன்னெ டுக்கப்படுகின்றன.
இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
19 வது அரசியல் திருத்த சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அனை த்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இன்று முதல் ஒரு வார காலம் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகள் உட் பட ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும்.
தன்னிச்சையாக செயற்படும் ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மூன்று வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறிவிடப் படும்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை நவம்பர் 17ஆம் திகதியன்று எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.