யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு சென்று குழந்தையை தவறவிட்டு தாய் பரி தவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர் பில் மேலும்.,
யாழ்ப்பாணம் ஆணைக் கோட்டையை சேர்ந்த பெண்ணொரு வர் தனது 4 வயது பெண் குழந்தையு டன் இருசக்கர வாகனத்தில் யாழ்ப் பாணம் நகர்ப்புற கடையொன்றிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று ஆடையொன்றை வாங்குவதற்கு ஆடைகளை தேர்வு செய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென குழந்தையை பார்த்தபோது குழந்தையை காணவில்லை,
உடனடியாக அந்த கடையில் வேலை செய்யும் ஊழியர்க ளிடம் விசாரித்தபோது, தாங்களும் குழந்தையை காணவில்லையென கூறி யுள்ளனர்.
இதனைக்கேட்ட குறித்த பெண் என் குழந்தை எங்கே என உடனே கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்து விட்டார், பெண்ணின் கதறல் சத்தம் கேட்டதும் அயலி லுள்ளவர்கள் உடனடியாக வந்து என்ன விடயமென கேட்டு நடந்ததை தெரிந்து கொண்டு குழந்தையை தேட ஆரம்பித்தனர்.
பலரும் பல திசைகளில் தேடி சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் சுமார் 50 மீற்றர் தொலைவிலிருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையின் முன்பு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை கண்டுபிடித்து தாயிடம் ஒப்படைத்தனர்.
அதற்கு பின்னரே பரிதவிப்பிலிருந்த அந்த தாய் நின்மதியடைந்துள்ளார். மேலும் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது பெற் றோர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன, இது தொடர்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அப்பகுதியில் இருந்த பலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.