இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள பிரதான முக்கிய இரு வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தா பாய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோ ரின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைளுக்கு கடுமையான நிதி நெருக் கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இரு கட்சிகளும் பணம் திரட் டியவர்கள் அந்த பணத்தில் குறிப் பிட்ட தொகையை சுரண்டிவிட்டதா கவும், ஐக்கிய தேசிய கட்சியில் அதிக பணத் தொகை இவ்வாறு சுரண்டப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரங்களுக்காக தங்கள் பணத்தை செலவழிக்கும் பல முன்னணி தொழிலதிபர்கள் இரு கட்சிகளுக்கும் இந்த முறை நிதி சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரும் முதல் சுற்றில் உடனடி பிரச்சாரத்திற்காக பணத்தை செல வழிப்பதும் ஒரு பிரச்சினையாகும்.
ஆகஸ்ட் 11 ஆம் திகதி தொடங்கிய பிரச் சாரத்திற்காக மொட்டு பெரும் தொகையை செலுத்தியிருந்தாலும், அது அதிக பலனைத் தரவில்லை என கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஐக்கிய தேசிய கட்சி பெரும் சிக்கலில் உள்ளது எனவும் செய்தித்தாள் மற்றும் இணைய விளம்பரங்களுக்கு பெரும் தொகையை செலவிடுகிறது என கூறப்படுகிறது.
இதற்கிடையில் சாதார ணமாக இலங்கையில் எந்தவொரு பிரதான தேர்தலுக்காக அதிகமான நிதி தலையீடுகளை மேற்கொள்ளும் சீனா மற்றும் இந்தியா (எந்தக் கட்சியும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை)
ஆகிய நாடுகள் இம்முறை இறுதி தருணம் வரை யோசனை செய்யும் நிலை காணப்படுவதாகவும், இதுவும் இரு கட்சிகளின் நிதி நெருக்கடிக்கு ஒரு கார ணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நிதியை அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சேகரிக்க முடியாமல் போனதே இன்றைய நெருக்கடிக்கு பிரதான காரணம் என கூறப்படுகிறது.