கடந்த 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத் தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக் குள்ளானதில் அமைச்சரவை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அதன்படி குறித்த சம்பவம் தொடர் பில் விபத்தை ஏற்படுத்தியமைக்கு மேலதிகமாக அதனை மறைக்க போலி ஆவணங்களை உருவாக்கி யமை தொடர்பில் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரைக் கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்செய்து சந்தேகநபர்களாக பெயரிட்டு அவர்களி டம் மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கி இருந்தார்.
தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அவர் இந்த ஆலோசனையை எழுத்து மூலம் வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய் தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இவர்களை கைது செய்ததன் பின்னர், அவர்களிடம் நடத்தும் விசாரணைகளில் போலி ஆவணங்களை தயாரிக்க ஆலோசனை வழங்கிய வர்கள் தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.
ஏற்கனவே இடம்பெற்றுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் அப்போதைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் தொடர்பில் தகவல்கல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட் டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில் ஜெயரத்தினம் ஸ்ரீரங்கா உள்ளிட்ட 6 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிவான் அவர்களை சரீர பிணை யில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர்களின் கட்வுச் சீட்டுக்களும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்காக ஆஜராகிய சட் டத்தரணி ஒருவர் ஊடகவியலாளருக்கு ஸ்ரீரங்காவின் முகத்தை காட்டாது நீதி மன்றத்துக்குள்ளே சட்டத்தரணி அவருடைய வாகனத்தில் ஏற்றி வெளியில் அழைத்து சென்றுள்ளார்.