மாடு முட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந் தார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கட்டுவன் மேற்கைச்சேர்ந்த நாகமுத்து தெய்வேந்தரம் (வயது 71 ) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்த வராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தனது மாட்டை வெளியில் கட்டச் சென்றபோது அது அவரை மோதியுள்ளது.இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தி லேயே மயக்கமடைந்தார்.இதன்போது அப்பகுதியால் சென்ற அயலவர்கள் அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தி யசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தநிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலையில் அவர் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்தார்.
மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தி யசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.