728x90 AdSpace

<>
Latest News
Monday, 14 October 2019

மட்டக்களப்பில் திடீரென அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம்: ஆராய விசேட குழு!

மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது தொடர்பில் ஆராயும் வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத் திக்குழு கூட்டம் நேற்று (14) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடை பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஞா.சிறிநேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகி யோரின் தலைமையில் இந்த கூட்டம் நடை பெற்றது. 

இதன்போது மண்முனை வடக்கு பிர தேசத்தில் இந்த ஆண்டு மேற்கொள் ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர் பில் ஆராயப்பட்டது. இந்த ஆண்டு 348 திட்டங்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படு வதுடன் அதற்காக சுமார் 203 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக முன் னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன் னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட மட்டிக் கழி, வேலூர் ஆகிய பகுதிகள் டெங்கு அபாயமுள்ள பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ளதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தொழு நோயின் தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இது ஒரு தொற்று நோய் எனவும் ஆனால் சிலர் இதனை மறைக்க முற்படுவ தாகவும் சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டது. 

இலங்கையில் அதிகளவான தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தி லேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 28பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு நாவற்குடா, நாவற்குடா தெற்கு, மஞ்சந்தொடுவாய் பகுதியிலேயே அதிகள வான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட் டப்பட்டது. 

சத்துருக்கொண்டான் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளிருலும் விழிப் புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் சுகாதார துறை யினர் இங்கு சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் மக்கள் போதிய அக்கறை காட்டவில்லையெனவும் இதற்கு ஒரு தனிகுழு அமைக்கப்பட்டு செயற்பாடு கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 

அதற்கு அமைய சுகாதார துறையினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து கொண்டுசெல்லப்படும் கழிவுகள் திராய்மடு பகுதியில் சேகரித்து வைக்கப் படுவதனால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் வசிக்காத பகுதியில் காணியொன்றை தெரிவுசெய்து அங்கு வைத்திய சாலையின் கழிவுகளை புதைப்பதற்கு நடவடிக்கையெடுப்பதுடன் அது தொடர் பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மட்டக்களப்பில் திடீரென அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம்: ஆராய விசேட குழு! Rating: 5 Reviewed By: Thamil