பொதுமக்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எமது நோக்கம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரி வித்துள்ளார்.
நாரம்மல வாரச்சந்தை வளாகத்தில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற மக் கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொட ர்ந்தும் உரையாற்றிய அவர், வரலா ற்று சிறப்புமிக்க தம்பதெனிய பகுதி யில் இந் நாட்டில் மீண்டும் சாதாரண பொதுமகனை அரசனாக்கும் சகாப் தத்தை உருவாக்க சஜித் பிரேமதாசவிற்கு வாய்ப்பளிப்பீர்கள் என நான் உறு தியாக நம்புகிறேன்.
தொழில்களை வலுப்படுத்துவதன் மூலம் தம்பதேனியா பகுதியை பொருளா தார ரீதியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்கள் ஆதரவால் நாட் டின் ஜனாதிபதியாக ஆவதாக இருந்தால் சாதாரண பொதுமக்களுக்கு செவி மடுக்க வேண்டும்.
மக்களின் கவலை, கண்ணீர் மற்றும் வலியை அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஜனாதிபதியானவுடன் காபன் வரியை ரத்துச் செய்வேன். எனினும் பொது மக்கள் மீது வரிச்சுமை அதிகரித்துள்ளது.
எனது நோக்கம் பொதுமக்கள் மர ணத்தை நோக்கி கொண்டு செல்வது அல்ல.
அந்த நோக்கம் எனது பிரதிவாதிக்குதான் இருக்கிறது. எனக்கு இல்லை.
16 ஆம் திகதி பொதுமக்களின் வேதனைகளை அறியும் தலைவர் ஒருவர் நியமிக்கப் பட்ட பின்னர், பொதுமக்களை இந்த வரிச்சுமையில் இருந்து விடுவிக்க அர்ப் பணிப்புடன் செயற்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.