ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு அளித்த போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த ஒரு விமர் சனத்தையும் வைக்காமல் நாகரிகமாக நடந்து கொண்டது.
இப்போது கோட்டாபயவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கு வதாக அறிவித்த பின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகி யோரிடம் ஒருவித பதற்றத்தை காணக் கூடியதாக உள்ளது.
இதனை பார்க்கும் போது தோல்விப் பயம் அவர்களிடம் வெளிச்சமாகியிருக் கிறது என இ.தொ.கவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
1983இலே் ஐ.தே.கவின் ஆட்சியிலேயே நாடு முழுவதும் தமிழர்கள் பாதிக் கப்பட்டார்கள், 2009இல் யுத்த பகுதியை தவிர்ந்த மற்ற இடங்களில் தமிழர்கள் நிம்மதியாக இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) அவர் நடத்தி செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 32 கோரிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியி ஏற்க மறுத்த கோரிக்கைகள் எவையென நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் சவால் விடுத்துள்ளார்.
அதற்கான விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு என்னிடமுள்ளது. ஐ.தே.க நாங் கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கிறோம் என எவ்விடத்திலும் நாம் குறிப்பிட்டிருக்கவில்லை.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த கால நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு 8 மாதத்திற்கு வரவேண்டிய 50 ரூபா கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல்கள் காணப்பட்டன என அறிந்திருந்தும் அதனை வழங்குவதாக பொய் வாக்குறுதி கள் வழங்கப்பட்டமை.
அதன்பின்னர் தனியார் தோட்டங்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்கு வதற்கான பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது என பொய்க் காரணங்களை கூறி வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் இயங்கும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை போன்ற பெருந்தோட்ட புறங்களிற்கு கொடுப் பனவை வழங்காமை இவர்களின் நாடகத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவாக நூறு ரூபா வழங்குவதாக கூறி இரண்டு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கிவிட்டு தேர்தலின் பின் மீண்டும் தொழிலாளர்களின் சம்பளத் திலிருந்து அக் கொடுப்பனவு மீண்டும் பறிக்கப்பட்டது.
ஐ.தே.க அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களின் காணி களை புத்தளம் குருநாகல், அநுராதபுரத்தில் வசிக்கும் தங்களின் கட்சி ஆதர வாளர்களுக்கு மலையகத்தில்ன் காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப் பட்டது.
கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது என்றும் தாங்கள் ஆட்சியமைத்தால் சிறுபான்மை மக்களை பாதுகாப்போம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சி அமைத்தது. ஐதேக ஆட்சி அமைத்த பின் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான சிறந்த உதாரணங்கள் பல உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்களில் தாக்குதல் மேற் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைகள் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த போதிலும் அரசாங்கம் அமைச்சர்களை மட்டும் பாதுகாத்துக்கொண்டு கிறிஸ்தவர்களையும் பொது மக்களையும் பாதுகாக்கும் கடமையை அலட்சியப்படுத்தியது.
முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவின் சடலம் நீதிமன்ற உத்தரவை மீறி பலவந்தமாக எரிக்கப்பட்டதால் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
கண்டி- திகன, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களின் கடைகளும் வீடுகளும் காவல்துறை கண்முன்னே அடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
உடைமைகள் அற்ற நிலையில் ஒரு இரவில் நடு வீதிக்கு முஸ்லிம் சமூ கத்தினர் தள்ளப்பட்டார்கள்.ஆட்சி மாற்றத்தின் பின் கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் பெரிய நெருக்குவார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்போதைய ஐதேக ஆட்சி தமிழ் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காமையினால் பெரிய அளவிலான உயிர் சேதங்களையும் பொருள் சேதங்களையும் அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொண்டனர்.
இலங்கை முழுவதும் காணப்பட்ட தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தங்களது உடைமைகளை இழந்த நிலையில் நடு வீதிக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது யுத்த பகுதியில் வாழும் மக்கள் மாத்திரமே யுத்தப் பிரச்சினைக்கும் பாதிப்புக்கும் உள்ளானார்கள்.
ஆனால் யுத்தப் பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்க ளின் பாதுகாப்பு அப்போதைய இலங்கை சுதந்திரக் கட்சி அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன் அசாதாரண சூழ்நிலைகம் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை.
நீண்ட காலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி ஐதேக அரசாங்கத்தினால் வழங்காமையும், இதேபோன்று அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கும் நிறுவனங்களும் பல பில்லியன் கணக்கான தொகை இன்றும் கூட நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் போது ஐ.தே. கவின் பிரமாண்டமான தேர்தல் பிரச்சாரம் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. மிக முக்கியமான பிரச்சாரம் நடைபெற்று கூட எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
ஒரு பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் காணப்படும் ஒரு பிரதேச சபை யினை வெற்றிபெற முடியவில்லை. முழு நாட்டையும் அவர்கள் வெற்றி பெறுவதற்கு சந்தேகமே.
கடந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 160000 வாக்குகளை ஐ.தே.க பதிவு செய்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பெரமுனவும் இணைந்து 154000 வாக்குகளை பதிவு செய்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் 106000 வாக்குகளையும், இலங்கை சுதந்திரக் கட்சி பட்டியலில் 30000 வாக்குகயையும் பெற்றது. இ.தொ.க எக்கட்சியுடன் கூட்டமைத்தாலும் அக்கட்சி வெற்றி பெறும் என்பது இறுதி முடிவு என்ற நிலை உருவாகியது.
தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு அளித்த போது இ.தொ.க அதனைப் பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் வைக்காமல் நகாரி கமாக நடந்து கொண்டது. மாறாக ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவிற்கு தங்களது ஆதரவினை வழங்கு வதாக அறிவித்த பின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களாகிய மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிக் கைகளில் ஒருவித பதற்றத்தை காணக்கூடியதாக உள்ளது.
இதனை பார்க்கும் போது அவர்களின் தோல்வி பயம் வெட்ட வெளிச்சமாக உள்ளது. இ.தொ.கவை நம்பியே தேர்தல் நடவடிக்கைகளை தாங்கள் முன்னெ டுக்க இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளித்தால் இவர்களிற்கு என்ன என்றார்.