முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலா நிதி எம்.நிலக்க்ஷன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மத்திய சுகா தார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையா ற்றிய வைத்திய கலாநிதி உமாசங்கர் தமது பட்டமேற்படிப்பிற்கு வெளிநாடு செல்வதால் இந்த நியமனம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வைத்திய கலாநிதி எம்.நிலக்க்ஷன் தற்போது மல்லாவி ஆதார வைத்திய சாலை அத்தியட்சகராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சமுதாய மருத்துவ இளமானிக் கற்கையைப் பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.