ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து நேற்று, தமிழ் மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சனைகள் பற்றிய ஆவணமொன்றில் கையொப்பமிட்டிருந்தன. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள இந்த ஆவணத்தை, தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் அங்கீகரித்திருந்தன.
எதிர்பார்த்ததை போலவே முன்னணி கூட்டத்தை குழப்பிக் கொண்டு வெளி நடப்பு சென்றது.
நேற்றைய தினம் இரண்டாவது ஆவணமொன்றிலும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் கை யொப்பமிட்டிருந்தனர். இந்த ஆவ ணத்திலும் முன்னணி கையெழுத் திடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
சர்வதேச சமூகத்திடம் விடுக்கும் கோரிக்கைகள் அடங்கிய அந்த ஆவணத் தில்,
வடக்கு கிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தி வடக்கு கிழக்கை உள்ளடக் கிய பிரதேசம் தமிழ் தேசத்தின் மரபுவழி தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் தேசத்தின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டு, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரி மைக்கு உரித்துடையவர்கள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண் டும்.
சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதை சர்வதேச சமூ கம் உறுதிப்படுத்த வேண்டும்.
இறுதிப் பொரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு முழுமையான, பக்கச்சார்பற்ற, சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச நீதிமன்றம் அல்லது சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக நீதிவிசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் உடனடி, அரசியல் பிரச்சனைகளிற்கு தீர்வு காணப்படும் கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆகிய விடயங்கள் உள்ளடங்கியுள் ளன.
இந்த ஆவணத்தை இலங்கை விவகாரத்தில் ஆர்வம் செலுத்தும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.