முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் "அ" னா பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவர் கடந்த எட்டாம் மாதம் 04 ஆம் திகதி புதுக் குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார்.
இவர் ஆர்.பி.கோ. காப்புறுதி நிறுவனத்தில் காப் புறுதி செய்துள்ளமையினால் இவரின் உயிரிழப்பு காப்புறுதி பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நிக ழ்வு ஒன்று புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் நடை பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பு.கவியரன் என்ற இளை ஞனுக்கான ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் வணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
காப் புறுதி நிறுவனத்தின் உத்தியோகத்தர் இ.றாகுலன் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் முப்பத்தி ஏழு இலட்சத்தி இரண்டாயிரத்தி எண்ணூறு ரூபா பெறும தியான காசேலையினை ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் முல்லைத்தீவு முகாமையாளர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சிரேஸ்ட வைத் திய கலாநிதி கை.சுதர்சன் ஆகியோர் பெற்றோரிடம் கையளித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆர்.பி.கோ காப்புறுதி நிறுவனத்தின் முதன் முதல் உயிரிழப்பு காப்புறுதி கொடுக்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.