இம்முறை தீபாவளிப் பண்டிகை முற்பணமாக பெருந்தோட்டத் தொழிலா ளர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கிடைக்கவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத் தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,
பெருந்தோட்டத் தொழிலா ளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகை யில் கம்பனிகள் வழமையாக வழங்கி வரும் 10 ஆயிரம் ரூபா பண்டிகை முற்பணத்துக்கு மேலதிகமாக தேயிலை சபையின் ஊடாக 5 ஆயிரம் ரூபாவை வழங்க அமைச்சரவை பத் திரம் சமர்ப்பிக்கப்பட்டு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இந்தக் கொடுப்பனவை வழங்க முன்வந்துள்ளார்.
எனவே, இம்முறை கம்பனி கள் வழங்கும் 10 ஆயிரம் ரூபா முற்பணத்தோடு அரசாங்கம் தேயிலை சபை யின் ஊடாக வழங்கும் 5 ஆயிரம் ரூபாவோடு மொத்தமாக 15 ஆயிரம் ரூபா பண்டிகைக் கால முற்பணமாக கிடைக்கவுள்ளது.
தொழிலாளர்கள் மிகவும் சந்தோசமாக தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நான் எவ்வளவுதான் செய் தாலும் அதைக் குறை கூறுகின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். என்னால் முடிந்தவரை எமது மக்க ளுக்குத் தேவையானதை செய்துக் கொடுக்கத் தயாராக இருக்கின்றேன் என் றார்.