யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்படும் மாற்று குடிநீர் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
3.6 பில்லியன் ரூபா திட்டத்தை நேற்று (15) அமைச்சரவை அங்கீகாரமளித் துள்ளது.
யாழ் குடாநாட்டிற்கான குடிநீர் திட்டங்கள் பல முன்மொழியப்பட்ட போதும், இறுதியில் ஆளு னர் மாற்று குடிநீர்த் திட்டமென்ற பெயரில் வல்லை குடிநீர்த் திட்டத்தை உருவாக்கினார்.
வல்லை நீரேரியில் மழை நீரை சேமித்து, அரு கில் அமைக்கப்படும் யாழ்ப்பா ணத்தின் பெரிய குளத்திற்குள் நீரை சேமித்து, குடாநாட்டு நீர் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
‘யாழ்ப்பாணத்திற்கான ஒரு நதி’ என்ற தலைப்பிலான இந்த திட்டத்தின் மூலம் வடமராட்சியை சுற்றியுள்ள பகுதிகளின் உவர்த்தன்மையை குறைத்து, விவசாய உற்பத்தியையும் அதகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.