வவுனியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் இன்று, கொல்லப்பட்டு சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியி லுள்ள பற்றைக் காட்டுக்குள்ளிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகு திக்குள் யாரும் நுழைய அனுமதிக் காத பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில்குளம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நின்ற அவர், வவுனியா நகருக்கு ஒருவரை ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் சென்றுள்ளார்.
பின்னர் அவர் காணாமல் போனார்.
இறுதியாக அவரது முச்சக்கரவண்டி கள் ளிக்குளம் பகுதியில் நிற்பதாக ஜிபிஎஸ் தரவில் காண்பித்ததன் அடிப்படை யில் அங்கு நடத்திய தேடுதலில், சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப் பட்டது.
அவர் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படு கிறது.